காய்கறிகளில் கிழங்கு வகைகள் அதிகம். ஆனால் நாம் பெரும்பாலும் சாப்பிடுவது உருளைக் கிழங்குகள் தான். உருளைக்கிழங்கை வைத்து நிறைய விதவிதமான உணவு வகைகளையும் நாம் சமைக்கலாம்.
தற்போது இந்த கிழங்கு வகைகளில் அதிக பயன்பாடு பெற்று வருகிறது சர்க்கரை வள்ளிக் கிழங்கு. இதனை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன?
சர்க்கரைவள்ளி கிழங்கில் நாற்சத்து அதிகம். தவிர இவற்றில் வைட்டமின்கள், மினரெல்கள், ஆண்டிஆக்சிடண்ட்களும் உள்ளன. இவை எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு வழக்கமாக உணவில் சேர்த்துவர நமது குடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் பீடா கரோடீன் அதிகம் உள்ளது. இதனை சரிவர உட்கொள்ளுதல் பார்வை குறைபாடு ஏற்படாமல் நம்மை காக்கிறது. மேலும், கண்களில் பவர் இருக்கிறது என்றால், அதனை சரி செய்ய உதவுகிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு நமது மெம்மரி பவரை மேம்படுத்த உதவுகிறது. இது inflammation எனப்படும் வீக்கத்தை குறைத்து, மறதி ஏற்படாமல் காக்கிறது.
நமக்கு ஸ்டிரெஸ் அதிகமாக இருக்கும்போது இனிப்பாக சாப்பிடவேண்டும் என்ற கிரேவிங் ஏற்படும். இதனால் வெள்ளை சர்க்கரையுள்ள உணவுகளை நாம் நாடுவோம். சர்க்கரை வள்ளிக் கிழங்கு அந்த கிரேவிங்கை கட்டுப்படுத்த உதவுகிறது.
சிலருக்கு கிழங்கு வகைகள் சாப்பிட்டால் அலர்ஜிகள், அல்லது வாவ்யு தொல்லை போன்றவை ஏற்படலாம். உங்கள் மருத்துவரை அணுகி உனவு மாற்றங்களை மேற்கொள்ளுவது அவசியம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust