வைரஸ்

 

Facebook

ஹெல்த்

Omicron : "அச்சப்படாதீர்கள்" - நம்பிக்கை தரும் ஆய்வு முடிவுகள்

Antony Ajay R

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அரசு அதன் கடமையைச் செய்யும் வீதம் இரவு நேர ஊரடங்கு அறிவித்திருக்கிறது. 2022-ம் ஆண்டின் ஐந்தாவது நாளிலேயே லாக்டவுனா? என அதிர்ச்சியில் குதித்து சோகத்தில் மூழ்குவதற்கு தாயாராக இருக்கு நீங்கள் அதற்கு முன் இதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதுவரை கொரோனா நான்கு வகையாக உருமாற்றமடைந்து பரவி வருகிறது. இப்போது புதிதாக உருவாகியிருப்பது ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ். இந்த வகை வேகமாகப் பரவுவதாக கூறப்பட்டாலும் இது குறித்து நாம் பதற்றமடைய வேண்டாம் என்று ஆய்வாளர்கள் ஒரு ஆய்வின் அடிப்படையில் ஆறுதல் கூறுகின்றனர். ஒமிக்ரான் முதன் முதலாக பரவிய தென் ஆப்ரிக்காவில் தான் அந்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது.

மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

அதன் முடிவுகளைக் குறித்து மருத்துவர் ஃபரூக் அப்துல்லா முகநூலில் பின்வரும் நீண்ட பதிவினை எழுதியுள்ளார்.

முதல் அலை - ஆல்ஃபா, இரண்டாம் அலை - பீட்டா, மூன்றாம் அலை - டெல்ட்டா, நான்காம் அலை - ஓமைக்ரான் என நான்கு அலைகளைக் கடந்து வந்துள்ளோம். தென் ஆப்ரிக்காவிலும் இந்த நான்கு வகை வைரஸ்களும் அட்டென்டன்ஸ் போட்டிருக்கின்றன. அவற்றால் அட்மிசன் ஆனவர்கள் மற்றும் வீட்டிலேயே சிகிச்சை பெற்றவர்களின் தரவுகள் அடிப்படையில் அந்த ஆய்வு நடந்திருக்கிறது. அதன் முடிவுகளைக் காணலாம்,

தொற்றுபரவல்

நான்கு அலைகளில் ஒமிக்ரான் அலையில் தான் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு. அட்மிசன் தேவைப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை டெல்டா பரவலுடன் ஒப்பிடுகையில் 30% குறைந்திருக்கிறது.

பாதிக்கப்படும் நோயாளிகளின் வயதும் முதல் மூன்று அலைகளை விட மிகக் குறைவு. ஐம்பது, நாற்பதிலிருந்த நோயாளிகளின் சராசரி வயது 36-ஆக இருக்கிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறைகிறது.

கொரோனா தாக்கத்தால் இணை நோய்களுடன் அட்மிட் ஆனவர்களின் சதவீதம் மற்ற அலைகளுடன் ஒப்பிடுகையில் பாதியாகக் குறைந்திருக்கிறது.

நுரையீரல் பிரச்சனை உள்ளிட்ட தீவிர சுவாசப்பாதை அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு குறைந்துள்ளது.

ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு குறைந்திருக்கிறது.

ஊரடங்கு

செயற்கை சுவாசக் கருவி தேவைப் பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரித்திருக்கிறது.

ஒரு நோயாளி கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டால் அவர் மருத்துவமனையில் தங்கியிருக்கும் நாட்களின் எண்ணிக்கை 8-ல் இருந்து 3-ஆக குறைந்துள்ளது.

நோய்த்தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு வரை குறைந்துள்ளது.

இந்த ஆய்வுகளைப் பார்க்கும் போது நமக்குத் தொடங்கியிருக்கும் மூன்றாவது அலையும் தாக்கம் குறைவானதாகவே இருக்கும் என மருத்துவர்கள் கணித்துள்ளனர். மேலும் தடுப்பூசி மற்றும் நமக்கு இயல்பாக இருக்கும் நோய்தடுப்பாற்றல் மூலம் எளிதாக வெல்லமுடியும் என்றும் கருதுகிறனர்.

ஆனாலும் ஒமிக்ரான் பரவும் வேகம் அதிகமாக இருப்பதானால் குறுகிய காலத்திலேயே அதிக நபர்களைப் பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. அதிக நபர்கள் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகும், ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள், இறப்பு எண்ணிக்கை என அனைத்தும் நேர் விகிதத்தில் உயரும் இதனால் நாம் ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியம்.

இந்த அலை மிகக் குறுகிய காலத்தில் உச்சத்தை அடையும் அதேபோல மிகக் குறுகிய காலத்தில் நம்மிடம் இருந்து விடைபெற்றுக்கொள்ளும். என மருத்துவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி

கொரோனா பரவலை நாட்டோடு நாடு 100% ஒப்பிட முடியாது தான். மேலும் மூன்று அலைகளைக் கடந்துவிட்டதால் தென் ஆப்ரிக்காவில் அதிகம் பேருக்கு ஏற்கெனவே பாதிப்பு வந்துவிட்டுப் போயிருக்கலாம். நமக்கு வரவிருக்கும் மூன்றாவது அலையை நாம் ஒற்றுமையாக அச்சமின்றி கடக்க, தடுப்பூசி இரண்டு டோஸ், முகக்கவசம், தனிமனித இடைவெளி தேவையற்றப் பயணங்கள் கூட்டங்களைத் தவிர்த்தல் என வழங்கப்பட்டிருக்கிற விழிப்புணர்வு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிப்போம்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?