இஞ்சி டீ Twitter
ஹெல்த்

பஜ்ஜி, வெங்காய போண்டாவுக்கு நோ! மழை நேரத்தில் சூடாக என்ன சாப்பிடலாம்?

சூடான காபி, இஞ்சி டீ , சுட சுட பஜ்ஜி, வெங்காய போண்டா சாப்பிட்டால் எப்படி இருக்கும்!

Priyadharshini R

பருவ மழை பெய்து வரும் இந்த நேரத்தில் சூடாக எதாவது சாப்பிட வேண்டும் என நம்மில் பலர் நினைப்போம்.

சூடான காபி, இஞ்சி டீ , சுட சுட பஜ்ஜி, வெங்காய போண்டா சாப்பிட்டால் எப்படி இருக்கும்!

அப்படி மலைக்காலத்தில் சூடாக எதையாவது சாப்பிட்டு விடுகிறோம் ஆரோக்கியத்தை மறந்து. மழை பெய்யும் போது நம்மை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

முக்கியமாக இந்நேரங்களில் வெளி இடங்களில் உணவுகள் உட்கொள்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே சமைத்து சாப்பிட வேண்டும். மலைகாலத்தில் என்ன மாதிரியான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்

சூப்

மழை பெய்யும் போது சூடாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். சிலர் நூடுல்ஸ், பிரெட் ஆம்ளேட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவர். இவற்றிற்கு சாப்பிடுவதற்கு பதிலாக, காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடித்தால், உடலுக்கு சத்துகள் கிடைக்கும்.

மூலிகை தேநீர்

பால் சேர்க்காத மூலிகை தேநீர் குடிக்க வேண்டும். மூலிகைகளில் உள்ள மருத்துவ குணங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

எனவே இஞ்சி டீ, எலுமிச்சை டீ, க்ரீன் டீ என்று ஏதேனும் ஒன்றை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குடிக்கலாம்

garlic

பூண்டு

மழைக்காலம் ஆரம்பித்ததும், உடல்நல பாதிப்பு வரக்கூடும். காய்ச்சல், சளி போன்றவை பரவ ஆரம்பிக்கும்.

இதற்கு தினமும் சிறிதளவு பூண்டை பச்சையாகவோ, சூப்பில் சேர்த்தோ அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இவை தொண்டைக்கு இதமாக இருக்கும்.

மஞ்சள்

தினமும் இரவில் சூடான பாலுடன் மஞ்சள் சேர்த்து கலந்து குடித்து வரலாம். மஞ்சள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புத் தரும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?