World AIDS Day Canva
ஹெல்த்

World Aids Day: எய்ட்ஸ் குறித்த கட்டுக்கதைகளும், தெளிவான உண்மைகளும் - விரிவான பார்வை

ஆன்ட்டிரெட்ரோவைரல் சிகிச்சை (Antiretroviral Treatment) மூலம் ஓரளவுக்கு எய்ட்ஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடிகிறது. சரி எய்ட்ஸ் குறித்த கட்டுக் கதைகள் என்ன..? வாருங்கள் பார்ப்போம்.

Gautham

உலக எய்ட்ஸ் தினம். கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஒன்றாம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள உறுப்பு நாடுகள் அனைத்தும் உலக எய்ட்ஸ் தினத்தை கொண்டாடி வருகின்றன.

எய்ட்ஸ் என்பது என்ன?

ஹியூமன் இம்யூனோடெஃபிசியன்சி வைரஸ் (Human Immunodeficiency Virus) என்கிற நுண்ணுயிரி மனித உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி மண்டலத்தை மிகக் கடுமையாக பாதிக்கும்.

ஹெச் ஐ வி தொற்றால் நோய்வாய்ப்பட்டவர்களின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தால், எந்த ஒரு நோயையும் எதிர்த்து சிறப்பாக செயல்படாது.

இதைத்தான் எய்ட்ஸ் என்கிறார்கள். எய்ட்ஸ் ஒரு உயிர்கொல்லி நோயாகவே தொடர்ந்து வருகிறது.

இன்றைய தேதிக்கு மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வசதி புதிய உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் காரணத்தால், ஆன்ட்டிரெட்ரோவைரல் சிகிச்சை (Antiretroviral Treatment) மூலம் ஓரளவுக்கு எய்ட்ஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடிகிறது.

சரி எய்ட்ஸ் குறித்த கட்டுக் கதைகள் என்ன..? வாருங்கள் பார்ப்போம்.

பேஷன்ட் ஜீரோ என்கிற நபரிடமிருந்து தான் அமெரிக்காவில் எய்ட்ஸ் பரவியது:

கேட்டன் டுகாஸ் (Gaetan Dugas) என்கிற பிரெஞ்சு கனடியை விமான பணியாளர் 1980ஆம் ஆண்டுக்கு முன்பே எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டதாகவும், அமெரிக்காவில் ஏற்பட்ட முதல் 248 எச்ஐவி தொற்றில் 40 பேருடன் இவருக்கு தொடர்பு இருந்தது என்றும் டைம்ஸ் பத்திரிகையிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.

அதோடு இவர் பல ஆண் நண்பர்களோடு பாலுறவு வைத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆக இவர்தான் அந்த பேஷன்ட் ஜீரோவாக கருதப்பட்டார்.

ஒட்டுமொத்த அமெரிக்காவிலேயே எய்ட்ஸ் போன்ற ஒரு உயிர்கொல்லி நோயைக் கொண்டு வந்ததற்கு இவரே காரணம் என்றும் குறை கூறப்பட்டார்.

ஆனால் 2016 ஆம் ஆண்டு, இக்கருத்து முற்றிலும் தவறு என விஞ்ஞானிகள் ஒரு உண்மையை போட்டு உடைத்தனர்.

முன்பே புழக்கத்தில் இருந்த மரபணு திரிபு:

1978 - 79 காலகட்டங்களில் நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ பகுதிகளில் சுமார் 16,000 பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து வைத்திருந்தது அமெரிக்கா.

அந்த ரத்த மாதிரிகளை மீண்டும் புதிதாக மரபணு பகுப்பாய்வு (genetic analysis) செய்த போது ஒரு மிகப்பெரிய உண்மை வெளியே வந்தது.

கேட்டன் டுகாஸ் பாதிக்கப்பட்டிருந்த எய்ட்ஸ் மரபணு திரிபு அதற்கு முன்பே புழக்கத்தில் இருந்த ஒன்றுதான் என கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எய்ட்ஸ் திரிபு 1967 ஆம் ஆண்டு ஆப்ரிக்காவில் இருந்து ஹைதிக்கு பரவி இருக்கலாம் என்றும், 1971 ஆம் ஆண்டு வாக்கில் இருந்து நியூயார்க்கிலும், 1976ஆம் ஆண்டு நியூயார்க்கில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு பரவி இருக்கலாம் என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த முழு ஆய்வும் "நேச்சர்" என்கிற சஞ்சிகையில் விளக்கமாக பிரசுரிக்கப்பட்டது.

எய்ட்ஸுக்கு எதிராக இங்கு மட்டுமே தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன:

எய்ட்ஸ் நோய்க்கு எதிராக நியூயார்க், கலிபோர்னியா, வாஷிங்டன் டி சி ஆகிய பகுதிகளில் இருந்து பெரிய மனிதர்கள், பிரபலங்கள் பிரசாரங்களை முன்னெடுத்தனர் என்பதற்கு மாற்று கருத்து இல்லை.

ஆனால் அதைத் தாண்டி பலரும் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரச்சாரங்களை அமெரிக்கா முழுக்க முன்னெடுத்ததாக தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியர் டேவிட் ரோமன் கூறுகிறார்.

எய்ட்ஸ் நெருக்கடி முடிந்தது

எய்ட்ஸ் ஒரு பழைய காலத்து நோய், இப்போதெல்லாம் அது மிகவும் அரிதிலும் அரிதாகவே வருகிறது.

அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரிதாக இல்லை என ஒரு அபத்தமான செய்தி அல்லது கட்டுக்கதை சுற்றிக் கொண்டிருக்கிறது.

எய்ட்ஸ் நோய்க்கு எதிரான மருத்துவ வசதிகளும் சிகிச்சைகளும் மேம்பட்டு இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் சொல்கின்றன.

அதிகரித்த பாதிப்பு எண்ணிக்கை:

2018 ஆகஸ்ட் மாதம் "யூ என் எய்ட்ஸ்" அமைப்பின் கணக்குப்படி கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா போன்ற பகுதிகளில் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டில் 60,000 ஆக இருந்த எச்ஐவி பாதிப்பு 2017 ஆம் ஆண்டு 1.20 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.

உலகிலேயே மிகப்பெரிய நில பரப்பை கொண்ட ரஷ்யா நாட்டில், 1987 ஆம் ஆண்டு தான், அதிகாரபூர்வமாக அதன் தலைநகரமான மாஸ்கோவில் முதல் எய்ட்ஸ் நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு வரை கணக்கெடுத்தால் அந்நாட்டில் 10 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

போதை ஊசி பழக்கம்:

2017 ஆம் ஆண்டு நிலவரப்படி ரஷ்யாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 39 சதவீத நோயாளிகள், ஊசி மூலம் போதைப்பொருள் செலுத்திக் கொள்ளும் பழக்கம் இருந்தவர்கள் என்றும், அதன் வழியாக எய்ட்ஸ் நோய் பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டாலே மரணம் தான்:

இல்லை, ஆன்ட்டிரெட்ரோ வைரல் சிகிச்சை முறை வந்த பின், ஒரு மனிதரின் சராசரி வாழ்நாளை எய்ட்ஸ் தொற்று ஏற்பட்ட பிறகும் வாழ முடியும் என்கிறார் Kaiser Permanente எய்ட்ஸ் மையத்தின் மருத்துவர் மைக்கேல் ஹார்பெர்க்.

எய்ட்ஸ் நோயாளிகளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது:

தவறான கருத்து. ஒரு பெண் ஹெச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், முறையாக மருத்துவரை அணுகி, ஏ ஆர் டி சிகிச்சை பெற்று, கருவுற்று, மருந்து மாத்திரைகள் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்படாமல் பெற்றெடுக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் வலைதளம்.

ஹெச் ஐ வி தொற்று ஏற்பட்டாலே எய்ட்ஸ் தானா?

இல்லவே இல்லை. ஹெச் ஐ வி என்பது ஒரு வகையான தொற்று. எய்ட்ஸ் என்பது ஹெச் ஐ வி தொற்றினால் ஏற்படும் ஒரு நோய். இந்த தொற்று ஏற்பட்ட உடனேயே சிகிச்சைகளைத் தொடங்கினால் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கலாம், உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்கிறது ஹெல்த் லைன் வலைதளம்.

எய்ட்ஸ் இப்போதும் நம் கண் முன் இருக்கும் நோய், அதை அலட்சியப்படுத்தாமல், சரியாக எதிர்கொள்ள வேண்டும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல முறையில் நடத்தப்பட வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?