பூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வீசும் எனக் காரணம் சொல்லி பலர் பூண்டை ஒதுக்கிவிடுவர். ஆனால், இப்படி ஒதுக்குபவர்கள் இறுதியில் பெரிய நோய் ஏற்படுத்தும் பாதிப்பில் சிக்கி கொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. பூண்டில் உள்ள மருத்துவ குணம் பெரிய நோய்களின் பாதிப்பில் இருந்து காக்கிறது என்பதை யாரும் மறக்க வேண்டாம். பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன எனப் பார்க்கலாமா
பூண்டு, வெங்காயச் செடியில் குடும்பத்தத்தைச் சேர்ந்தது. ஒரு பூண்டின் பல்ப்க்குள் 20-25 உதிரிகள் வரை இருக்கும். உலகம் முழுக்க இந்தப் பூண்டை சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். காரணம், இதன் சுவையும் மணமும்.
எகிப்த்தியர்கள், பாபிலொனியன்ஸ், கிரீக்ஸ், ரோமன்ஸ், சைனீஸ் போன்ற உலகம் முழுக்கப் பூண்டை சேர்க்கும் சமையல் முறை பரவலாக இருந்து வருகிறது.
நறுக்கினால், நசுக்கினால், இடித்துச் சேர்ப்பதால், மென்று சுவைத்தால் பூண்டில் இருந்து வெளிவரும் சல்ஃபர் காம்ப்பவுண்ட்ஸ் நன்மைகளைச் செய்கிறது.
பூண்டை உடைத்து அதில் உள்ள ஒரே ஒரு சின்ன உதிரி பூண்டில் 3 கிராம் சத்துகள் உள்ளன.
மாங்கனீஸ் - 2%
விட்டமின் பி6 - 2%
விட்டமின் சி - 1%
செலினியம் - 1%
நார்ச்சத்து - 0.06 கிராம்
கலோரிகள் - 4.5
புரோட்டீன் - 0.2 கிராம்
மாவுச்சத்து - 1 கிராம்
நெஞ்சில் சளி வெளியேறவும், ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கும் ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதற்கும் பூண்டு உதவுதாகச் சொல்லப்படுகிறது.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுகளில் பூண்டும் ஒன்று. 12 வாரம் நடத்தப்பட்ட ஆய்வில், பூண்டை சாப்பிட்டவர்களுக்கு உடலில் இருந்து சளி வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது. சளி, சளி இருப்பதால் வந்த காய்ச்சலும் குறைந்துள்ளது.
அதிக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு, பூண்டை தொடர்ந்து சாப்பிட கொடுத்து ரத்த அழுத்தம் சீரானதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒருவர், பூண்டில் உள்ள 4 உதிரிகளை எடுத்துக்கொண்டாலே போதும். அவருக்குத் தேவையான சத்துகள் கிடைக்கக்கூடும். கெட்ட கொழுப்பை வெகுவாகக் குறைக்கும்.
பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இருப்பதால், உடலில் ஏற்படும் ஆக்ஸிடேடிவ் பாதிப்பை குறைக்கும். வயதாவதால் ஏற்படும் மறதி மற்றும் மறதி தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும்.
நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதால் பெரும்பாலும் நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமாக வாழ வழி செய்யும். ஆதலால், மனிதனின் ஆயுள் அதிகரிக்கலாம். பொதுவாக, விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு உடல் இயக்கம் அதிகம் இருப்பதால், சோர்வு உண்டாகும். இந்தச் சோர்வை எளிதில் போக்க பூண்டு கலந்த உணவுகள் நல்லது.
உடலில் லெட் எனும் மெட்டல் கலக்கப்பட்டிருந்தால் அது உடலுக்கு கெடுதிதான். லெட் ஒருவகை நஞ்சுதான். பூண்டில் உள்ள சல்ஃபர் காம்பவுண்ட்ஸ் இந்த லெட் எனும் நஞ்சை வெளியேற்ற உதவுகிறது.
மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்தில் உள்ள பெண்கள் மற்றும் மெனோபாஸ் அடைந்த பெண்கள் கட்டாயம் தங்களது அன்றாட உணவில் 2 உதிரி பூண்டுகளைச் சேர்ப்பது நல்லது. இதனால் எலும்பு தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும்.
ஆங்கில மருத்துவத்தின் தந்தையான டாக்டர். ஹிப்போகிரேட்ஸ் மூச்சுத் தொடர்பான தொந்தரவுகள், செரிமானக் கோளாறு, சோர்வு, உடலில் உள்ள பேராசைட்ஸை அழிக்கப் பூண்டை மருந்தாகக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
மிடில் ஈஸ்ட், கிழக்கு ஆசியா, நேபால் ஆகிய நாடுகளில் நெஞ்சக நுண்குழல் தொந்தரவுகள், உயர் ரத்த அழுத்தம், டிபி நோய், கல்லீரல் தொந்தரவுகள், ரத்தம் மற்றும் சளியுடன் வெளியேறும் பேதி, வயிறு வலி, குடல் புழுக்கள், மூட்டு வலி, சர்க்கரை நோய், காய்ச்சல் ஆகியவற்றுக்குப் பூண்டை மருந்தாக உண்ணும் பழக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
சீனாவில் நடத்திய 7 ஆண்டு ஆய்வில், வாரத்துக்கு இரண்டு முறை பூண்டை சாப்பிடுபவருக்கு நுரையீரல் புற்றுநோய் வர 44% வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
1424 நுரையீரல் புற்றுநோயாளிகளைச் சந்தித்து நேரடி ஆய்வு எடுத்தபோது அவர்கள் வாழ்வில் பூண்டை சாப்பிடாதோர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 4543 ஆரோக்கியமான நபர்களைச் சந்தித்து நேரடி ஆய்வை எடுத்தபோது, இவர்கள் தினசரி உணவில் பூண்டை சாப்பிடுபவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp