விமானத்தில் பயணிக்கிறீர்களா? இந்த 5 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க ! canva
ஹெல்த்

விமானத்தில் பயணிக்கிறீர்களா? இந்த 5 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க !

கொரோனா பெருந்துற்றுக்கு பிறகு, வெளியூர்கள், வெளிநாட்டு பயணங்கள் மீண்டும் சூடுபிடித்தாலும், நம் ஆரோக்கியத்துக்கு பங்கம் வராமல் சில பழக்கங்களை நாம் பின்பற்றித் தான் ஆகவேண்டும்.

Keerthanaa R

பயணங்கள் எவ்வளவு இனிமையானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருந்தாலும், அதிலும் சில ஆபத்துகள் உள்ளன.

விபத்துகளை மட்டுமே நாம் ஆபத்து என்று சொல்லிவிட முடியாது. சிலருக்கு பயணங்கள் உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம். காய்ச்சல், சளி போன்றவை ஏற்படுவது, அலர்ஜிகள், இன்ஃபெக்ஷன் போன்றவைகள் ஏற்படலாம்.

காற்று, நாம் உட்கொள்ளும் உணவில், தண்ணீரில் மாற்றம் என்பது இவற்றுக்கு காரணமாக இருக்கலாம். இதில் சுகாதார பிரச்சினை ஒன்றும் உள்ளது.

நமது கை, கால்கள், முகத்தை அவ்வப்போது கழுவி சுத்தம் செய்யவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துவார்கள்.

இந்த வழக்கம் நம்மிடம் முதலில் இல்லை என்றாலும், கிட்ட தட்ட 2 ஆண்டுகள் உலகை புறட்டிப் போட்ட கோவிட் 19 பெருந்தொற்றானது, சுகாதார விஷயத்தில் நம்மை கூடுதல் எச்சரிக்கை படுத்திவிட்டு சென்றுவிட்டது.

கொரோனா பெருந்துற்றுக்கு பிறகு, வெளியூர்கள், வெளிநாட்டு பயணங்கள் மீண்டும் சூடுபிடித்தாலும், நம் ஆரோக்கியத்துக்கு பங்கம் வராமல் சில பழக்கங்களை நாம் பின்பற்றித் தான் ஆகவேண்டும்.

அப்படி, விமானத்தில் பயணம் செய்யும்போது 5 விஷயங்களை கவனத்தில் வைக்கவேண்டும் என விமான பணியாளர் ஒருவர் தன் டிக் டாக் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தில் பயணிக்கும்போது கவனம் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்:

  • ஜன்னல் மீது தலை வைக்கவேண்டாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அதன் மீது கை வைத்திருக்கலாம், தலை சாய்த்திருக்கலாம். சுகாதார சீர்கேடு ஏற்படும்.

  • பாத்ரூமில் கதவுகள், ஃபிளஷ் பட்டன் மீது டிஷ்யூ வைத்து பயன்படுத்துங்கள்.

  • பயணத்திற்கு ஷார்ட்ஸ் தவிர்க்கலாம். சீட்களின் கிருமிகள் இருக்கக் கூடும்

  • தண்ணீர் குடிக்கவேண்டும். பயணத்தின்போது நீரிழிப்பு ஏற்படாமல் பாதுகாப்பது அவசியம்

  • விமான பணியாளர்களை நம்புங்கள், ஏதேனும் விதத்தில் அசௌகரியமாக உள்ளது என்றால், அவர்களின் உதவியை நிச்சயம் கேட்டு பெறுங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?