கொசுவத்தி சுருள் Twitter
ஹெல்த்

இரவில் கொசுவத்தி பயன்படுத்துவது சரியா? பக்க விளைவுகள் ஏற்படுமா?

நாம் பயன்படுத்தும் கொசுவத்தி சுருள்கள் அல்லது கிரீம்களில் நோய்களை உண்டாக்கக்கூடிய வேதிப்பொருட்கள் உள்ளன. அதிலிருந்து வெளிவரும் புகை சிகரெட் புகையை போலவே ஆபத்தானது.

Priyadharshini R

பருவமழை தொடங்கியதும், காய்ச்சல், சளி போன்ற உடல் நல குறைவு ஏற்படும். அதே சமயத்தில் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் தாக்கமும் அதிகரிக்கும்.

மழைக் காலத்தில் அதிகளவில் காணப்படும் கொசுக்களை தடுக்க கிரீம்கள், சுருள்கள் ஆகியவை பயன்படுத்துவோம்.

கொசுக்களிலிருந்து நிவாரணம் கிடைத்தாலும் அதிலிருந்து வெளிப்படும் நச்சுப் புகை மற்ற நோய்களையும் ஏற்படுத்தும் என்கின்றனர்.

கொசுக் கடியிலிருந்து விடுப்பட நாம் பயன்படுத்தும் கிரீம்கள், சுருள்கள் பாதுகாப்பானதா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ஹெல்த்ஷாட்டின் கூற்றுப்படி, நாம் பயன்படுத்தும் கொசுவத்தி சுருள்கள் அல்லது கிரீம்களில் நோய்களை உண்டாக்கக்கூடிய வேதிப்பொருட்கள் உள்ளன.

அதிலிருந்து வெளிவரும் புகை சிகரெட் புகையை போலவே ஆபத்தானது. சுருள்களில் பென்சோ ஃப்ளோரோஎத்தேன் மற்றும் பென்சோ பைரின்ஸ் எனப்படும் பொருட்கள் உள்ளன.

அவை ஆஸ்துமா போன்ற நோய்களை ஏற்படுத்தும். இப்படி கொசுவத்தி சுருள்களை பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் என்ன என்பதை காணலம்.

  • தோல் எரிச்சல், ஒவ்வாமை, வீக்கம், தடிப்புகள் மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தலாம்

  • கண்களுக்குள் சென்றால் எரிச்சல் உண்டாகும்

  • உதடுகளில் பட்டால் மரத்துப் போகும்.

ஆஸ்துமா

மூடிய அறையில் நீண்ட நேரம் கொசுவத்தி சுருளைப் பயன்படுத்தினால், அதிலிருந்து வெளியே வரும் புகையை சுவாசிப்பதனால் ஆஸ்துமா ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தோல் வெடிப்பு

நீண்ட நேரம் சுருளை பயன்படுத்துவதால் தோலில் ஒவ்வாமை, தடிப்பு போன்ற சரும பிரச்னைகள் ஏற்படும்.

கண் பாதிப்பு

கொசுவத்தி சுருள்கள் கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக கண்களில் எரிச்சல், கண்புரை போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

மூச்சு திணறல்

சுருள்களில் உள்ள பென்சோ பைரின்ஸ் மற்றும் பென்சோ புளோரோஎத்தேன் எனப்படும் இரசாயனங்கள் சுவாச பிரச்னைகளை அதிகரிக்கின்றன.

குழந்தைகளுக்கும் பிரச்னை

6 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அல்லது வளர்ந்த குழந்தைகள் உள்ள வீட்டில் சுருள்கள் பயன்படுத்தக் கூடாது என மருத்துவர்களே எச்சரிக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?