What happens when you skip breakfast Twitter
ஹெல்த்

காலை உணவை தவிர்ப்பதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் தெரியுமா?

இளம் பெண்கள் விரதம் போன்ற உணவு பழக்க முறையை முயற்சித்தால், அது மாதவிடாய் வராமல் போக வழிவகுக்குமாம்.

Priyadharshini R

காலை உணவு என்பது கண்டிப்பாக எடுத்துகொள்ள வேண்டிய முக்கிய உணவு என்று வீட்டில் உள்ளவர்கள் அல்லது மருத்துவர்கள் கூறுவதை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள்.

பரபரப்பாக வாழ்க்கையின் ஏதோ ஒரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். சம்பாதிப்பதே இந்த உணவுக்காக தான் என்பதை மறந்து உணவு சாப்பிடக் கூட நேரமில்லை என்கின்றனர் சிலர்.

ஆனால் காலை உணவைத் தவிர்க்க வேண்டாம் என்பது மருத்துவர்கள் அறிவுறுத்தும் முக்கிய விஷயம்!

பொதுவாக நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கும் போது சிலருக்கு நம்மை அறியாமலே கோபம் வரும்.

எரிச்சல், மலச்சிக்கல், முடி உதிர்தல், இன்னும் பல பிரச்னைகள் ஏற்படும். இவை அனைத்தும் சாப்பிடாததால் வரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இளம் பெண்கள் விரதம் போன்ற உணவு பழக்க முறையை முயற்சித்தால், அது மாதவிடாய் வராமல் போக வழிவகுக்குமாம்.

உங்கள் மன மற்றும் உடல் நலனை நன்றாக உணர உங்களுக்கு வழக்கமான மாதவிடாய் தேவை" என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ருஜுதா திவேகர் கூறுகிறார்.

காலை உணவைத் தவிர்ப்பது குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார் மருத்துவர்

அதில், உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளி இருந்தால், அது தலைவலி, ஒற்றைத் தலைவலி ஏற்படுத்தும்.

உண்மையில், உங்கள் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவை நீங்கள் சாப்பிட்டால், நீண்ட நேரம் சாப்பிடாத ஒருவரின் எடை குறையும் என்று அவர் கூறினார்.

Food

ஊட்டச்சத்து உணவியல் நிபுணரின் கூற்றுப்படி,

மணிக்கணக்கான உண்ணாவிரதத்திற்குப் பிறகு எடுக்கும் ஒரு நாளின் முதல் உணவு காலை உணவாகும்.

தினசரி ஆற்றல் உட்கொள்ளலில் 15-25% காலை உணவில் இருந்து வர வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவு பசியைக் குறைக்கிறது, நாள் முழுவதும் தேவைப்படும் ஆற்றல் அதிகரிக்கிறது.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் போன்ற வாடிக்கையாளர்களைக் கொண்ட திவேகர் ,

காலை உணவைத் தவிர்ப்பது உடலில் உள்ள நுண்ணூட்டச்சத்தை பாதிக்கிறது என்று கூறினார்.

ஹீமோகுளோபின் அல்லது கால்சியம் போன்ற நுண்ணூட்டச் சத்துகள் கூட, குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளும்போது, ​​உடலால் நன்றாக உறிஞ்சப்படுகிறது.

ஆனால் உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளி இருந்தால், ஹீமோகுளோபின் மற்றும் கால்சியம் குறைவாக இருக்கும். நீங்கள் டயட்டில் இருந்தால் ஒவ்வொரு உறுப்புக்கும் நிறைய சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

Food

காலை உணவைத் தவிர்ப்பது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்காது என்றும் அவர் கூறினார்.

மாறாக, இது பசி, அமிலத்தன்மை, வீக்கம், பதட்டம், தலைவலி, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, காலை உணவை மக்கள் வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

காலை உணவைத் தவிர்ப்பது குழந்தைகளில் அதிகரித்த எடை மற்றும் உடல் பருமனுடன் தொடர்புடையது என்கின்றனர் நிபுணர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?