கணவன் VS மனைவி: காதல் கல்யாணம் எப்போது கசக்கும்? எப்படி சரி செய்யலாம்? Twitter
ஹெல்த்

கணவன் VS மனைவி: காதல் கல்யாணம் எப்போது கசக்கும்? எப்படி சரி செய்யலாம்?

Priyadharshini R

பொதுவாக ஆண் பெண் இருவரும் காதலிக்கும் போது

"அன்பே இருவரும்

பொடிநடையாக அமெரிக்காவை

வலம் வருவோம் கடல்மேல் சிவப்புக்

கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்"

என சந்தோஷமாக இருக்கும் காட்சி, திருமணத்திற்கு பிறகு வாழ்வே மாயம் என சோகம் கீதம் இசைப்பதாக காதல் திருமணம் செய்த பல ஜோடிகளின் புலம்பலாக உள்ளது.

காதல் வாழ்வில் இருக்கும் சுகமும் திருமண வாழ்க்கையில் இல்லாமல் போவது ஏன்? திருமண வாழ்க்கையினை ஆயுள் முழுக்க அழகாக்குவது எப்படி என்று மனோதத்துவ நிபுணர்கள் தரும் விளக்கம் தான் இந்த பதிவு.

முதலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் இல்லற வாழ்வு கசக்க தொடங்கிவிட்டது என்று அர்த்தம்

  • அலுவலகம் முடிந்து வந்ததும் உங்கள் வாழ்க்கை துணைக்கான நேரத்தை ஒதுக்காமல் இருப்பது

  • கடும் கோபத்தில் உங்கள் வாழ்க்கை துணைவரை திட்டி தீர்த்த பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்கமால் இருப்பது அல்லது மன்னிப்பு கேட்க மறந்துவிடுவது.

  • வீட்டிற்கு செல்லும் ஆர்வம் குறைவது

  • உங்கள் துணைவர் ஆசையாக சமைத்து கொடுக்கும் உணவு குறித்து எந்த விமர்சனமும் செய்யாமல் இருப்பது

  • உங்கள் குழந்தைகளுடன் அழகான தருணங்களை மிஸ் செய்வதாக நீங்கள் மனதிற்குள் அழுதால் உங்களின் இல்லற வாழ்வு கசந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்

Love

அப்போ இதை சரி பண்ண என்னதான் வழி? வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற பழமொழிக்கேற்ப இருள் ஒன்று இருந்தால் வெளிச்சம் என ஒன்று இருக்கும் உங்கள் இல்லற வாழ்க்கையின் அழகாக்கும் முத்தான வரிகள் இதோ

1. உங்களின் மனைவியினை என்னதான் அழகாக பார்த்து கொண்டாலும் பிறந்த வீட்டிற்கு ( தாய் வீட்டுக்கு) போக வேண்டும் என்ற ஆசை இருக்கும் அனுப்பி வையுங்கள். அப்போது உங்கள் இருவருக்குள் வரும் பிரிவும், சிறிய கண்ணீரும் சோகமும் உங்கள் காதலை அழகாக்கும்.

2. உங்கள் பிள்ளைகளை விடுமுறை காலங்களில் தாத்தா பாட்டி வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். அது பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும்.

3.உங்களின் துணைவர் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குறித்து புறம் பேசுவது தவறு என்றாலும் 4 சுவற்றிற்குள் தவறு இல்லை அதாவது உங்களுக்குள். அதே சமயம் உங்களின் மீது கூறும் குறைகளை ஒரு குழந்தை போல பாவித்து ரசித்து செல்லுங்கள் ( சில நேரம் குழந்தை தனம் முக்கியம்)

Love

4. திருமணத்தின் போதுதான் ஹனிமூன் என்றில்லை இரண்டாவது முறையும் சென்று வாருங்கள் தவறில்லை

5.சில சமயம் அலுவலகத்திற்கு ஒரு நாள் விடுமுறை எடுத்துகொண்டு உங்களின் துணையுடனே நேரத்தை செலவிடுங்கள் அது உங்களுக்கான நாளாகவும் உங்கள் இருவரின் அன்பையும் அதிகரிக்கும்.

இது போன்ற விஷயங்களை உங்கள் துணைவரும் நீங்களும் கடைபிடித்தால் உங்களின் திருமண வாழ்க்கை வருஷமெல்லாம் வசந்தம் தான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?