நன்றாகத் தூங்கி எழும் போது தொப்புளில் பஞ்சு போன்று இருப்பதை யாராவது கவனித்திருக்கிறீர்களா? அப்படிக் கவனித்திருந்தால் அது என்ன எனச் சிந்தித்திருக்கிறீர்களா? நம்மில் பலர் அது படுக்கை, போர்வை அல்லது ஆடையிலிருந்து வெளியேறும் நூலிழைகள் என நினைத்திருப்போம். ஆனால் அப்படி அல்ல. அந்த பஞ்சுகளின் பின்னனிருக்கும் அறிவியலைக் கண்டறிந்துள்ளார் ஆஸ்திரேலியா வேதியியலாளர் ஜார்ஜ் டின்ஹவுஸர் (Georg Steinhauser).
இதனைக் கண்டறிய வியென்னா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 500க்கும் மேற்பட்டோரின் தொப்புல் பஞ்சுகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வில் இந்த பஞ்சுகள் முடிகளுக்கு இடையில் உருவாகி மெதுவாக தொப்புளால் உறிஞ்சப்பட்டு தொப்புள் குழியில் சேர்ந்து பஞ்சு போன்று ஆகிறது எனக் கண்டறியப்பட்டது
மேலும் இந்த பஞ்சுகள் கொழுப்பு, வியர்வை, இறந்த செல்கள் மற்றும் தூசிகளால் ஆனது எனக் கண்டறியப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் பஞ்சுகள் உருவாகியுள்ளன. அதிகபட்சமாக 7.6 கிராம் எடை வரை இந்த பஞ்சுகள் உருவாகின்றன.
இந்த பஞ்சுகளைக் கொண்டு வித்தியாசமான கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பார்கர் என்ற நபர். 1984 முதல் தனது தொப்புள் பஞ்சுகளைப் பக்குவமாகச் சேகரித்து சுத்தமான கண்ணாடி ஜார்களில் அடைத்துப் பாதுகாத்து வருகிறார் அந்த நபர். இதனால் அதிக பஞ்சுகளைச் சேகரித்த அவருக்கு 2010ல் கின்னஸ் சாதனை பட்டம் வழங்கப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com