இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) மிகவும் புகழ்பெற்ற, மதிப்புமிக்க நிறுவனமாகும். மேலும் அதன் மாணவர்களை வேலைக்கு எடுப்பதற்கு உலகின் முக்கிய நிறுவனங்கள் எல்லாம் முன் வரிசையில் நிற்கின்றன.
ஐஐடியில், தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் மாணவர்கள் ஏராளமான உள்ளனர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த வரிசையில், ஐஐடியில் படித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் 11 பேரை இங்கே பார்க்கலாம்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஐஐடி காரக்பூர்
1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி, ஹரியானாவின் சிவானியில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஐஐடி காரக்பூரில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தவர்.
ரகுராம் கோவிந்த ராஜன் டெல்லி ஐஐடி
இந்தியப் பொருளாதார நிபுணரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் கோவிந்த ராஜன், டெல்லி ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். 1985-இல் பட்டப்படிப்பின் போது, சிறந்த ஆல்ரவுண்டர் மாணவராகத் தங்கப் பதக்கத்தையும் பெற்று இருக்கிறார்.
வினோத் கோஸ்லா டெல்லி ஐஐடி
தொழில்முனைவோர், முதலீட்டாளர் மற்றும் தொழில்நுட்பவியலாளர், வினோத் கோஸ்லாவும் ஐஐடியில் படித்தவர்தான். சன் மைக்ரோசிஸ்டம்ஸின் இணை நிறுவனர் மற்றும் கோஸ்லா வென்ச்சர்ஸின் நிறுவனரும் இவரே… மேலும், இவர் ஒரு இந்திய-அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் துணிகர முதலீட்டாளர் என்று புகழப்படுகிறார். இவரும் டெல்லி ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் பி.டெக் முடித்தவர்தான். 2014 இல் ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, அமெரிக்காவில் உள்ள 400 பணக்காரர்களில் கோஸ்லாவும் ஒருவர்.
தீபிந்தர் கோயல் டெல்லி ஐஐடி
இந்தியாவின் மிகப்பெரிய உணவு விநியோக செயலியான Zomato-வின் நிறுவனர் மற்றும் CEO தீபிந்தர் கோயல். தீபிந்தர் 2005 ஆம் ஆண்டு ஐஐடி டெல்லியில் கணிதம் மற்றும் கணினியில் பட்டப்படிப்பை முடித்தவர்.
சேத்தன் பகத் டெல்லி ஐஐடி
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 5 point Someone, 3 Mistakes of My Life and Half Girlfriend ஆகிய புத்தகங்களின் ஆசிரியர் இஞ்சினியரான, சேத்தன் பகத், ஐஐடி டெல்லியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார் மற்றும் ஐஐஎம் அகமதாபாத்தில் வணிக நிர்வாகப் பட்டபடிப்பில் முதுகலைப் பட்டமும் முடித்தவர்.
என்.ஆர். நாராயண மூர்த்தி ஐஐடி கான்பூர்
பத்மஸ்ரீ என்.ஆர். நாராயண மூர்த்தி, இந்தியப் பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 'இன்ஃபோசிஸின்' நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரும் இவரே... மூர்த்தி, 1969 இல் ஐஐடி கான்பூரில் முதுகலைப் பட்டத்தை முடித்தார். 2008-ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தால் பத்ம விபூஷண் விருதையும் அவர் பெற்றார். மேலும், 2012-இல் Fortune Magazine இதழால் ‘நமது காலத்தின் 12 சிறந்த தொழில்முனைவோர்’ எனும் பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றிருந்தது.
சுந்தர் பிச்சை ஐஐடி காரக்பூர்
Google Alphabet CEO சுந்தர் பிச்சைக்கு அறிமுகமே தேவையில்லை. அவருடைய சாதாரணத் தொடக்கம் முதல் இன்று அவர் எட்டியிருக்கும் புகழ்பெற்ற பயணம் வரை எல்லாமே அவருடைய கடின உழைப்பால்தான். சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள ஐஐடியில் உலோகவியல் பொறியியலில் பி.டெக் படித்து முடித்திருக்கிறார். ஆகஸ்ட் 10, 2015 அன்று, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை தேர்வானார். இப்போது அவர் உலகின் மிகவும் வெற்றிகரமான நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
சச்சின் பன்சால் டெல்லி ஐஐடி
ஆன்லைன் ஷாப்பிங் செய்பவராக நீங்கள் இருந்தால் இவரை உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். ஆமாம், ஆன்லைனில் பொருட்களை வாங்குவதை நீங்கள் பெரிதும் விரும்புகிறீர்கள் என்றால், இந்தியாவின் மிகப்பெரிய இணையவழி நிறுவனமான ‘ஃபிளிப்கார்ட்டின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, சச்சின் பன்சாலை’ நீங்கள் அறிந்திருக்க வேண்டும். 2018-இல் ஃப்ளிப்கார்ட் நிறுவனமானது, வால்மார்ட்டால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சச்சின் 2005-ஆம் ஆண்டு டெல்லி ஐஐடியில், கணினிப் பொறியியலில் பட்டம் பெற்றவர்.
பவிஷ் அகர்வால் போவாய் ஐஐடி, மும்பை
இந்தியத் தொழிலதிபரும் ஓலா கேப்ஸின் இணை நிறுவனருமான பவிஷ் அகர்வால், ஐஐடி பாம்பேயில் கணினி அறிவியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2018-ஆம் ஆண்டில் டைம் பத்திரிக்கையின், மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் பவிஷ் பெயரும் இடம் பெற்றிருந்தது.
ஜிதேந்திர குமார் ஐஐடி காரக்பூர்
பல வெப் சிரீஸ், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த ஒரு 'பஞ்சாயத்து' நடிகர் இவர். ஐஐடி காரக்பூரில் சிவில் இன்ஜினியரிங் படித்தார். மேலும், IIT KGP-யில் ஹிந்தி டெக்னாலஜி டிராமேட்டிக்ஸ் சொசைட்டியின் ஆளுநராகவும் இருந்தார்.
ரோஹித் பன்சால் டெல்லி ஐஐடி
இந்தியத் தொழிலதிபர், இணை நிறுவனர் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீலின் COOதான் ரோஹித் பன்சால்… இவரும் டெல்லி ஐஐடியில், இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com