Trees

 

Facebook

ஹெல்த்

மரங்களிலிருந்து இவ்வளவு மருத்துவ பொருட்கள் தயாரிக்க முடியுமா ?

அருகில் உள்ள மரங்கள் மூலம் பற்பொடி, இயற்கை சோப், கொசு விரட்டி, மூலிகை எண்ணெய்கள், நோய்க்கான மருந்துகளை எப்படித் தயாரித்துப் பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

மினு ப்ரீத்தி

நம்மைச் சுற்றியுள்ள மரங்களில் இருந்து நாம் விலை மதிப்பற்ற சில மூலிகை தயாரிப்புகளைப் பெற முடியும். வீட்டில் நாமே தயாரிப்பதால் கலப்படம் இல்லாமல் விரைவில் பலன் அளிக்கக் கூடிய மருந்துகளாகத் தயாரிக்கப்படும். அருகில் உள்ள மரங்கள் மூலம் பற்பொடி, இயற்கை சோப், கொசு விரட்டி, மூலிகை எண்ணெய்கள், நோய்க்கான மருந்துகளை எப்படித் தயாரித்துப் பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

அத்தி மரம்

அத்தி மரம்

அத்தி இலையைத் தண்ணீர் விடாமல் அரைத்து, குளிக்க பயன்படுத்தினால் அரிப்பு தொல்லை நீங்கும். அத்தி இலையில் எலுமிச்சைச் சாறு கலந்து அரைத்து வியர்குரு மேல் தேய்க்க வியர்குரு சரியாகும்.

அரச மரம்

அரச மரம்

அரச மரத்தின் மூன்று கொழுந்து இலைகளுடன் வெல்லம் சேர்த்து அரைத்து அதை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் உண்டு வர வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். பெண்களுக்கு வரும் கர்ப்ப பை கோளாறுகளும் சரியாகும்.

அருநெல்லி மரம்

அருநெல்லி மரம்

வீடுகளில் தோட்டங்களில் காணப்படும். மரத்தில் இருந்து பழுத்து கீழே விழும் அருநெல்லிக்காய் மிகவும் நல்லது. இதைப் பகல் வேளையில் சாப்பிட்டு வந்தால் வயிறு பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். ஆண்மை குறைவு ஏற்படாது. நரம்பு பலம் பெறும். தினமும் 1-2 நெல்லிக்காயை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பார்வைக் குறைபாடுகள் நீங்கும்.

அகில் மரம்

அகில் மரம்

பொதுவாகக் காடுகளில் வளரும் இவை, விலை மதிப்பற்றவை. இந்த மரத்தின் கட்டை, பிசிறு, பட்டை ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன. இந்த மரத்துப்படையை இடித்து நெருப்பில் போட்டு புகையைக் கிளப்பினால், கொசுத் தொல்லை நீங்கும். பட்டையை இடித்துத் தண்ணீரில் போட்டு குளித்தால் வியர்வை வாடை நீங்கும்.

அசோக மரம்

அசோக மரம்

அரோக மரப்பட்டையை நன்கு அரைத்து எலும்பு முறிவுக்குக் கட்டி வந்தால் முறிந்த எலும்பு கூடும். இந்த மரத்து பட்டையின் பொடியை சாப்பிட்டு வருகையில் கர்ப்ப பை நோய்கள் சரியாகும்.

ஆலமரம்

ஆலமரம்

ஆலம்பாலை வெய்யிலில் உலர்த்திப் பற்பொடிகளில் சேர்க்கலாம். பல் பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும். ஆலம் இலைகளை லேசாக வதக்கி, கட்டிகளின் மேல் வைத்துக் கட்டினால் கட்டிகள் தானாக உடையும். குணமாகும். ஆலம் பழத்தை அவித்து உண்டால் மலச்சிக்கல் நீங்கும்.

இலுப்பை மரம்

இலுப்பை மரம்

இலுப்பை பூவை எடுத்து, அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் வைத்துக் கட்டினால் வீக்கம் குணமாகும். காய்ந்த பூக்களை லேசாகச் சூடாக்கி வீக்கம் மேல் ஒற்றடமும் கொடுக்கலாம். இலுப்பை நெய்யை வலி உள்ள இடத்தில் தடவினாலும் வலி சரியாகும். இது இயற்கை பெயின் கில்லர்.

இலுப்பைப் பிண்ணாக்கைப் பயன்படுத்திப் புகை போட்டால் எலிகள் ஓடிவிடும். பூச்சிகளும் ஓடிவிடும். கெமிக்கல்ஸ் இல்லாத பெஸ்ட் பூச்சி விரட்டி இது.

இலந்தை மரம்

இலந்தை மரம்

இலந்தை பழம், வற்றல், வடை ஆகியவற்றைச் சாப்பிட்டால் செரிமானம் சீராகும். பித்தம் நீங்கும். கோழையை அகற்றும். பித்தத்தால் வயிறு எரிச்சல் நீங்க,100 கிராம் இலந்தை இலைகளை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து இலையை நீக்கிவிட்டு ஆறவைத்து, தாகம் எடுக்கையில் குடித்து வர முற்றிலும் பித்த வயிற்று எரிச்சல் சரியாகும்.

எலுமிச்சம் மரம்

எலுமிச்சம் மரம்

எலுமிச்சை இலையை அரைத்து மூட்டு வலி, கெண்டைக்கால் வலியை ஆகியவற்றுக்குப் பற்றுப் போட்டால் வலி சரியாகும். நெற்றியில் போட தலைவலி குணமாகும்.

கருவேல மரம்


கருவேல மரம்

கருவேலங்குச்சியால் பல் துலக்கலாம். பற்பொடி தயாரிக்க - 100 கிராம் கருவேலம் பட்டை, 50 கிராம் கருவேலம் இலை, 25 கிராம் துவர்பாக்கு, 10 கிராம் உப்பு ஆகியவற்றை இடித்து பவுடராக்கி பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலை மரம்

கறிவேப்பிலை மரம்

கறிவேப்பிலையை வதக்கி, நிழலில் உலர்த்து பவுடராக்கி, கறிவேப்பிலை பொடி சாதமாகப் பயன்படுத்தலாம். உணவில் கறிவேப்பிலையை சேர்க்க பார்வைக் குறைபாடுகள் நீங்கும். கறிவேப்பிலை வேரிலிருந்து எடுக்கப்படும் தைலம், மணமுடையது. மருந்தாகப் பயன்படுத்தலாம்.

குங்கிலிய மரம்

குங்கிலிய மரம்

குங்கிலியத் தூளை நெருப்பில் போட்டுப் புகை போட்டால் கொசு தொல்லை நீங்கி நல்ல மணம் ஏற்படும்.

கொய்யா மரம்

கொய்யா மரம்

கொய்யா இலையை வாயில் போட்டு மென்றால் பல் வலி சரியாகும். பற்பொடியில் கொய்யா இலையைச் சேர்க்கலாம். கொய்யா பழம் மலச்சிக்கலைத் தீர்க்கும். எலும்புகளுக்கு நல்லது.

சந்தன மரம்

சந்தன மரம்

சந்தன இலையை மை போல அரைத்துக் குளிக்கலாம். இயற்கையான சந்தன வாசம் உடல் முழுவதும் வீசும். வியர்வையும் நீங்கும். சந்தன குச்சிகளைப் பயன்படுத்திப் புகைப் போட்டால் கொசுக்கள் வராது. சிறு பூச்சிகளும் ஓடிவிடும். 100 கிராம் சந்தனக் கட்டை தூள், காய்ந்த சந்தன இலை 100 கிராம், 100 கிராம் சம்பங்கி விதைத் தூள் சேர்த்து பவுடராக்கி குளியல்பவுடராக குளிக்கலாம்.

தென்னை மரம்

தென்னை மரம்

இளம்பாலையை இடித்துச் சாறு பிழித்து 100 மில்லி அளவுக்கு 40 நாட்கள் குடித்து வர சர்க்கரை நோய் நீங்கும். வாரம் 3 முறை அனைவரும் இளநீர் அருந்த பல நோய்கள் வருவது தடுக்கப்படும். இளநீர் வழுக்கையைச் சாப்பிட்டால் குடல் புண்கள் ஆறும். மலச்சிக்கல் தீரும்.

தேக்கு மரம்

தேக்கு மரம்

தேக்கு மரக்கட்டையை நீர் விட்டு அரைத்து உடம்பில் பூச புண்கள் சரியாகும். தேக்கு விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துப் பயன்படுத்த முடி வளரும்.

பப்பாளி மரம்

பப்பாளி மரம்

பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். நாட்டுப் பப்பாளியை 40 நாட்களுக்குத் தொடர்ந்து பசிக்கும்போது, உணவாகச் சாப்பிட மாலைக்கண் சரியாகும். நரம்பு தளர்ச்சியும் நீங்கி ஆண்மை பலம் கிடைக்கும்.

பனை மரம்

பனை மரம்

பனங்கற்கண்டு உடற்சூட்டை குளிர்விக்கும். நீர்ச்சுருக்கை குணப்படுத்தும். பனை வெல்லம் கலந்த குடிநீர் உடல் வெப்பம் தணித்து வாதம், பித்தம், கபத்தைச் சமமாக்கும். பனை கிழங்கை காலை நேர வேளையில் வரும் பசிக்கு உணவாகச் சாப்பிடுவது நல்லது.

பலா மரம்

பலா மரம்

பலாப்பிஞ்சை தோல் நீக்கி சமைத்து உண்டால் வாயுக்கோளாறு, மலச்சிக்கல், உணவுக்கு முன் ஏற்படும் வயிற்றுவலி குணமாகும். பித்த நோய்கள் சரியாகும். பலாப்பழத்தை சாப்பிட்ட பிறகு சிறிது நெய் அல்லது சிறிது தேன் சாப்பிட உடல் வலிமை பெறும்.

புங்கமரம்

புங்கமரம்

100 மி.லி புங்க மரத்துப்பால், 300 கிராம் பச்சரிசி மாவு ஆகிய இரண்டையும் பிசைந்து நிழலில் உலர்த்தி இடித்து வைக்கவும். இதை சோப்புக்கு பதிலாகத் தேய்த்துக் குளிக்க மேனி அழகாகும்.

வேப்ப மரம்

வேப்ப மரம்

வேப்பம் பழத்தின் சதையை மட்டும் எடுத்து வெல்லப் பாகுடன் கலந்து உட்கொண்டு வந்தால் தோல் நோய்கள் குணமாகும். 200 கிராம் பழச்சதையுடன் 200 கிராம் வெல்லப்பாகு சேர்த்துக் கொள்ளலாம்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?