Jasmine Rice  twitter
ஹெல்த்

பிரபலாகி வரும் மணக்கும் மல்லிகை அரிசி : Jasmine Rice சாப்பிடலாமா? | Nalam 360

பெண்கள் தங்களது கர்ப்பக்காலத்தில் முதல் மும்மாத காலத்தில் அடிக்கடி சாப்பிட ஃபோலிக் சத்து கிடைக்கும். குழந்தைக்குத் திட்டமிடும் பெண்களும் இந்த அரிசியை சாப்பிடலாம்.

மினு ப்ரீத்தி

நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் அரிசிதான் பிரதான உணவு. அரிசி சார்ந்த உணவு வகைகளை அதிகமாக உண்ணும் பழக்கத்தில் மக்கள் உள்ளனர். எத்தனையோ வகை அரிசி வகைகள் உள்ளன. அதில் மணக்கும் அரிசியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தற்போது எல்லா நாட்டு உணவு வகைகளையும் சுவைக்கும் மல்டி குசின் ரெஸ்டாரண்ட்டுகள் அதிகரித்து வருகின்றன. எல்லா நாட்டு பாரம்பரிய உணவு வகைகளும் கிடைக்கின்றன. அந்த வகையில் தற்போது பிரபலமாகி வருகிறது ஜாஸ்மின் ரைஸ், அதாவது மல்லிகை அரிசி.

Jasmine Rice

அதென்ன மல்லிகை அரிசி ?

மிக வெண்மையாகவும், அதிக நறுமணம் உடையதாகவும் இருக்கும் ஓர் அரிசி வகை. சமைத்த பின்னர் மிக வாசனையாக, மிருதுவாக, லேசான இனிப்புச்சுவையுடனும் அதிக ஒட்டும் தன்மையுடனும் இருக்கும். சாதாரண 'ஒரைஸா சடைவா' (Oryza sativa) நெல்லில் இருந்து பெறப்படும் அரிசியைவிட நீளம் அதிகமானது.

தாய்லாந்தின் ஜாஸ்மின் அரிசி, பாஸ்மதி அரிசி போல நீளமானதாக இருக்கும். ஆனால் அதிகம் ஒட்டும் தன்மையுடையது. ஸ்டிக்கி ரைஸ் என்கிறார்கள்.

இந்த ஜாஸ்மின் அரிசி தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய பகுதிகளில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது.

Jasmine Rice

மணக்கும் அரிசி உணவு

இந்த அரிசியின் நறுமணத்துக்குக் காரணம், சமைக்கும்போது 2-acetyl-1-pyrroline எனும் வேதிப்பொருள் ஆவியாவதே. இந்த அரிசியின் நறுமணம் சேமித்து வைக்கும் சில மாதங்களில் இல்லாமல் போய்விடும். இதனால் ஒவ்வொரு முறையும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியையே நுகர்வோர் வாங்க விரும்புகிறார்கள்.

பல வண்ண தாய்லாந்து ஜாஸ்மின் ரைஸ்

பல நிறங்களில் வருகின்றன. வெள்ளைதான் பிரபலமானது. மேலும், கருப்பு, ஊதா, சிவப்பு நிறங்களிலே பல வகைகூட வருகின்றன. பழுப்பு நிற அரிசியும் வருகிறது.

பிரவுன் ஜாஸ்மின் அரிசியாகதான் இது விளைகிறது. பிறகு இது உமி நீக்கப்பட்டு வெள்ளையாக்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுவதால் பளிச் வெள்ளையாக மார்க்கெட்டில் கிடைக்கிறது. வெள்ளை ஜாஸ்மின் அரிசியைவிட பிரவுன் ஜாஸ்மின் அரிசியில்தான் சத்துகள் அதிகம்.

பிரவுன் ஜாஸ்மின் அரிசி ஓட்ஸ் போல நறுமணம் வரும். இதில் உள்ள gamma oryzanol எனும் வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதில் விட்டமின் ஏ, பி, பீட்டா கரோட்டீன், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஆகியவை உள்ளன. நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது.

Jasmine Rice

மணக்கும் அரிசியின் சத்துகள்

கால் கப் ஜாஸ்மின் அரிசியில்,

  • கலோரிகள் - 160

  • மாவுச்சத்து - 35 கிராம்

  • நார்ச்சத்து - 2 கிராம்

  • கொழுப்பு - 1 கிராம்

  • சோடியம் - 0 கிராம்

  • சர்க்கரை - 0 கிராம்

  • புரோட்டீன் - 3 கிராம்

மேலும் விட்டமின் பி1, பி6, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீஸ் ஆகியவை உள்ளன.

சிவப்பு, ஊதா, கருப்பு, நீலம் ஆகிய நிறங்களில் வருகின்ற ஜாஸ்மின் அரிசியில் பைட்டோநியுட்டிரியன்ட்ஸ் அதிகமாக உள்ளதால் இதைச் சாப்பிட நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்கும். உடலில் உள்ள செல்கள் பாதுகாக்கப்படுகிறது.

pregnancy

கர்ப்பக்காலத்தில் சாப்பிட நல்லது

ஜாஸ்மின் அரிசியில் ஃபோலிக் ஆசிட் சத்து இருப்பதால், கர்ப்பக்கால பெண்கள் தங்களது கர்ப்பக்காலத்தில் முதம் டிரைமஸ்டெர் எனும் முதல் மும்மாத காலத்தில் அடிக்கடி சாப்பிட ஃபோலிக் சத்து கிடைக்கும். குழந்தைக்குத் திட்டமிடும் பெண்களும் இந்த அரிசியை சாப்பிடலாம்.

பிரவுன் ஜாஸ்மின் அரிசியில் நார்ச்சத்து உள்ளதால் செரிமான சக்தி மேம்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

உடல் உழைப்பு உள்ளவர்கள்

ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க நினைப்பவர்கள், ஜாஸ்மின் அரிசியை அடிக்கடி சாப்பிடலாம். உடனடி எனர்ஜி கிடைக்கும். எடைகூட உதவும். உடலுக்கு சக்தி கிடைக்கும். விளையாட்டு துறை, அதிக உடற்பயிற்சி செய்வோர் இந்த அரிசியைச் சாப்பிட தேவையான எனர்ஜி கிடைக்கும்.

இரும்புச்சத்து உள்ள அரிசி என்பதாலும் பெண்கள் சாப்பிட நல்லது. ரத்தசோகை உள்ளவர்கள் இந்த அரிசியைச் சாப்பிடலாம். மாதவிடாய் காலத்திலும் இந்த அரிசியைப் பெண்கள் சாப்பிடலாம். முடி, நகம் ஆகிய வளர்ச்சிக்கு உதவும் சத்துகள் இதில் உள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?