இந்த மழை, வானிலை உங்களைச் சோர்வாக்குகிறதா? - இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் NewsSense
ஹெல்த்

இந்த மழை, வானிலை உங்களைச் சோர்வாக்குகிறதா? - இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்

குளிர் உணவுகளுக்கு விடைக்கொடுத்துவிட்டு இளஞ்சூடான, சூடான உணவுகளைச் சாப்பிடுங்கள். பிளாக் டீ, காபி, கிரீன் டீ, சுக்கு, மிளகு டீ, புதினா டீ போன்றவை.

NewsSense Editorial Team

சிலருக்கு மழை ரொம்பப் பிடிக்கும். மழை காதலர்களாக இருப்பார்கள். சிலருக்கு சோம்பல் வரும் கூடவே சோர்வும் வரும். மனநிலையும் கொஞ்சம் உற்சாகமில்லாமல் இருக்கும். சில உணவுப் பிரியர்கள் அதிக கிரேவிங்கிலும் (Cravings) விழுவார்கள். இந்த வானிலை சிலருக்குரொமான்டிக்கான அனுபவங்களைத் தரலாம்.

கோவிட் வந்த பிறகு மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உண்மை. மனநிலையில் பெறும் மாற்றங்கள் அடைந்துள்ளன. கவலையாக இருப்பது என்பது சீசனல்… ஆனால், அது விரைவில் மாறிவிடும். நிரந்தரமானதல்ல… மழை, தண்ணீர் தேங்குதல், கொசு அதிகரித்தல் போன்றவை சில நேரங்களில் நோய்கள் உண்டாகக் காரணமாகலாம். சீசன் நோய்கள் வருவதும் இயல்புதான்.


இந்த சீசனில் உங்களை உற்சாகமாக்க சில வழிகள்…

நீங்கள் உடுத்தும் உடைகளில் ‘ஹாப்பி கலர்ஸ்’ பயன்படுத்துங்கள். அதாவது, ஆரஞ்சு, பீச், சிவப்பு, பிங்க், ஸ்கை ப்ளு, இள மஞ்சள், ஆஃப் வொயிட், லைம் கிரீன், ஆலிவ் போன்ற பளிச், வெளிர், மென்மையான நிறங்களை உடுத்துவதால் உங்கள் மனநிலை மகிழ்ச்சியாக மாறும்.

அரோமா எசன்ஸ், ஆயில், வாசமான பாடி வாஷ், வாசமான டியோட்ரன்ட் பயன்படுத்துவதும் உங்களை உற்சாகமாக்கும்.

குளிர் உணவுகளுக்கு விடைக்கொடுத்துவிட்டு இளஞ்சூடான, சூடான உணவுகளைச் சாப்பிடுங்கள். பிளாக் டீ, காபி, கிரீன் டீ, சுக்கு, மிளகு டீ, புதினா டீ போன்றவை.

மசாஜ் எடுத்துக்கொண்டால் உடனடியாக மனநிலை மாறும். ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கும்.

இளஞ்சூடான நீர் குளியல், நறுமணம் மிக்க பாத் டப் போன்றவையும் மனநிலையை மாற்றும்.

பிடித்தமான உறவுகள், நண்பர்களுடன் பேசுங்கள். கொஞ்சம் டிஜிட்டல் உலகம் இல்லாமல் நேரத்தை செலவழியுங்கள்.

கட்டி அணைப்பதும் உடனடியாக மனநிலையை மாற்றும். இதைப் பலரும் கட்டிப்பிடி வைத்தியமாகவே கடைப்பிடிக்கலாம்.

செல்ல பிராணிகளுடன் அதிக நேரத்தை செலவழியுங்கள். நாய், பூனை, முயல், கிளி போன்றவை உங்கள் மனநிலையை வெகு விரைவில் மாற்றும்.

கொஞ்சம் உடலை அங்கும் இங்கும் அசைத்து உடற்பயிற்சி செய்வதோ பாடல்களுக்கு நடனம் ஆடுவதோ செய்யலாம்.

டிவி, மொபைலில் மூழ்குவதைவிடக் காலை சூரியன், மாலை சூரியனில் நடைப்பயிற்சியோ விளையாடுவதோ தோட்ட வேலைகள் செய்வதோ போன்றவற்றில் ஈடுபடலாம்.

உங்களுக்குப் பிடித்த சுவையான உணவுகளை வீட்டிலே நீங்களே தயார் செய்யுங்கள்.

ஃபூட் மசாஜ், ஹெட் மசாஜ், பாடி மசாஜ், மெடிகியூர், மெனிகியூர், ஸ்பா போன்றவற்றைச் செய்துகொள்ளலாம்.

மின்ட் டீ உங்கள் மனதை ரிலாக்ஸாக்கும். மின்ட் டீ, லாவண்டர் டீ மனதை ரம்மியமாக்கும்.

பயம், மன உளைச்சல் நீங்க பெயின்டிங், எம்பிராய்டரி, ஆர்ட் வேலைகளில் விருப்பத்துக்கு ஏற்ப நேரம் செலவழியுங்கள்.

பாசிடிவ் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். மேனிஃபிஸ்டேஷன், தியானம், யோகா, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றைச் செய்யலாம்.

வேலையைத் தொடர்ந்து செய்யாமல் சின்னச் சின்ன மினி பிரேக் எடுங்கள். நடந்து செல்வது, கேட்பது, ஆடியோ ஸ்டோரிஸ் கேட்பது, உடலை ஸ்ட்ரெச் செய்வது. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவது, சூடாக மின்ட் டீ குடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?