What happens to your body if you eat ghee every day? Twitter
ஹெல்த்

Health : தினமும் நெய் சாப்பிடுவது உடலுக்கு தீங்கா? நிபுணர்கள் சொல்வதென்ன?

Priyadharshini R

பழங்காலத்திலிருந்தே இந்திய உணவு பழக்கங்களில் நெய்க்கு முக்கிய இடம் உண்டு.

உணவுகளில் தினமும் ஒரு துளி நெய் சேர்ப்பது உணவின் சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

தினமும் சிறிய அளவு நெய் உட்கொள்வதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், எலும்புகளையும் வலுப்படுத்தும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே சமயத்தில் அதிக அளவில் நெய் உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் எச்சரிக்கின்றனர். தினமும் நெய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஊட்டச்சத்து

நெய்யில் ஏ, ஈ மற்றும் டி போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக, நெய்யில் ப்யூட்ரிக் அமிலம் உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

நோயெதிர்ப்பு சக்தி

நெய்யில் உள்ள வைட்டமின் ஏ, குறிப்பாக ஆரோக்கியமான தோல் மற்றும் சவ்வுகளை பராமரிக்க முக்கியமானது. நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.

எடை அதிகரிப்பு

நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், உடல் எடையை நிர்வகிப்பதற்கு உதவும். நீண்ட நேரம் உங்களை பசியில்லாமல் வைத்திருக்க உதவும்.

  • நெய்யை அதிகமாக உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.

  • கொழுப்பு, கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நெய் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்

  • அஜீரண கோளாறால் பாதிக்கப்படும்போது நெய்யைத் தவிர்க்கவும்

  • நெய்யில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதால், இது மூத்த குடிமக்களுக்கு இதயக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நெய்யைத் தவிர்க்கவும்.

நெய்யை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும், நன்மைகள் அதிகம் இருந்தாலும் அதிகம் உட்கொள்ளும் பட்சத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?