Obesity NewsSense
ஹெல்த்

எடை குறைப்பு: நாம் செய்யும் தவறுகள் என்னென்ன?

மினு ப்ரீத்தி

உடல் எடையைக் குறைக்க நிறையப் பேர் திட்டமிடுவார்கள். ஆனால், அது தோல்வியைத்தான் தரும். கடைசியில் எடை குறைக்க வேண்டும் என்ற முயற்சியைக் கைவிட்டு விடுவார்கள். எடை குறைப்புப் பயணம் என்பது மிகவும் சுலபமானதுதான். ஆனால், சுலபமான விஷயங்களை விட்டுவிட்டு நிறையப் பேர் கஷ்டமான யுக்திகளைப் பயன்படுத்தி, இறுதியில் பலன் கிடைக்காமல் கவலைப்படுகிறார்கள்.

ஜிம்மில் சேருவது

ஜிம்மில் போய் ஆயிர கணக்கில் பணம் கட்டி விட்டு, டிரெயினர் சொல்வதைச் செய்ய முடியாமல் கை வலிக்குது, கால் வலிக்குது என நின்றுவிடுவார்கள். மேலும் சில ஜிம்களில் டிரெயினர்கள் உடல் எடை குறைக்கவும் சரி, கூட்டவும் சரி புரோட்டீன் பவுடர்களை திணிப்பர். அதை வாங்கிக் குடித்தும் கல்லீரல் பாதித்துச் சிகிச்சைக்குச் செல்பவர்களும் உண்டு. இன்னும் சிலர் கடுமையான உடல் பயிற்சி செய்து, மயக்கம், சோர்வு போன்ற பலவீனங்களும் வரும். ஏன் சமீபத்தில்கூட கடுமையான உடல்பயிற்சியால் ஜிம்மிலே மயங்கி இறந்து போன ஒருவரை செய்திகளில் பார்த்து இருப்போம். உடல் எடையைக் குறைக்க ஜிம் அவசியம் அல்ல..

பட்டினி கிடப்பது

பட்டினி என்றால் என்ன? உணவு இல்லாமல் சாப்பிட எதுவும் இல்லாமல் இருப்பது. ஆனால், இப்படிப் பட்டினி கிடப்பவருக்குப் பசி உணர்வு இருக்கும். ஆனாலும், சாப்பிடாமல் இருப்பது... இதுவும் தவறு. பசி ஏன் எடுக்கும்? உடலுக்கு உடனடி ஆற்றல் தேவை என்பதால்…. அதனால் உடல், பசி மூலம் உணர்த்துகிறது. இப்படிப் பசியைக் கவனிக்காமல் விடுவதும் தவறு. பசித்தால் உணவு உண்பதுதான் சரி.

டயட்டை பின்பற்றுவது

சிலர் ஜி.எம் டயட், பேலியோ டயட், வெஜ் பேலியோ, நான் வெஜ் பேலியோ என விதவிதமாகச் சொல்வார்கள். ஆனால், டயட் முடிந்த நேரம் போய், தட்டில் சாப்பாட்டைக் கொட்டி அப்படியே அதன் மேல் விழுந்துவிடுவர். அந்த அளவுக்குச் சாப்பிடுவது… என்ன பலன் இருக்கிறது என யோசித்துப் பாருங்கள். காலையில் இருந்து மாலை வரை இருந்துவிட்டு, இரவில் தட்டில் குதித்து விட்டால்… எல்லாம் சரியாகி விடுமா என்ன? இதுவும் தவறான முயற்சி.

நல்ல கொழுப்பு உணவுகள்

சிலர் வெறும் சிக்கன், முட்டை, மட்டன், அரிசி வேண்டாம். காய்கறி வேண்டாம் என்பார்கள். ஆனால், சாப்பிட்டு பழகிய நம் நாக்குக்குச் சிறிது கால இடைவேளியிலேயே, அரிசி சாப்பிட வேண்டும் என விருப்பம் வரும். அப்புறம் பக்கெட் பிரியாணியில் போய் குதித்துவிடுவது. இதிலும் தோல்விதான்.

டைம் ஃபிக்ஸ் செய்வது

காலை 8 மணிக்கு சாப்பிடுவேன். மதியம் 1 மணி, இரவு 7 மணி என ஏதோ டைம் ஃபிக்ஸ் செய்து வயிற்றுக்கு உணவு கொடுப்பாங்க.. ஏதோ ஜெயில் கைதி போல… இதுவும் தவறான பழக்கம்தான்.

வெயிட்லாஸ் சென்டர்

நிறைய வெயிட் லாஸ் சென்டர்கள் வந்துவிட்டன. கோல்டு, பிளாட்டினம் என ஸ்கீம்கள் வேறு… சில சென்டர்களில் உங்கள் கொழுப்பை குறைக்கிறேன் என ஊசியும் போடுகிறார்கள். என்ன ஏது என்று தெரியாமல் பலர் இதில் மாட்டிக் கொண்டு பின்னர் இன்னும் பக்க விளைவுகள் அதிகமாகி நோய் வரவைத்துகொண்டு மருத்துவமனைக்கே பணம் செலவாகிறது. இதுவும் தவறான முயற்சி.

இப்படி இன்னும் நிறைய வெயிட் லாஸ் செய்யும் நபர்களிடம் கேட்டால் விதவிதமான முயற்சிகளும் விதவிதமான தோல்விகளும் நிறையக் கதைகளோடு கிடைக்கும். இதெல்லாம் எப்படிச் சரி செய்வது? உண்மையில் எதைச் செய்தால் வெற்றிகரமான வெயிட்லாஸ் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

வெயிட்லாஸ் வெற்றிகரமானதாகச் செய்ய வேண்டியவை

ஒரே ஒரு முயற்சிதான். அதுவும் நம் வாழ்வியலோடு கலந்து இருக்கும் அந்த முயற்சி..

வெயிட்லாஸ் என்பது தனி முயற்சியாக இல்லாமல் அது நம் வாழ்வியலோடு கலந்து இருக்க வேண்டும். வாழ்வியலோடு இயற்கையோடு பிண்ணி இருக்க வேண்டும். உங்கள் வாழ்வியலில் எத்தனை முறை சாப்பிடுறிங்க எனக் கவனியுங்க… உதாரணத்துக்கு ஒரு பட்டியல்.

காலையில் காபி/டீ

காலை டிபன்

11 மணி காபி/டீ வடை

2 மணி மதிய உணவு

அப்பப்பா எதாவது 2-3 பிஸ்கெட், நொறுக்குதீனிகள்

5 மணி காபி/டீ பஜ்ஜி, போண்டா, சாட் ஐடம்ஸ் / ஜூஸ்

9 மணிக்கு டின்னர்

10 மணிக்கு பால்

இப்போது சொல்லுங்கள். எத்தனை முறை சாப்பிடுறீங்க என? தண்ணீரை தவிர நீர்த்த உணவில் எந்த சுவை இருந்தாலும் அதுவும் உணவுதான். உதாரணத்துக்கு இளநீரும் உணவுதான். கிரீன் டீயும் உணவுதான். தேன் தண்ணீரும் உணவுதான் சர்க்கரை தண்ணீரும் உணவுதான். தண்ணீரை தவிர எல்லாமே உணவு... ஜூஸூம் உணவுதான். சின்ன குளோப் ஜாமூன்ணும் உணவுதான். மதிய சாப்பாடு மட்டும்தான் உணவு என்று கிடையாது. ஒரு வெள்ளரிக்காய்ச் சாப்பிட்டாலும் உணவுதான்.

அப்படிப் பார்த்தால் ஒரு நாளைக்கு 7-9 முறையாவது சாப்பிடுகிறீர்கள். ஒரு மனிதருக்கு 8 வேளை பசிக்குமா? அல்லது 3-4 வேளையாவது பசிக்குமா? இல்லவே இல்லை. நம்மைப் போல் உடலுழைப்பு இல்லாதோருக்கு தினமும் ஒரு வேளை பசிப்பதே பெரிய விஷயம். உடல் நம் மீது கருணை காட்டியிருக்கிறது என அர்த்தம். உடனே இப்போது, வீட்டில் உள்ள ஹோம்மேக்கர்ஸ் வருவாங்க, நாங்க அவ்வளவு வேலைகள் செய்கிறோம் என… உடலுழைப்பு என்பது வெறும் சமைத்தல், வீடு சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற விஷயங்கள் மட்டும் அடங்காது. உடலில் உள்ள அனைத்து தசைகளும், மூட்டுக்களும் இயங்குவதுதான் உடலுழைப்பு. அப்படியான வேலைகளை நாம் செய்வதில்லை.

எனவே, வீட்டு வேலை செய்பவர்களும் சரி, ஆஃபிஸ் வேலைகள் செய்பவரும் சரி. உடலுழைப்பு இல்லாதவர்களின் பட்டியலில்தான் வருவார்கள். இவர்களுக்கு ஒருவேளைதான் பசிக்கும் அரிதாக இருவேளை பசிக்கலாம். அவ்வளவுதான்.

இப்போது நீங்கள் உங்களது பசியைக் கவனியுங்கள். பசி எப்படி இருக்கும்? ஒவ்வொருக்கு ஒவ்வொரு மாதிரி உணரலாம். சிலருக்கு சொல்ல தெரியலாம். சிலருக்கு சொல்ல தெரியாது. பலர் வயிற்று எரிச்சல், எதுக்களித்தல், மலச்சிக்கலால் வயிறு கணத்து போய் எரியும் உணர்வைகூட பசி என எடுத்துக்கொள்வார்கள்.

உண்மையில் பசி எப்படி இருக்கும்? பசி கொடுமையானதாக இருக்காது. வலிக்கச் செய்யாது. எரியாது. எதுக்களிக்காது. வயிற்றில் காற்று ஓடாது. வயிறு கணமாவாது. சோர்வு வராது. சோர்வு வந்தால் ஓய்வு தேவை உணவு அல்ல… வயிறு கத்தாது. ‘பசி’ இடதுபக்க வயிற்றில் இருந்து மேல் நெஞ்சு வரை ஏதோ ஒரு உணர்வு தோன்றி, உணவு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தை விதைக்கும். அதுதான் பசி. இந்தப் பசி நம்மைப் போல் உடலுழைப்பு இல்லாதோருக்கு ஒருவேளை வரலாம். கடுமையான உடலுழைப்பு உள்ள கூலி தொழிலாளிகளுக்கு இருவேளை வரலாம்.

பசி எடுத்து சாப்பிட்டால் நாம் ஒரு வேளை சாப்பிடுவோம். அல்லது இருவேளை. இதற்கு மேல் பசிக்க வாய்ப்பே இல்லை. 95% நபருக்கு இது பொருந்தும்.

பசி எப்போது எடுக்கும்?

காலையில் 7மணிக்கு மேல், மதியத்தில், மாலையில் 7 மணிக்குள்… இரவில் பசிக்காது. சூரியன் முழுமையாக மறைந்த பின் பசிக்காது. இது இயற்கையின் தன்மை. இயற்கை ஒருபோதும் தவறு செய்யாது. ஆனால், நாம் இரவு கலாசார ஃபுட் ஸ்டைலில் பழகிவிட்டதால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். வேலையை முடித்துவிட்டு இரவு உணவை பெரும் அளவில் சாப்பிடுகிறோம். மிக மிகத் தவறான செயல். தூங்க செல்பவருக்கு எதற்கு உணவு? காலை, மதியம்தான் உணவில் தேவை உள்ளது. இரவில் அல்ல…

உடல் இளைக்க எப்படிச் சாப்பிட வேண்டும்?

பசித்தால் உங்களுக்கு விருப்பமான உணவை சாப்பிடலாம். சைவமோ அசைவமோ உங்கள் விருப்பம். முக்கால் வாசி வயிறு வரை சாப்பிட்டுவிட்டு நிறுத்துங்கள்.

பின்னர் மீண்டும் எப்போது பசிக்கிறதோ… அப்போ மீண்டும் சாப்பிடுங்கள். மீண்டும் பசிப்பது என்பது அடுத்த நாள்தான். அல்லது 5% பேருக்கு 8-9 மணீ நேரம் கழித்து மிக லேசாகப் பசிக்கலாம். அது ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதும். அதற்கு மேல் அந்த பசி நீடிக்காது. சிலருக்கு இன்னும் ஒரு டம்ளர் நீர் குடித்தாலே பசி பறந்துவிடும். இதைப் பொய் பசி என்பார்கள்.

நடுவில் ஸ்நாக்ஸ், 50 கிராம் பக்கோடாதான், ரெண்டே 2 இட்லிதான், ஹெல்தி ஜூஸ்தான், ஹெல்தி கிரீன் டீதான், ஹெல்தி டிபன் தான் என நடு நடுவே சாப்பிட கூடாது. தாகம் எடுத்தால் தண்ணீர் குடியுங்கள்.

பசித்தால் உணவு சாப்பிடுங்கள். உணவு என்பது பிரியாணியும் உணவுதான் கஞ்சியும் உணவுதான் ஒரு ஆப்பிளும் உணவுதான் கிரீன் டீயும் உணவுதான். அவரவர் வசதி, வாழ்வியலுக்கு ஏற்றபடி உணவை சாப்பிடுங்கள். பசிக்கும்போது மட்டும்… திட உணவோ திரவ உணவோ… உங்கள் விருப்பம்… இப்போ, நீங்கள் ஓரிரு வேளைதான் ஒரு நாளைக்குச் சாப்பிட்டு இருப்பீர்கள். இதுவே போதும் 40 நாளைக்குள் உங்களின் எடை குறைந்துகொண்டே வரும். இதையே நீங்கள் வாழ்வியலாக மாற்றிக்கொண்டால் எடை குறைவதோடு மட்டுமல்லாமல் ஏராளமான நோய்கள் உங்கள் உடலில் இருந்து முற்றிலும் நிரந்தரமாக நீங்கிவிடும். மீண்டும் வரவும் வராது.

காரணம், பசிக்கும்போது சாப்பிடுவதால் தேவையானவை மட்டுமே உடலில் சேர்கிறது. கழிவுகள் மிக மிகக் குறைவு. கழிவுகள் இல்லாத உடலில் நோய்களுக்கு இடமில்லை. கழிவு இல்லாத உடல் ஆரோக்கியத்தின் அறிகுறி. கழிவுகள் இல்லாத உடலில் உடலுறுப்புகள் எல்லாம் சீராக வேலை செய்யும். செரிமான மண்டலம், சுவாச மண்டலம், கழிவு மண்டலம், நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்கும். விளைவு, உங்களுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியம் மட்டுமே.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?