சிறுநீரகம் Twitter
ஹெல்த்

சிறுநீரில் அதிகரிக்கும் துர்நாற்றம் - நோய்களுக்கான அறிகுறியா ? | Nalam 360

சிறுநீர் மணத்தில் ஏற்படும் மாற்றத்தை பெரும்பாலும் பொருட்படுத்தாமல் கடந்து சென்றிருப்போம். அவ்வாறு செய்வது தவறு. ஏனெனில் சிறுநீர் துர்நாற்றம் பல நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

Antony Ajay R

மனிதர்கள் ஒவ்வொருவரின் சிறுநீருக்கும் தனித்த வாடை இருக்கிறது. அது காலநிலை, உடல் நலம் போன்ற காரணங்களால் அவ்வப்போது மாறலாம். சிறுநீர் மணத்தில் ஏற்படும் மாற்றத்தை சில நேரங்களில் நாம் கண்டிருந்தாலும் பெரும்பாலும் அதனைப் பொருட்படுத்தாமல் கடந்து சென்றிருப்போம். அவ்வாறு செய்வது தவறு. ஏனெனில் சிறுநீர் துர்நாற்றம் பல நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

சிறுநீர் துர்நாற்றத்துக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

நீரிழப்பு

சிறுநீர் வழி கழிவுகளை வெளியேற்ற உடலில் நீர் இருக்க வேண்டியது அவசியம். உடல் டிஹைட்ரேடட்டாக இருக்கும் போது அதிக அடர்த்தியில் கழிவுகள் வெளியேறுவதால் அதிக துர்நாற்றம் ஏற்படும் தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலம் இதனைக் குறைக்கலாம். ஒரு வேளை தண்ணீர் குடிக்காத நிலையே தொடர்ந்தால் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படலாம்.

டீ, காபி அருந்துவது

டீ, காபி அல்லது மது அருந்துவது

காபி, டீயிலிருக்கும் கஃபைன் சிறுநீர் பெருக்கியாகச் செயல்படக்கூடியது. அதிகமாக இவற்றைக் குடிக்கும் போது உடலிலிருக்கும் நீர் சிறுநீராக வெளியேற உடல் டிஹைட்ரேட்டாகும் இதனால் மீண்டும் சிறுநீர் துர்நாற்றமெடுக்கும்.

அது போல மது அருந்துவதும் உடலில் நீரின் அளவை குறைக்கும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும் போது சிறுநீரில் அமோனியா நாற்றம் அதிகரிக்கும். சிறுநீர் மணத்தில் இந்த மாற்றம் ஏற்படும் போது குமட்டல் அல்லது வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், காய்ச்சல், சிறுநீரில் இரத்தம் மற்றும் உங்கள் முதுகு பக்க அல்லது இடுப்பில் வலி ஆகியவை ஏற்பட்டால் சிறுநீர் கற்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவர்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாத போது சிறுநீரில் துர்நாற்றம் ஏற்படுகிறது. கல்லீரலில் கீட்டோன்கள் அளவு அதிகரிப்பதால் அது சிறுநீரில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

உணவுப் பழக்கம்

வெங்காயம், பூண்டு போன்ற அப்ஸாகரஸ் அதிகமிருக்கும் உணவுகள் கூட சிறுநீரில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மீன் அதிகம் உண்பதாலும் சிறுநீரகத்தில் துர்நாற்றம் அதிகரிக்கலாம்.

இது தவிரச் சிறுநீர்ப் பைக்கு அருகில் ஏற்படும் ஈஸ்ட் தொற்று, சிறுநீர் பாதைத் தொற்று போன்றவையும் சிறுநீர் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். சிறுநீர் துர்நாற்றம் அதிகரிப்பதை அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் குறைக்கலாம். சில நாட்களில் இது சரியாகிவிடும். ஒருவேளை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?