வெள்ளை டீ முதல் இராணி வரை : இந்தியாவில் இருக்கும் 18 டீ வகைகள் பற்றி தெரியுமா? Twitter
ஹெல்த்

வெள்ளை டீ முதல் இராணி சாய் வரை : இந்தியாவில் இருக்கும் 18 தேநீர் வகைகள் பற்றி தெரியுமா?

உச்சி வெயிலிலும் சரி நடு இரவிலும் சரி டீ க்கு டிமாண்ட் குறையாது. பிளாக் டீ, லெமன் டீ, சுக்கு டீ, தம் டீ மட்டுமல்லாமல் டீ மாஸ்டரே வாய்பிளக்கும் வகையில் விதவிதமான டீ வகைகளை நம்மவர்கள் நாடுவதுண்டு. இந்தியாவில் இருக்கும் பிரபலமான 18 டீ வகைகளைப் பார்க்கலாம். உங்களது ஃபேவரைட் எதுவென கண்டுபிடியுங்கள்.

Antony Ajay R

உழைக்கும் மக்கள் அதிகமாக இருக்கும் இந்தியாவில் டீ என்பது வெறும் பானம், உணவுப் பொருள் என்பதைத் தாண்டி உணர்வுடன் கலந்த ஒன்று.

டீ இல்லாமல் பலருக்கும் அன்றாடம் நகராது. டீயை இப்படிதான் இந்த நேரத்தில் தான் பருக வேண்டுமென எந்த விதிமுறையும் நம் மக்களுக்கு கிடையாது.

உச்சி வெயிலிலும் சரி நடு இரவிலும் சரி டீ க்கு டிமாண்ட் குறையாது. பிளாக் டீ, லெமன் டீ, சுக்கு டீ, தம் டீ மட்டுமல்லாமல் டீ மாஸ்டரே வாய்பிளக்கும் வகையில் விதவிதமான டீ வகைகளை நம்மவர்கள் நாடுவதுண்டு.

இந்தியாவில் இருக்கும் பிரபலமான 18 டீ வகைகளைப் பார்க்கலாம். உங்களது ஃபேவரைட் எதுவென கண்டுபிடியுங்கள்.

காஷ்மீரி கவா ( Kashmiri Kahwa)

கிரீன் டீ

சீனா மற்றும் இந்தியாவில் விளையக் கூடிய காமெலியா சினென்சிஸ் தாவரத்தின் இலையில் இருந்து கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது.கிரீன் டீ ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது.

மசாலா டீ

சர்க்கரை, பால், தேயிலை உடன் இலவங்கம், நட்சத்திர அண்ணாசி, சீரகம் கருப்பு மிளகு உள்ளிட்ட மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

காஷ்மீரி கவா ( Kashmiri Kahwa)

குங்குமம், பாதாம் உடன் இன்னும் சில மசாலா பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பிளாக் டீ ஆகும்.

நூன் சாய்

இதனை ஷீர் சாய் என்றும் கூறுவர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் கிடைக்கும் ஒரு வகை டீ ஆகும். கிரீன் டீ இலை, பால். உப்பு மற்றும் சோடா போட்டுத் தயாரிக்கப்படுகிறது.

நீலகிரி டீ

தமிழ்நாட்டில் கிடைக்கும் தேநீர் வகையாகும். இது பூக்கள் மற்றும் சிட்ரஸ் பழங்களுடன் தயாரிக்கப்படுகிறது.

white tea

டார்ஜிலிங் டீ

டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் உள்ளிட்ட இடங்களில் இருந்து கிடைக்கும் காமெலியா சினென்சிஸ் மூலம் தயாரிக்கப்படுகிறது.

வெள்ளை டீ

காமெலியா சினென்சிஸ் மூலம் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படும் டீ ஆகும். இது லேசான மஞ்சள் பீச் நிறத்தில் காணப்படும்.

ஊலாங் டீ

இந்தியா மட்டுமல்லாமல் சீனா மற்றும் ஹாங் காங்கிலும் பிரபலமாக இருக்கும் தேநீர் வகை இதுவாகும்.

பிளாக் டீ

சாதாரண டீயை விட ஸ்ட்ராங் ஆனது.பால் கலக்காமல் தயாரிக்கப்படுகிறது.

யெல்லோ டீ

இதில் கஃபின் ஆளவு குறைவாக இருக்கும். இது சீனாவில் மிகவும் பிரபலமாக கருதப்படுகிறது.

லெமன்கிராஸ் டீ

எலுமிச்சை இலைகள் மூலம் தயாரிக்கப்படும் இது சிட்ரஸ் சுவையுடன் இருக்கும்.

இராணி சாய்

இராணி சாய்

இது அசாமிலிருந்து கிடைக்கப்பெறும் தேயிலை மூலம் தயார் செய்யப்படுகிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பிரபலம்.

தந்தூரி சாய்

மண் கோப்பையில் புகை வாசத்துடன் வழங்கப்படும் மாசாலா டீ ஆகும்.

கங்ரா டீ

இமாச்சல பிரதேசத்தில் உள்ள கங்ரா பகுதியில் இந்த டீ கிடைக்கிறது. இது மிகவும் லேசானதாகவம் இருக்கும் புத்துணர்ச்சியும் கொடுக்கும்.

சமோமில் டீ

ப்ளூமிங் டீ

தேயிலை மற்றும் பூக்கள் மூலம் தயாரிக்கப்படும் இது மிகவும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கும்,.

மேட் டீ

மேட் இலைகள் மூலம் தயாரிக்கப்படும் இந்த டீயில் கஃபின் அளவு அதிகமாக இருக்கும்.

சமோமில் டீ

சமோமில் பூக்களைக் கொண்டு இந்த டீ தயாரிக்கப்படும்.இதில் இனிப்புக்காக தேன் சேர்த்து பரிமாறுவதனால் அதிக இனிமையானதாக இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?