woman Twitter
ஹெல்த்

Women Health : 40 வயதில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் | Nalam 360

ஹார்மோன் மாற்றம் என்பது பதின்பருவத்தினர் மட்டும் சந்திக்கும் பிரச்னை என நினைக்கிறார்கள். ஆனால், 40 வயதிலும் ஹார்மோன் மாற்றத்தைப் பெண்கள் எதிர்கொள்ள நேருகிறது. மாதவிடாய் நிற்கும் காலத்தை உடலளவிலும் மனதளவிலும் எதிர் கொள்ளப் பெண்கள் தயாராக இருக்க வேண்டும்.

Antony Ajay R

40 வயதைக் கடக்கும் போது பெண்கள் தங்களது ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பிள்ளைகள் வளர பொறுப்புகள் அதிகரிக்கும், அதிக பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் இது போதாதென்று உடல் நலக் குறைபாடுகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மெனோபாஸ், ஈஸ்ட்ரோஜன் குறைபாடு, மூட் ஸ்விங், எலும்புகள் தொடர்பான பிரச்னை, பிறப்புறுப்பில் வறட்சி எனா நாற்பதுகளில் ஏற்படும் பிரச்னைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றை எதிர்கொள்ள உடல் ஆரோக்கியமும் உடலைப் பற்றிய முழுமையான அறிவும் வேண்டும்.

ஹார்மோன் மாற்றம் என்பது பதின்பருவத்தினர் மட்டும் சந்திக்கும் பிரச்னை என நினைக்கிறார்கள். ஆனால், 40 வயதிலும் ஹார்மோன் மாற்றத்தைப் பெண்கள் எதிர்கொள்ள நேருகிறது. மாதவிடாய் நிற்கும் காலத்தை உடலளவிலும் மனதளவிலும் எதிர் கொள்ளப் பெண்கள் தயாராக இருக்க வேண்டும்.

பெண்கள் ஆரோக்கியத்தைக் காக்க உணவு முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வது அவசியம். அப்படி எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளைக் காணலாம்.

புரத சத்து

புரத சத்துமிக்க உணவுகள்

புரதச்சத்து மிக்க உணவுகளை எடுக்கத்தவறினால் தசைகள் பலவீனமாகலாம். இதனைத் தடுக்க பருப்பு வகைகளை உட்கொள்ளலாம். பருப்பு வகைகள் சிலருக்கு வாயுத் தொலைக்கொடுக்கலாம். அதனால் கவனமாக உட்கொள்ள வேண்டும்.

காளான் ஒரு நல்ல சத்துள்ள உணவு. இதில் புரதச்சத்து அதிகம். 100 கிராம் இறைச்சியில் புரதத்தின் அளவு 18%, மீனில் 28%. ஆனால் காளானில் 33% புரதச் சத்து உள்ளது. காளானில் கொழுப்புச்சத்தும், மாவுச்சத்தும் குறைவு. ஆகையால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது சிறந்த உணவாகும்.

இத்துடன் பால், முட்டை (மஞ்சள் கரு நீக்கி), சிக்கன் போன்றவற்றையும் உண்ணலாம். இவற்றில் கொழுப்புச் சத்து இருப்பதனால் அளவாக உண்ணலாம். சோயாவை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இதில் புரதம் மட்டுமின்றி சுண்ணாம்புச் சத்தும் உள்ளது.

சுண்ணாம்புச் சத்து

40 வயதுக்கு மேல் எலும்பு தன் வலிமையை இழக்கிறது. ஆகையால் முதியவர்கள் சற்று கீழே விழுந்தாலும் எலும்பு முறிவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்க்கச் சுண்ணாம்புச் சத்துள்ள உணவுகளைச் சற்று அதிகமாகச் சாப்பிட வேண்டும். பால், கேழ்வரகு, முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை, அகத்திக் கீரை, கருவேப்பிலை, மீன், நண்டு, இறால், சுறா ஆகியவற்றில் சுண்ணாம்புச் சத்து நிறைய உள்ளது.

நார்ச்சத்து

மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டியது மிக அவசியம். கேழ்வரகு, கோதுமை, கீரை, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், புடலங்காய், பாகற்காய், பேரீச்சம் பழம், மாம்பழம், அத்திப் பழம், கொய்யாப் பழம், மிளகு, கொத்தமல்லி, மிளகாய், ஓமம், வெந்தயம், சுண்டைக்காய் போன்றவற்றில் நார்ச்சத்து உள்ளது. முட்டை, பால் மற்றும் இறைச்சியில் நார்ச்சத்து இல்லை.

சிறுதானியங்கள்

சிறுதானியங்கள்

மூன்று வேளையும் அரிசி உண்பதனால் உடல் எடை அதிகரிக்கும். நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும். இதனால் அரிசியை குறைத்துக்கொண்டு சிறுதானியங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். உதாரணம்: கொள்ளு, ராகி, சோளம், கம்பு, தினை போன்றவை உட்கொள்ளலாம்.

இவற்றுடன் சரியாகத் தண்ணீர் பருக வேண்டியதும் அவசியம். 40களில் துரித உணவுகளை முடிந்தவரைத் தவிர்த்துவிட வேண்டும். மாவுச்சத்து மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளையும் குறைக்க வேண்டும். உணவில் உப்பு மற்றும் சர்க்கரையைக் குறைக்கலாம். Life Starts at 40 என்று ஆங்கிலத்தில் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுக்கேற்றார் போல புதிய வாழ்க்கையை புதிய உணவுப் பழக்கத்தை நாற்பதுகளில் தொடங்குங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?