Egg Diet Canva
ஹெல்த்

எடையை வேகமாகக் குறைக்கும் முட்டை டயட்… ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

இந்த டயட்டில், நீங்கள் சாப்பிட வேக வைத்த முட்டைகள் மட்டும் அனுமதி. ஆம்லெட், பொடிமாஸ், சாலட் எல்லாம் அனுமதி கிடையாது.

மினு ப்ரீத்தி

உலகம் முழுக்க டயட் பிரியர்கள் நிரம்பி வழிகின்றனர். சைவம், அசைவம், வீகன், பழங்கள் என வகைவகையான பெரிய பட்டியல் உள்ளது. நிறையப் பேர் டயட் பின்பற்றுகிறேன் எனச் சொல்வார்கள். விதவிதமான டயட் பெயர்களைச் சொல்வார்கள். ஃபிட்னெஸ் பேர்வழிகளுக்குப் பிடித்தமான டயட்டாக சொல்லப்படுவது. ‘எக் டயட்’ (முட்டை டயட்).

உடல் எடை குறைப்பதற்காக முட்டை டயட்டில் இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். உண்மையில் இது பலனளிக்கக் கூடியதா?

இந்த முட்டை டயட் கொஞ்சம் பிரபலம் இல்லாத டயட் வகைகளில் ஒன்று. டயட்டின் பெயருக்கு ஏற்றது போல, ஏராளமான முட்டைகளை ஒரு நாளைக்கு மீலாக எடுப்பதுதான் இந்த டயட்டின் வழிமுறை. இதனால் புரோட்டீன் சத்து அதிகமாகக் கிடைக்கிறது. இந்த டயட்டை பின்பற்றினால் மாவுச்சத்து மிகக் குறைவாக உடலில் சேரும். புரோட்டீன் மிக அதிகம். இதைவிடப் பாதி அளவுக்குக் கொழுப்பு சத்துச் சேருகிறது. இதனால், மிகக் குறுகிய நாட்களில் வேகமாக உடல் இளைக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த டயட்டில் உள்ள நன்மை தீமைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

முட்டையில் ஏராளமாகச் சத்துக்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். தினமும் முட்டை சாப்பிடுவது என்பது நல்ல ஐடியாதான். ஆனால், முட்டையில் மாவுச்சத்தும் நார்ச்சத்தும் இல்லாததால், வெகு விரைவிலே உங்களுக்கு மீண்டும் பசி எடுக்கத் தொடங்கும். முட்டை டயட்டை வெகுநாள் பின்பற்றுவது சுலபமான விஷயம் அல்ல. வெறும் முட்டைகளை, ஒரு நாள் முழுக்கப் பசிக்கும்போதெல்லாம் சாப்பிடுவது போரடிக்கின்ற நிலையாக மாறும்.

முட்டை டயட்டின் வகைகள்…

14 நாட்கள் முட்டை டயட்

இரண்டு வாரம் பின்பற்றகூடிய டயட் இது. 2-3 வேளை சாப்பிடலாம். எப்போது சாப்பிட்டாலும் முட்டை மட்டுமே சாப்பிட வேண்டும். நொறுக்குத்தீனி இந்த டயட்டில் அனுமதி இல்லை. எடைக் குறைவது நிச்சயம். ஆனால், இந்த இரண்டு வாரமும் 2-3 வேளை ஒரே விதமான உணவைச் சாப்பிட்டால் வெறுப்பாக இருக்கும். மனநிலை கொஞ்சம் மோசமாக மாறும். இந்த டயட்டில், நீங்கள் சாப்பிட வேக வைத்த முட்டைகள் மட்டும் அனுமதி. ஆம்லெட், பொடிமாஸ், சாலட் எல்லாம் அனுமதி கிடையாது.

முட்டை மட்டுமே - டயட்

இந்த டயட் ஆரோக்கியமான முறையில் எடைக் குறைக்கும் வழி அல்ல... 2-3 மாதங்கள் வெறும் முட்டை மட்டுமே வெவ்வேறு விதமாகச் செய்து சாப்பிடலாம். வேறு எந்த உணவுகளும் இதனுடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஆனால், ஆம்லெட், பொடிமாஸ், வேக வைத்தது என முட்டையை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதைப் பெரும்பாலும் யாரும் பின்பற்றுவதில்லை.

மெடிக்கல் முட்டை டயட்

இந்த டயட்டில் ஒருவர் ஒரு வேளைக்கு ஒரு முட்டை மட்டுமே சாப்பிட வேண்டும். அதாவது, ஒரு பிரெட், ஒரு முட்டை...இதை ஒரு வேளை சாப்பிடலாம். இதனுடன் ஏராளமான பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு துளி எண்ணெய்கூடச் சேர்க்க கூடாது. எத்தனை வேளை பசித்தாலும் ஒரு முட்டை, ஒரு பிரெட், ஏராளமான பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம். இந்த டயட்டை சிலர் பின்பற்றி எடை குறைத்ததாகச் சொல்கின்றனர். மேற்சொன்ன இரண்டு டயட்களை விட இந்த டயட்டை பின்பற்ற சுலபமாக இருப்பதாகவும் சொல்கின்றனர். ஆரோக்கியமான முறையில் எடை குறைவதாகவும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

முட்டை டயட்டில் உள்ள தீமைகள்…

பலன்களைவிடத் தீமைகள்தான் அதிகம் இந்த முட்டை டயட்டில்…

அதிகக் கொழுப்பு - ஆம்… முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் அதிகக் கொழுப்பு உள்ளது. தினந்தோறும் முட்டை சாப்பிடுவதால், அதிக கொழுப்பு உடலில் சேரும். இதனால் கொழுப்பு அதிகமாகி ரத்த அழுத்தம், மேலும் இது தொடர்பான தொந்தரவுகள் ஏற்படக் கூடும். கல்லீரல், செரிமானப் பாதிப்பு வரும். சிறுநீரகங்களும் பாதிக்கும்.

நார்ச்சத்து இல்லை - முட்டையில் நார்ச்சத்து இல்லாததால், செரிமானப் பிரச்னை வரும். மலச்சிக்கல் ஏற்படும். மேற்சொன்ன முதல் இரண்டு டயட்டை பின்பற்றுவோருக்கு கடுமையான மலச்சிக்கலும், அஜீரணம், ஏப்பம், வாயு தொல்லைகள் வரலாம்.

சத்து குறைபாடு - 14 நாட்களோ, ஒரு மாதமோ வெறும் முட்டை மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான மற்ற சத்துகள் கிடைக்காமல் போகும். உணவின் மீது வெறுப்பு உண்டாகும்.

மனநிலை மாற்றம் - ஒரே உணவைச் சாப்பிட்டால் வெறுப்பு, சலிப்பு, கடுப்பு, எரிச்சல் மனநிலை, கோபம், காரணம் தெரியாத மன உளைச்சல் உண்டாகலாம். ஸ்ட்ரெஸ், சோர்வு உண்டாகலாம். தூக்கமின்மை உண்டாகலாம்.

முட்டை டயட்டில் உள்ள நன்மைகள்

கட்டாயமாக, எடை குறைவது உறுதி. முட்டை சத்தான உணவுதான். ஆனால், ஒரே உணவை மீண்டும் மீண்டும் சாப்பிட சலிப்பு கொடுக்கும். ஆதலால், இந்த டயட்டை பின்பற்றுவோர் அதிக நேரம் உணவு இல்லாமல் இருப்பதால் எடை விரைவில் குறையும்.

முதல் இரண்டு டயட்டைவிட மூன்றாவது டயட் பின்பற்றுவது சுலபம். இந்த 3-வது டயட்டை குறுகிய காலத்துக்கு மட்டும் பின்பற்றிப் பலன் பெறலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?