கோடைக் கால பானங்கள் twitter
ஹெல்த்

வெயில் தாக்கத்தால் வரும் பாதிப்புகளைக் குறைக்க உதவும் பானங்கள்!

மினு ப்ரீத்தி

இளநீர்

எந்தவித கெமிக்கல்களும் இல்லாத இயற்கை பானம். வெயிலில் உங்கள் உடலின் தண்ணீர் அளவைப் பராமரிக்கும். வெயில் காலத்தில் எலக்ட்ரோலைட்ஸை உடல் இழக்கும். இதை ஈடுகட்ட, சரிசெய்ய இளநீர் குடித்தாலே போதுமானது. வைட்டமின்ஸ், மினரல்ஸ் உள்ளதால் வெயில் தாக்கத்திலிருந்து இழந்த எனர்ஜியை மீண்டும் பெற முடியும்

இளநீர்

நுங்கு

வெயில் காலத்தில் வருகின்ற முக்கியச் சரும பிரச்சனையான, வியர்க்குருவை வராமல் தடுக்கும். சரும பிரச்சனைகள் அனைத்துக்கும் நுங்கு நல்ல தீர்வு தரும். அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நுங்குவை சாப்பிட்டால் உடல் குணமாகும். இன்னும் சிலர் இந்த நுங்குவை லிவர் டானிக் , வெயில்காலப் பாதுகாவலன் என்றெல்லாம் கூறுகின்றனர்.

நுங்கு

கற்றாழை ஜூஸ்

வெயிலால் இழக்கும் எலக்ட்ரோலைட்டை திரும்பப் பெற கற்றாழை ஜூஸை கூட குடிக்கலாம். வெயில் காலத்தில் பெண்கள் அவசியம் குடிக்க வேண்டிய பானம். ஆண், குழந்தைகள் கூட குடிக்கலாம். வெயில் காலச் சிறுநீர் தொந்தரவுகளைத் தலைதூக்கவிடாமல் பாதுகாக்கும். கர்ப்பப்பை சூட்டைக் குறைக்கும்.

அனைத்து பழ வகை ஜூஸ்

அனைத்துப் பழ வகைகளும் உடலுக்கு நல்லது. சம்மர் சீசனில் விளைகின்ற பழங்கள், நமக்கானவை. இது சூடு, குளிர்ச்சி எனப் பிரித்துப் பார்க்க வேண்டாம். அந்த சீசனில் விளையும் பழங்கள் அந்தந்த சீசனின் நோய் தாக்கத்தைக் குறைக்கவே பயன்படும் என்பதால் சீசனல் பழங்களை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸாகக் குடிக்கலாம்.

பழ வகை ஜூஸ்

நீராகாரம்

பழக்கஞ்சி, நீராகாரம் என்பார்கள். உடலுக்குப் புத்துணர்ச்சியும் குளிர்ச்சியையும் கொடுக்கும். ஆயுள் அதிகம் உள்ளவர்களின் உணவாக, நீராகாரம் சொல்லப்படுகிறது. வாத நோய்கள், செரிமானக் கோளாறை நீக்க உதவுகிறதாம். தேநீருக்கு பதிலாக நீராகாரம் குடிப்போருக்கு, உடல் அமிலத்தன்மை அடையாமல் ஆல்கலைனாக வைத்துக்கொள்கிறது. சம்மர் சீசனின், பாரம்பரிய உணவு இது.

நீராகாரம்

கூழ்

கம்பங்கூழ், கேப்பக்கூழ் என ஒரு சொம்பு நிறையக் குடித்துக் காலை உணவை முடித்துக் கொள்வார்கள். உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலில் தேங்கியுள்ள அமிலத்தை நீக்கும். ஒருநாளைக்குத் தேவையானப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். சம்மர் சீசனில் இது போன்ற நன் முன்னோர் பயன்படுத்திய உணவுகளை உண்ணும்போது வெயில் கால நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

பானகம்

எலுமிச்சை - 1

வெல்லம் - ஒரு கைப்பிடி

சுக்கு பொடி - ½ டீஸ்பூன்

ஏலம் பொடி - ¼ டீஸ்பூன்

தண்ணீர் - 500 ml

புதினா/ துளசி - 4 இலைகள்

வெல்லத்தை ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் வைத்து கரைக்கவும். அதில் எலுமிச்சை சாறு, சுக்கு பொடி, ஏலப்பொடி சேர்க்கவும். பின் மொத்த தண்ணீரையும் சேர்த்து நன்கு கலந்து வடிக்கட்டுவும். மேலே, 4 புதினா, 4 இலைகள் சேர்த்துக் குடிக்கலாம்.

பானகம்

சப்ஜா விதைகள் கலந்த சர்பத்

ஊறவைத்து உண்ண கூடிய சப்ஜா விதைகளை, ஜூஸ், சர்பத், இளநீர் போன்ற இனிப்பு சுவை தரும் பானங்களில் சேர்த்துச் சாப்பிடலாம். ஆயுர்வேதம், சீன மருத்துவத்தில் கூட சப்ஜா விதைகள் மருந்தாகிறது. உடல் எடையை குறைக்க, உடல் குளிர்ச்சியாக, மலச்சிக்கல் தீர, நெஞ்செரிச்சல், எதுக்களித்தல் நீங்க சம்மர் சீசனில் சப்ஜா விதைகளைப் பயன்படுத்துங்கள்.

பாதாம் பிசின் கலந்த சர்பத்

Natural body coolant எனப் பாதாம் பிசினை சொல்கிறார்கள். உடலைக் குளிர்ச்சியாகிறது. அல்சர், அசிடிட்டி, வயிற்று எரிச்சல், மலச்சிக்கல், மூலம் போன்றவற்றின் தாக்கத்தைக் குறைத்து குணமாக்க வழிவகுக்குகிறது.

பாதாம் பிசின்

ஜிகர்தண்டா

மதுரை ஊர் சேர்ந்த பானம். பாதாம் பிசின் கலந்த நன்னாரி சர்பத் இன்னும் சில குளிர்ச்சியான பொருட்கள் கலந்த பானம். கல்லீரலுக்கு நல்லது. தற்போது மதுரை தவிர மற்ற ஊர்களிலும் கிடைக்கின்றன. இந்த வெயிலை தணிக்க வாங்கிப் பருகுங்கள்.

ஜிகர்தண்டா

பதநீர்

பதநீர் பனையில் இருந்து கிடைக்கும் பானம். வெயில் காலத்தில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணமாக்கும். வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். வெப்பக்கழிச்சல், சீதக்கழிச்சல் குணமாகும். மூலச்சூடுகூடச் சரியாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?