These foods can help you sleep better Twitter
ஹெல்த்

தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? சரி செய்ய மருத்துவர்கள் கூறும் உணவுகள் என்னென்ன?

Priyadharshini R

ஒரு நல்ல இரவு தூக்கம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

தூக்கம் பல்வேறு நோய்களின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

தினமும் 7-9 மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இருப்பினும், சில நேரங்களில் தாமதமான இரவு உணவுகள், அதிக உணவு, மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற பல காரணிகளால் தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம்.

உணவியல் நிபுணர் ரேணுகா டாங் ( குளோபல் ரெயின்போ ஹெல்த்கேர்) ஒரு நபர் இரவில் சரியாகவும் அமைதியாகவும் தூங்க உதவும் உணவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

"மக்கள் பெரும்பாலும் மாலையில் ஜங்க் ஃபுட்க சாப்பிடுபதை தவிர்ககவும்,

ஏனென்றால் அவை சில சமயங்களில் அஜீரணத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தூக்கமின்மை ஏற்படலாம் என்கிறார் டாக்டர் டாங்.

ஒரு நபர் நன்றாக தூங்க உதவும் 4 உணவுகள் இதோ!

சூடான பால்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் அமினோ அமிலங்கள் உள்ளன, அவை தூக்கம் மற்றும் மனநிலையை மேம்படுத்துகின்றன, குறிப்பாக வயதானவர்களுக்கு இரவில் பால் அருந்துவது நன்மை பயக்கும்.

சூடான பாலில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் செரோடோனின் மற்றும் மெலடோனின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாலில் காணப்படும் மெலடோனின் (melatonin) மற்றும் செரோடோனின் (serotonin) ஒருவரை நிம்மதியாக தூங்க செய்கிறது.

உலர் பழங்கள்

செரிமானத்தை மேம்படுத்தவும், நன்றாக தூங்கவும் இரவு உணவிற்குப் பிறகு உலர் பழங்களை சாப்பிடுமாறு மருவத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.

முந்திரி, பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் மாலை நேர ஸ்நாக்ஸுக்கான சிறந்த தேர்வுகளாகும்.

கெமோமில் தேயிலை ( Chamomile Tea)

தூங்குவதில் சிரமம் உள்ளவர்களுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படும் தேநீர், கெமோமில் தேநீர். இது மன அழுத்தத்தை போக்க உதவுகிறது மற்றும் நல்ல தூக்கத்தை தருகிறது. இந்த தேநீரை உலர்ந்த மலர்களை கொண்டு செய்வார்கள்.

இஞ்சி-துளசி தண்ணீர்

இஞ்சி மற்றும் துளசியை தண்ணீரில் கொதிக்க வைத்து இந்த கலவையை செய்யலாம்.

செரிமானம் மற்றும் தடையற்ற தூக்கத்திற்கு இந்த பானத்தை டாக்டர் பரிந்துரைக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?