Health : கொட்டாவி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மை உடையதா? ஆய்வு சொல்வதென்ன? Twitter
ஹெல்த்

Health : கொட்டாவி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மை உடையதா? ஆய்வு சொல்வதென்ன?

கொட்டாவி விடுவது தவறான செயல் இல்லை என்றாலும், பொது இடத்தில் தொடர்ந்து கொட்டாவி விட்டால் பல சமயங்களில் கொஞ்சம் சங்கடமாக இருக்கும்.

Priyadharshini R

தூக்கம் வரும்போது கொட்டாவி வருவது வழக்கம். பொதுவாக கொட்டாவி விடும்போது ஒரு குழுவாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு கொட்டாவி வந்தால் நமக்கும் வந்துவிடும் ஆகவே கொட்டாவி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மை உடையதா? விரிவாக காணலாம்.

ஆய்வுகளின்படி,

கொட்டாவி தொற்றக்கூடியது என கூறப்பட்டுள்ளது. அபேய்லர் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் கல்லூரி மாணவர்களின் வெவ்வேறு முக அசைவுகள் ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி ஒருவருக்கு கொட்டாவி வருவதை பார்த்து அனிச்சையாக மற்றொருவருக்கும் கொட்டாவி வருவதாக கூறியுள்ளனர்.

அனிச்சைச் செயல் (Reflex) என்பது ஒருவரின் விருப்பமோ, சுய உணர்வோ இல்லாமல் ஒரு தூண்டுதலுக்கேற்ப தானாக நடைபெறும் செயல் ஆகும்.

கொட்டாவி விடுவதை எப்படி நிறுத்துவது ?

கொட்டாவி விடுவது தவறான செயல் இல்லை என்றாலும், பொது இடத்தில் தொடர்ந்து கொட்டாவி விட்டால் பல சமயங்களில் கொஞ்சம் சங்கடமாக இருக்கும்.

அதை நிறுத்த சில வழிகள்:

ஆழமாக சுவாசிக்கவும்

நீங்கள் அதிக சோர்வுடனோ அல்லது தூக்கத்தை இழந்தாலோ கொட்டாவி அதிகம் வரும். ஆகவே மூக்கு வழியாக சுவாச பயிற்சி எடுப்பது இங்கு முக்கியமானதாகும்

மூளைக்கு வேலை

நிபுணர்களின் கூற்றுப்படி, சோம்பேறித்தனமான, தளர்வான வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள். எனவே, சுறுசுறுப்பாக ஏதாவது செய்ய உங்கள் மூளையைத் தூண்டுவது முக்கியம்.

உங்கள் உடல் கொட்டாவி விடும்போது, ​​உங்கள் மனதை திசைதிருப்ப 5-10 நிமிடங்களுக்கு நடை பயிற்சி செய்ய முயற்சிக்கவும்.

தலைக்கு குளிர்ச்சி

உங்கள் மூளை அதிக வெப்பமடையும் போது கொட்டாவி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, நீங்கள் சோர்வாக உணரும்போது ஒரு ஐஸ் கட்டியை எடுத்து உங்கள் தலையில் ஒரு நிமிடம் அழுத்தவும். இது உங்கள் தலையை குளிர்ச்சியடையச் செய்து, புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

மேலும் குளிர்வான உணவுகளை நீங்கள் எடுக்கலாம் நீங்கள் கொட்டாவி விடத் தொடங்கியவுடன் சில குளிர்ந்த தின்பண்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

குளிரூட்டப்பட்ட திராட்சை, பெர்ரி, அல்லது வேறு ஏதேனும் குளிர்சாதன உணவுகள் உங்கள் உடலின் வெப்பத்தை தணிக்கும்

Sleep (Rep)

தூக்கத்தை ஒழுங்குபடுத்துங்கள்

நாள் முழுவதும் சோர்வாக உணராமல் இருக்க, ஒவ்வொரு நாளும் குறைந்தது 7-9 மணிநேரம் சீரான மற்றும் தடையற்ற தூக்கத்தை வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?