பொங்கல்: குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் கரும்பு யார் சாப்பிடலாமா?- விரிவான தகவல்கள் கரும்பு
ஹெல்த்

பொங்கல்: குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் கரும்பு சாப்பிடலாமா?- விரிவான தகவல்கள்

Antony Ajay R

பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு கரும்பு ஞாபகம் வந்து விடும். 3,4 நாட்கள் விடுமுறை முழுவதையும் கரும்பு கடித்து சக்கையை துப்புவதிலேயே தீர்ப்போம்.

தமிழர் திருநாளை இனிப்பாகக் கொண்டாட கரும்பு இன்றியமையாதது. கட்டுகட்டாக கரும்பை மென்று துப்புவது தான் கொண்டாட்டத்தின் இனிப்பான பகுதியும் கூட.

ஆனால் சில குழந்தைகள் முதல் நாளே நாக்கைப் பொத்துக்கொண்டு மீதி நாட்களில் கரும்பை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பர்.

கரும்பு சாப்பிட்டால் வாய்ப் புண் வரும் - ஏன்?

கரும்பில் சுண்ணாம்பு சத்து அல்லது கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. நாம் சாப்பிடும் போது இது உமிழ்நீருடன் வேதி வினையாற்றுகின்றது.

அந்த சமயத்தில் தண்ணீர் குடிப்பது சூட்டைக் கிளப்பி நாக்கு மற்றும் வாயின் உட்புறம் எரிச்சலூட்டும் கொப்புளங்கள் வரச்செய்யும்.

எனவே கரும்பு தின்றுவிட்டு தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டும்.

குழந்தைகளும் கரும்பும்

கரும்பு, பண்டிகையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்சமாக அமைகிறது.

வைட்டமின் மற்றும் கனிமச் சத்துகள் இல்லை என்றாலும் கரும்பில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.

இவைத்தவிர, ஃபீனால், ஃபிளேவனாய்டு உள்ளிட்ட உடலுக்கு அதிகம் தேவைப்படும் சத்துகளும் கரும்பில் உள்ளன.

ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கரும்பை இந்த சீசன் நாட்களில் உட்கொள்ளத் தவறக்கூடாது.

கரும்பு பல்லுக்கு உறுதியளிக்க கூடியது என்பதனால் குழந்தைகளுக்கு கடித்து சாப்பிட கொடுக்கலாம்.

3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கரும்பு மற்றும் கரும்பு சாறு கொடுக்காமல் இருக்கவே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பெரியவர்களுக்கு கரும்பு

குழந்தைகளுக்கு செங்கரும்பு போலவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெண்கரும்பு நல்லது. இதில் கூட்டு சர்க்கரை உள்ளதால் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.

வெண்கரும்பு என்றாலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் மிகவும் அளவாக உண்ண வேண்டும்.

கரும்பை கடித்து உண்ண முடியாதவர்கள் சாறாக பருகலாம்.

கரும்பில் இருக்கும் ஃபீனால் மற்றும் ஃபிளேவனாய்ட் சத்துகள் புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருக்கும் ஃபிரீ ராடிக்கல்ஸ் உருவாக்கத்தைத் தடுக்கின்றன.

கரும்பு ஜூஸ்

கரும்பின் மருத்துவ நலன்கள்

மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு கரும்பு சாறு கொடுப்பது மருந்தாக பார்க்கப்படுகிறது.

கல்லீரல் நன்கு செயலாற்றவும், செரிமான சுரப்புகள் சுரக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது.

இரத்தத்தில் கொழுப்பை குறைக்கவும், இரத்த உறைவைத் தடுக்கவும் கரும்பு பயன்படுகிறது.

கர்ப்பிணிகள் கரும்பு சாறு சாப்பிடலாமா?

கரும்பு சாறு நீர்ச்சத்தை அதிகரிக்க செய்தாலும் உடலுக்கு சூடு என்பதால் கர்ப்பிணி பெண்கள் பருகுவதை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மருத்துவர்கள் அறிவுரைப் பெற்று கரும்பு வேட்டையில் இறங்குவது தான் கர்ப்பிணிகளுக்கு நல்லது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?