Menstrual Hygiene Pexels
ஹெல்த்

மாதவிடாய் சுகாதார தினம் : களையப்பட வேண்டிய 5 மூடநம்பிக்கைகள்

Keerthanaa R

மாதவிடாய் சுகாதார தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் உடலியங்கியல் மாற்றம். இதைப் பற்றி அசிங்கப்படவோ, இதை வெறுத்தொதுக்கவோ, அஞ்சவோ தேவை இல்லை. ஆனால், இன்றும் மாதவிடாய் குறித்த பேச்சுக்கள், அது குறித்த சந்தேகங்கள் மக்கள் மத்தியில் சாதாரணமாக இருப்பதில்லை.

வருடம்தோறும் மே 28 ஆம் தேதி, உலக மாதவிடாய் சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் எதிர்கொள்ளும் மாதவிடாய் குறித்த சரியான விழிப்புணர்வு ஏற்படுத்த ஜெர்மன் என் ஜி ஓ, வாஷ் (WASH) எடுத்த முயற்சி தான் மாதவிடாய் சுகாதார தினம்.

Menstrual Hygiene

மாதவிடாய் பற்றிய சரியான அறிவை ஆண்கள் பெண்கள் இருவருக்கும் புகுத்துதல் அவசியம். மாதவிடாய் ஏற்படும்போது பெண்களுக்கு உடல் அளவில் தெம்பு சற்றே குறைவாகவே இருக்கும். வேலைகளைச் செய்ய கடினமாக இருக்கும்.

உடலில் ஏற்படும் மாற்றங்களை விட, மனதளவில், சீக்கிரம் எரிச்சலடைக்கூடிய, கோபமோ, அழுகக் கூடிய நிலையில் தான் மனது இருக்கும். இது ஹார்மோங்களின் மாற்றத்தால் ஏற்படக்கூடியவையே தவிர, மாதவிடாய் முடிவுற்ற பின், இந்த மனநிலை தொடராது. சிலர் அதிக சந்தொஷத்துடனும் காணப்படுவார்கள்

மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகள், உண்மையற்ற விஷயங்களைக் களைந்தாலே இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்

Menstrual Hygiene

மாதவிடாய் புனிதமற்றது


முன்பு குறிப்பிட்டது போல இது ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் உடலியங்கியல் மாற்றம். உடலில் தங்கியிருக்கும் கழிவுகள், மற்றும் உருவாகியிருக்கும் கருவுறாத முட்டைகள் வெளியேறும் ஒரு சைக்ளிக் பிராசஸ். இது அசிங்கமோ, புனிதமற்றது அல்ல.


மாதவிடாய் காலத்தில் துணிகளைப் பயன்படுத்துவது சரியா?


இன்றும் பல கிராமங்களில், மாதவிடாய் காலத்தில் பெண்கள் துணிகளையே பயன்படுத்துகிறார்கள். இது முற்றிலும் சுகாதாரமற்ற பழக்கமாகும். சானிட்டரி நாப்கிங்கள், டாம்பான், மென்ஸ்ட்ருவல் கப்ஸ் பயன்படுத்துதல் அவசியம். டாம்பான், மென்ஸ்ட்ருவல் கப்ஸ் உபயோகிக்கும் முன்பு, மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனை கேட்பது அவசியம்

Menstrual Hygiene

பி எம் எஸ் என்பது பொய்

ப்ரீ மென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம் எனப்படும் பி எம் எஸ், பெண்களுக்கு மாதவிடாய் துவங்க சில நாட்கள் அல்லது ஒரு வாரம் முன்பு ஏற்படும். இந்த நேரத்தில், பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே எமோஷனலாக இருப்பார்கள். இதன் காரணமாகத் தான் எளிதாக, சின்ன சின்ன விஷயங்களுக்கும் எரிச்சலடைக்கூடிய, கோபமோ, அழுகக் கூடிய நிலையில் மனம் இளகியிருக்கும்.

இது போன்ற மனநிலை பொய் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், இவை அறிவியல், மருத்துவ ரீதியாக, நிகழக்கூடியவை தான் என்பது மருத்துவர்கள் கருத்து.

பி எம் எஸ் பொய் என்று யாரேனும் சொன்னால் இந்த விளக்கத்தை நீங்கள் கொடுக்கலாம்!

மாதவிடாய் காலத்தில் தெய்வ வழிபாடு தவறா?

மாதவிடாய் என்பது புனிதமற்றது என்பது எவ்வளவு பொய்யோ, இதுவும் கிட்டத் தட்ட அப்படித்தான். இன்றும் கோவில்களுக்குள், ஏன் வீட்டின் பூஜயறைக்குள்ளுமே பெண்கள் செல்வதில்லை. இது மாற்றிக்கொள்ள நமக்கு இன்னும் கொஞ்சக் காலம் ஆனாலும், தெய்வத்தை வழிப்பட நினைத்தால், அது தவறில்லை. மாதவிடாய் காலம் என்பதால், பெண்கள், அசிங்கமோ, தீண்டத் தகாதவர்களோ அல்ல என்பதை உணரவேண்டும்.

Menstrual Hygiene

மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி நோ!

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உடற்பயிற்சி அவசியமாகிறது. மாதவிடாய் காலத்தில், அதிக பாரங்கள், உடலுக்கு அதிக வலி கொடுக்காத, லைட்டான பயிற்சிகளைத் தாராளமாக மேற்கொள்ளலாம் என்கிறது மருத்துவத் துறை.

இவை அனைத்துடன் ஆரோக்கியமான உணவுகளையும் உட்கொள்ளுதல் அவசியம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?