ஒரு சொந்த வீடு. இது இந்திய மக்களில் பலரும் துரத்திக் கொண்டிருக்கும் பெருங்கனவு.
ஒரு பெரிய ஹால், அதில் ஒரு சூப்பர் சோஃபா, நல்ல பெரிய42 இன்ச் எல் இ டி டிவி, அதற்கு தகுந்தாற் போல ஒரு கிராண்ட் டீபாய்... ஒரு பெரிய கிங் சைஸ் பெட் கொண்ட படுக்கை அறை, அடிக்கும் சென்னை வெயிலுக்கு இதமாக 25 டிகிரிக்கு ஏசி, மற்றொரு படுக்கையறை, ஒரு நல்ல மடியூலர் கிச்சன், ஒரு பிரமாதமான பூஜை அறை... என இந்தியர்களுக்கு வீட்டை விவரிக்கும் கனவுக்கு பக்கங்கள் போதாது.
இங்கு சில இந்தியர்கள் கட்டிமுடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டை விவரிக்கவே வார்த்தை போதவில்லை. இப்படி இந்தியாவின் பிரம்மாண்ட விலை உயர்ந்த டாப் 10 வீடுகளைத் தான் இங்குப் பார்க்கப் போகிறோம்.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானி இந்த வீட்டில்தான் வசித்து வருகிறார். அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தைச் சேர்ந்த பெர்கின்ஸ் அண்ட் வில் இந்த வீட்டை வடிவமைத்த வடிவமைப்பு பொறியாளர்கள்.
27 மாடி கொண்ட இந்த சொகுசு வீட்டில் 80 இருக்கைகள் கொண்ட சினிமா தியேட்டர், சிகை அலங்கார நிலையம், ஐஸ் கிரீம் பார்லர், நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம் என எதற்கும் வெளியே செல்லத் தேவையில்லை. எல்லாமே வீட்டுக்குள்ளேயே இருக்கின்றன. இதன் மதிப்பு 6,000 கோடி ரூபாய் முதல் 12,000 கோடி ரூபாயாக இருக்கலாம் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை.
இந்தியாவின் புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களில் ஒன்றான ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கௌதம் சிங்கானியாவின் வீடு இது. இந்தியாவின் பிரமாதமான விலை உயர்ந்த வீடுகள் பட்டியலில் இதற்கு இரண்டாம் இடம். 30 மாடிகள் கொண்ட இந்த வீட்டின் பரப்பளவு 16 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கலாம். கிட்டத்தட்ட 6 மாடுகளுக்கு மேல், அவரது வாகனங்களை நிறுத்தி வைக்கும் இடமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு காலத்தில் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக வலம் வந்த அனில் அம்பானியின் வீடு இது. சுமார் 70 மீட்டர் உயரம் கொண்ட இக்கட்டடத்தில் ஹெலிகாப்டர்கள் எல்லாம் நிறுத்தும் வசதிகள் உண்டு.
வீட்டின் மொத்த பரப்பளவு சுமார் 16 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கலாம். வீட்டின் மதிப்பு சுமார் 5,000 கோடி ரூபாய் இருக்கலாம் எனப் பல வலைத்தளங்கள் கூறுகின்றன.
20 படுக்கையறைகள் கொண்ட இந்த ஜதியா ஹவுஸ் வீட்டின் மொத்த பரப்பு சுமார் 30 ஆயிரம் சதுர அடிக்கு மேல் இருக்கலாம். இந்த வீட்டுச் சுவரின் மேற்பரப்பு மற்றும் சீலிங்குகள் பர்மா தேக்கு மரங்களால் செய்யப்பட்ட வைக்கலாம்.
இந்த வீடு இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழும நிறுவனத் தலைவர் குமாரமங்களம் பிர்லாவுக்குச் சொந்தமானது. வீட்டின் மதிப்பு 425 கோடி ரூபாயாம்.
நம் தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் மன்னத் என்று கூறியவுடன் அடையாளம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்தி சினிமாவில் மன்னத் என்றால் அது பாலிவுட் மன்னன் ஷாரூ கானின் வீடு என அனைவரும் அறிவர். இந்தியாவின் மிக சொகுசான வீடுகளில் ஷாருக்கானின் வீடும் ஒன்று.
மும்பையில் பாந்திரா பகுதியில் இருக்கும் இந்த வீடு சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மன்னத் என்றால் விருப்பம், பிரார்த்தனை, வேண்டுகோள் எனப் பொருள்படுகிறது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் LBZ (லுட்யன்ஸ் பங்களா சோன்) என ஓர் இடம் உண்டு. அப்பகுதி முழுக்க முழுக்க நூற்றுக்கணக்கான பங்களாக்கள் இருக்கும். டெல்லி நகரத்திலேயே மிகவும் சொகுசான பகுதி இது. அங்குதான் ஜிண்டால் ஹவுஸ் அமைந்திருக்கிறது. 3 ஏக்கர் பரப்பில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த பங்களா சுமார் 125 முதல் 150 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கலாம் என வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
எஸ்ஸார் குழுமம் மற்றும் ரூயா சகோதரர்களுக்குச் சொந்தமான இந்த கட்டடம் டெல்லியில் அமைந்திருக்கிறது. 2.24 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த கட்டிடம் சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது என்று கூறப்படுகிறது.
ரானா கபூர் என்றவுடன் ஏதோ இந்தி நடிகர் என்று நினைத்துவிட வேண்டாம். யெஸ் பேங்க் நினைவிருக்கிறதா? அவ்வங்கியின் முன்னாள் தலைவர் ரானா கபூர். மும்பை பகுதியில் டோனி அல்டா மவுன்ட் சாலையில் ரானா கபூர் ஒரு பிரமாதமான வீட்டை கட்டமைத்தார். அந்த வீட்டின் மதிப்பு சுமார் 120 கோடி ரூபாய்.
'சட்டா பே சட்டா' என்கிற இந்தி படப்பிடிப்பின் நிறைவுக்கு பிறகு, ஜல்சா என்கிற வீட்டை அமிதாப்பச்சனுக்கு பரிசாக கொடுத்தார் 'ஷோலே' திரைப்பட இயக்குநர் ரமேஷ் சிப்பி. பத்தாயிரம் சதுர அடிக்கு மேல் கொண்ட இந்த வீடு சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது.
கிங்ஃபிஷர் புகழ் விஜய் மல்லையா நினைவில் இருக்கிறாரா? அவர்தான் 'ஒயிட் ஹவுஸ் இன் தி ஸ்கை' என்கிற பெயரில் இந்தியாவின் சொகுசான இந்த வீட்டின் உரிமையாளர்.
பெங்களூரில் இருக்கும் இந்த வீடு சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பு மிக்கதாக பல்வேறு வலைதளங்களில் கூறப்படுகிறது. ஒரு இந்திய சாமானியனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அத்தனை சொகுசு வசதிகள் இந்த வீட்டில் உள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust