Sleep Twitter
ஹெல்த்

தூக்க சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் நம் உடலை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா?

Priyadharshini R

ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் நேரத்திற்கு தூங்கவில்லை என்றால் மனித உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது குறித்த மருத்துவர்களின் விளக்கங்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

தூக்கம் நமது அத்தியாவசிய செயல்பாடுகளில் ஒன்று. நமது சூழ்நிலை காரணமாக தூக்கத்தில் ஏற்படும் மாற்றத்தால் உடல் மற்றும் மன நலனை பாதிப்படையும்.

தூக்கத்தால் முதலில் பாதிக்கப்படுவது நமது மூளைதான் , நமது சிந்தனை , நினைவு திறன் ஆகிவற்றை இணைக்கு மூளைக்கு தூக்கம் மிகவும் முக்கியமாகும். தூக்கம் குறையும் போது நமது மூளை மெதுவாக இயங்க தொடங்கும். இதனால் நரம்பு மண்டலங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றது.

தூக்க சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஹார்மோன்கள் அளவு ஏற்றம் இறக்கமாக காணப்படும். இதனால் கடும் மன அழுத்தம் , எடை அதிகரிப்பு ஏற்படும்.

தூக்கம் பாதிக்கப்படும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குறிப்பாக மனிதனின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய தூக்கம் மிகவும் முக்கியமானது.

நேரம் கடந்த தூக்கம், தூக்கமின்மை இதன் காரணமாக மன அழுத்தம் அதிகம் ஏற்பட்டு இதய நோய் கூட வரலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சீரான தூக்க சுழற்சியை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்?

வெதுவெதுப்பான குளியல், புத்தகம் படிப்பது அல்லது ஆழ்ந்த சுவாசம் அல்லது தியான பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

படுக்கைக்கு முன் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதையும், டிவி பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

தூங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குங்கள். உங்கள் படுக்கையறை அமைதியாகஇருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வழக்கமான உடற்பயிற்சி முக்கியம் ஆனால் தூங்குவதற்கு முன்பாக கடுமையான உடற்பயிற்ச்சி வேண்டாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?