ரஃபேல் விமானங்கள் Twitter
இந்தியா

பீஸ்ட் படத்தில் விஜய் குறிப்பிடும் ரஃபேல் விமானம் குறித்த 10 தகவல்கள்

NewsSense Editorial Team

பீஸ்ட் படத்தில் வீரராகவன் (விஜய்) குறிப்பிடும் ரஃபேல் விமானங்கள் குறித்த இந்த 10 தகவல்களை இங்கே தொகுத்துள்ளோம்.

ரஃபேல் விமானங்கள்

1. பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானம் பல்வகை தாக்குதல் நடத்தக்கூடிய உயர்ரக விமானங்களில் நடுத்தரமான ஒன்றாகும். இது போர் விமானங்களில் மிகவும் நவீன 4வது தலைமுறை என்று கூறப்படுகிறது. இது பலவித ஆயுதங்களை எடுத்துச் செல்வதுடன், இலக்கைத் துல்லியமாக தாக்கும் திறனையும் கொண்டுள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் அதன் உள் அமைப்புகளிலேயே சேதமடையாத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் கடினமாக சூழலில் பைலட் உயிர்வாழ்வதற்கான அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.

2. ரஃபேல் போர் விமானம் இரண்டு என்ஜின்கள் மூன்று 2000 லிட்டர் எரிபொருள் டேவங்குகளைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. இந்த போர் விமானம் 350 கிமீ தூரம் பரப்பளவைக் கண்காணிக்கும் ரேடரைக் கொண்டுள்ளது. எதிரி விமானங்களைப் பார்த்த உடன் சுடுவதையும், எலக்ட்ரானிக் போர் முறையையும் கொண்டுள்ளது.

3. ரஃபேல் போர் விமானம் ஆறு வான்வழி ஏவுகணைகளையும் மற்றும் ஆறு சிறப்புக் குண்டுகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. ரஃபேல் விமானம் பார்வைக்கு அப்பால் உள்ள இலக்கை வான் வழி தாக்குதல் ஏவுகணை மூலம் அழிக்கும். மற்றும் ஆகாயத்திலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகளையும் இந்தியாவின் பிரம்மோஸ் என்ஜி ஏவுகணையும் இதில் இணைக்கலாம்.

ரஃபேல் விமானங்கள்

4. ரஃபேல் விமானம் ஆகாயத்தில் பறந்தவாறே எரிபொருள் நிரப்பும் திறன் உள்ளது. அதே போன்று இந்த விமானம் மற்ற விமானத்திற்கும் எரிபொருளை அனுப்பி நிரப்ப முடியும். இந்திய விமானப்படை கோரிய சில மேம்படுத்தல்களுடன் ரஃபேல் விமானம் தயாரிக்கப்பட்டது.

5. ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கே உரித்தான பல மாற்றங்களைக் கொண்டுள்ளன. இஸ்ரேலிய ஹெல்மெட் பொருத்தப்பட்ட டிஸ்ப்ளேக்கள், லோ பேண்ட் ஜாமர்கள், ரேடார் எச்சரிக்கை ரிசீவர்கள், மற்றும் கண்காணிப்பு அமைப்புகள், 10 மணி நேர விமானத் தரவுப் பதிவு போன்றவை இதில் அடங்கும்.

6. மெரிக்னாக்கில் உள்ள டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தில் ரஃபேல் ஜெட் ஒப்படைப்பு விழா நடந்தது. 2016 ஆம் ஆண்டில், புது தில்லி மற்றும் பாரிஸ் இடையே 7.8 பில்லியன் யூரோ செலவில் 36 ரஃபேல் விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

7. இந்தியில் 'ஆந்தி' அல்லது காற்றின் வேகம் என்று பொருள்படும் இந்த விமானம் அதன் பெயருக்கு ஏற்றதாக இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார். ரஃபேல் போர் விமானங்களைக் கையாள்வதற்கான பறக்கும் பயிற்சி, பராமரிப்பு பயிற்சி மற்றும் தளவாடங்களைக் கையாள பயிற்சி ஆகியவற்றிற்காக ஏராளமான இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு பிரான்சில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகப் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

8. மொத்தம் உள்ள 36 ரஃபேல் ஜெட் விமானங்களில் முதல் அணியில் 4 ரஃபேல் ஜெட் விமானங்கள் மே 2020இல் இந்தியாவை வந்தடைந்தது. அனைத்து ரஃபேல் போர் விமானங்களும் 2022க்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்சில் ரஃபேல் விமானத்தில் சவாரி செய்து பார்த்தார் ராஜ்நாத் சிங்.

9. எகிப்து, பிரான்ஸ், கத்தார் ஆகிய நாடுகளுக்குப் பிறகு ரஃபேல் போர் விமானங்கள் மூலம் தனது விமானப்படையை வலுப்படுத்திய நான்காவது நாடு இந்தியா. ரஃபேல் போர் விமானம், இந்திய விமானப்படை அணியில் இருக்கும் இரண்டாவது பிரெஞ்சு போர் விமானமாகும். இந்திய விமானப் படையில் ஏற்கனவே பிரெஞ்ச் தயாரிப்பான மிராஜ் 2000 உள்ளது.

10. 36 ரஃபேல் போர் விமானங்கள் பஞ்சாபில் உள்ள அம்பாலா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா ஆகிய இடங்களில் இருக்கும். விமானப்படையின் துணைத்தலைவர் ஏர் மார்ஷல் ஹர்ஜித் சிங் அரோரா கூறுகையில், இரண்டு எல்லைகளைப் பாதுகாப்பதில், இந்திய விமானப்படைக்குத் தேவையான வலிமையான வான் பாதுகாப்பை ரஃபேல் விமானங்கள் நிச்சயமாக வழங்கும் என்றார். ரஃபேல் விமானம் இந்தியாவின் வான் பாதுகாப்பிற்கான மிகவும் சக்திவாய்ந்த விமானம் என்று மேலும் அவர் கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?