மூலம் Twitter
ஹெல்த்

மூலம் : ஆரம்ப கட்டத்தில் வீட்டிலிருந்தே குணப்படுத்தும் சில வழிமுறைகள் | Nalam 360

மொத்த உடலையும் மனதையும் முடக்கிவிடும் அளவு வலியும் அசௌகரியமும் தரக்கூடிய இந்த மூல நோயியலிருந்து ஆரம்பக்கட்டத்திலேயே சில வீட்டு வைத்தியங்கள் மூலம் விடுதலை பெறலாம்.

Antony Ajay R

உச்சி முதல் பாதம் வரை நம் உடலெங்கும் நோய்கள் பல வர தான் செய்கின்றன. ஆனால் சில உறுப்புகளில் நோய் வந்தால் அவதிகள் இரண்டு மடங்காகுகின்றன. அதிலும் மிகக் கொடியது ஆசன வாயில் வரும் மூல நோய். மொத்த உடலையும் மனதையும் முடக்கிவிடும் அளவு வலியும் அசௌகரியமும் தரக்கூடிய இந்த மூல நோயியலிருந்து ஆரம்பக்கட்டத்திலேயே சில வீட்டு வைத்தியங்கள் மூலம் விடுதலை பெறலாம். அதென்னென்ன வைத்தியங்கள்? என்பதை இந்த கட்டுரையில் காணலாம் அதற்கு முன்னர் மூல நோய் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

மூலத்தை ஏற்படுத்தும் காரணிகள்...

பெருங்குடல் முடியும் பகுதியான ஆசன வாயைச் சுற்றி மிருதுவான 'குஷன்' போன்ற தசை அமைப்பு காணப்படுகிறது. ஆசனவாயில் தொடர்ந்து அழுத்தம் ஏற்பட்டால் இந்தத் தசைப்பகுதி வீக்கமடையும். வலியை ஏற்படுத்தும் இந்த வீக்கத்தையே 'மூலம்' என அழைக்கிறோம். மூல நோய் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசியவும் வாய்ப்புள்ளது. நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் அதிக அழுத்தம் கொடுத்து மலம் கழித்தல் ஆகியவை மூல நோய்' ஏற்பட முக்கிய காரணங்களாகும். கர்ப்பம், அதிக பளு தூக்குதல் மற்றும் நாட்பட்ட வயிற்றுப்போக்கு ஆகியவையும் மூல நோயை ஏற்படுத்த வாய்ப்புண்டு, வயது ஆக ஆக மூலநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

ஆசன வாயைச் சுற்றி எரிச்சல், அரிப்பு, வலி, இரத்தக் கசிவு மற்றும் அடைப்பு ஏற்பட்டுள்ளது போன்ற உணர்வு - இவையெல்லாம் மூல நோயின் அறிகுறிகளாகும். இதே போல ஆசன வாய்ப் பகுதியில் சிலருக்குப் புண்கள் வரலாம். இதைப் பௌத்திரம் (Fistula) என அழைக்கிறோம்.

மூல நோயில் நான்கு வகைகள் உள்ளது

உட்புற மூலம்

குத கால்வாயின் ஆழத்தில் உண்டாவதால் இதைப் பார்க்க முடியாது. பெரும்பாலும் இவை தானாகவே மறைந்துவிடக்கூடும். இதனால் மலம் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகலாம். இரட்தக்கசிவு ஏற்படலாம். வலி அசௌகரியம் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

நீடித்த மூல நோய்.

இது மலவாய் பகுதியில் வீக்கம் மற்றும் மலவாய் ஒட்டிக்கொள்ளுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாக்கலாம். மலவாய் ஒட்டிக்கொள்ளுதலுக்கேற்ப மருத்துவர் மூல நோய் தீவிரத்தை முடிவு செய்வார்.

வெளி மூலம்

உடலிலிருந்து மலம் வெளியேறும் இடமான மலவாய் பகுதியில் உண்டாகும் மூலம். சில நேரங்களில் மலவாய் பகுதியில் கட்டிகள் உண்டாகலாம். இது உட்காரும் போதும் உடல் செயல்பாடுகள் அதிகரிக்கும் போதும் அசௌகரியத்தை உண்டாக்கலாம்

த்ரோம்போஸ்ட் மூல நோய்

உடல் திசுவில் இரத்தக் கட்டை கொண்டிருக்கும். அதீத வலி, வீக்கம், மூலம் ஏற்பட்ட இடத்தை சுற்றி இரத்தம் கட்டிய நிறம் என்று இருக்கும்.

மூலத்தை அடக்கும் வீட்டு வைத்தியங்கள்

தொட்டிக் குளியல்

வெதுவெதுப்பான நீரால் பாத் டப்பை நிரப்பி அதில் 10 நிமிடங்கள் வரை பிறப்புறுப்புக்கள் நனைய அமருங்கள். மிதமான சூட்டில் இருக்கும் நீர் குத தசைகளுக்கு ஓய்வு தந்து இதமாக வைத்திருக்கிறது. இதனால் அரிப்பும் குறையும்.

தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்ய வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் விரைவாகப் பலன் கிடைக்கும். இந்த குளியலின் போது தண்ணீரில் சோப்போ அல்லது லிக்விடோ கலக்கக்கூடாது. குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்பு பகுதிகளை மெதுவாக மெல்லிய துணியில் ஒற்றி எடுக்கவும்.

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில் என்னும் தேயிலை எண்ணெய் 3 துளிகள் எடுத்து , 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து பருத்தியை நனைத்து மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் அந்த பஞ்சை கொண்டு துடைக்க வேண்டும். இது ஒரு எளிமையான வழிமுறை. சருமத்தில் உண்டாகும் அரிப்பு மற்றும் அழற்சியைப் போக்கும் அற்புதமான மருந்து இந்த தேயிலை எண்ணெய். இது ஆன் டி மைரோபியல் பண்புகளைக் கொண்டிருப்பதால் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தமாகவும் கிருமிகள் அற்றதாகவும் வைத்திருக்கச் செய்யும்

கற்றாழை

கற்றாழையை வீல் வாக்கில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை மஞ்சள் திரவம் போகும் வரை நீரில் ஊறவைக்கவும். பின்னர் அதன் ஜெல்லை எடுத்து பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

அந்த ஜெல்லை மலவாய் பகுதியில் தடவும் போது கற்றாழை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூல நோயிலிருந்து நிவாரணம் பெற உதவுகின்றன. மூல நோய் வீக்கத்தால் உண்டாகும் வலியைக் குறைக்கக் கற்றாழை உதவக்கூடும்.

கற்றாழையைச் சாறு எடுத்தும் குடிக்கலாம். கற்றாழை மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்தும் சரி செய்ய உதவும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை கற்றாழை ஜெல் தடவி வந்தால் பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்க்காய் எண்ணெய் மூல நோயால் உண்டாகும் எரிச்சல் மற்றும் அரிப்புத்தன்மையில் இருந்து நிவாரணம் பெற உதவும். தேங்காய் எண்ணெய்யை விரலில் நனைத்து மூலம் ஏற்பட்டுள்ள இடத்தில், முக்கியமாகக் கட்டி இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும்.

குத பகுதியில் வலி அல்லது கட்டிகள் போகும் வரை நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை மூலக்கட்டிகள் ஏற்பட்ட இடத்தில் தடவி வர வேண்டும். தொடர்ந்து இதைத் தடவி வந்தால் பலனை விரைவில் பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய் மிகச் சுத்தமானதாக இருக்க வேண்டியது அவசியம்.

பூண்டு

மூல நோய்க்குப் பூண்டு அருமையான மருந்தாகச் செயல்படும். காரத்தன்மை கொண்ட பூண்டை நீரில் போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை பிரிட்ஜில் வைத்துக் குளிர்விக்க வேண்டும், வெள்ளை துணி ஒன்றை அந்த நீரில் போட்டு ஊற வைத்து எடுத்து ஆசன வாய் பகுதியில் 10 நிமிடங்கள் வரை ஒற்றி எடுக்க வேண்டும்.

இப்படி ஒரு மணிநேரம் செய்தால் ஆசனவாய் கடுப்பு நீங்கும்

பூண்டில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன் டி பையாட்டிக் பண்புகள் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து வேகமாக நிவாரணம் அளிக்கச் செய்கிறது.

கருஞ்சீரக எண்ணெய் மற்றும் வினிகர்

கருஞ்சீரக எண்ணெய் மற்றும் வினிகர் ஒரு டீஸ்பூன் எனச் சம அளவு எடுத்துக்கொண்டு நன்றாகக் கலந்து மூலம் பாதித்த பகுதிகளில் தடவிவிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கருஞ்சீரக விதை எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளவை. ஆண்டி ஆக்ஸிடண்ட், அனால்ஜெசிக், நோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளவை. இது செரிமான இயக்கத்தை மேம்படுத்தும் என்பதால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.

நார்ச்சத்து கொண்ட உணவுகள்

நார்ச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வதன் மூலத்திலிருந்து மெதுவாக விடுதலை பெறலாம். நார்ச்சத்து மிக்க உணவுகள் மலம் கழிப்பதை எளிதாக்குகின்றன. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவை மூலத்தைத் தீவிரமாகாமல் தடுக்கச் செய்யும்.

இந்த வீட்டு வைத்தியங்கள் மூலத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கே. மூலம் தீவிரமானாலோ, அதிக அசௌகரியத்தை ஏற்படுத்தினாலோ மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

வருமுன் காப்பதே சிறந்தது

மும்மரமாகச் சுற்றிச் சுழல்பவர்களுக்கு மூல நோய் மற்றும் பௌத்திரம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதிக உடல் உழைப்பு இல்லாமல் ஓரிடத்திலேயே உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கும், செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் பின்னாளில் மூல நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உற்சாகமான நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ், தாகத்தை அடக்காமல் நீர் அருந்துவது, வாழைப்பழம் உண்பது, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது மூல நோய்க்கான சிறந்த வாழ்வியல் தீர்வுகளாக அமைகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?