Why do our fingers and toes get wrinkly in water? Find out here Twitter
ஹெல்த்

தண்ணீரில் நீண்ட நேரம் இருந்தால் ஏன் விரல்களில் சுருக்கம் ஏற்படுகிறது தெரியுமா?

40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வெதுவெதுப்பான நீரில் 3.5 நிமிடங்கள் நம் விரல் நுனியில் சுருக்கம் ஏற்படத் தொடங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Priyadharshini R

நீண்ட நேரம் தண்ணீரில் ஊறவைத்த பிறகு விரல் நுனிகள் மற்றும் கால்விரல்கள் சுருக்கமடைகின்றன. எதனால் இப்படி ஆகிறது, பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

நாம் தண்ணீரில் மூழ்கும்போது முகம் அல்லது மற்ற உடல் பாகங்களைக் காட்டிலும், நம் கை விரல்கள் மற்றும் கால்விரல்கள் அதிகம் சுருக்கமடைகிறது.

40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வெதுவெதுப்பான நீரில் 3.5 நிமிடங்கள் நம் விரல் நுனியில் சுருக்கம் ஏற்படத் தொடங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம் 20 டிகிரி செல்சியஸ் போன்ற குளிர்ந்த வெப்பநிலையில், இந்த செயல்முறை தொடங்க 10 நிமிடங்கள் வரை ஆகலாம் என்கின்றனர்.

சவ்வூடுபரவல் எனப்படும் ஒரு செயல்பாட்டின் மூலம் செல்களுக்குள் நீர் பாய்ந்து, தோலின் மேல் அடுக்குகள் வீங்கி, நீர் மூலக்கூறுகள் நகரும் போது, ​​விரல் நுனியில் சுருக்கம் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் அதன் பின்னர் தண்ணீரில் நனைவதால் ஏற்படும் இத்தகைய சுருக்கங்கள் நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் விரல்களில் சுருக்கங்கள் ஏற்பட தொடங்கும்போது, விரல்களில் ரத்த ஓட்டம் குறைவதை கண்டறிந்துள்ளனர்.

இப்படி பல்வேறு அறிவியல் காரணங்களுக்காக விரல் நுனியில் சுருக்கம் ஏற்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?