14 Types of Mangoes in One Tree! A Gujarat Farmer Made It Possible; Know How Twitter
இந்தியா

ஒரே மரத்தில் 14 வகையான மாம்பழங்களா? விவசாயியின் பலே ஐடியா! - எப்படி சாத்தியம்?

Priyadharshini R

கோடைக்காலம் என்றவுடன் மாம்பழ சீசன் வந்துவிடும். மற்ற பழங்களை விட மாம்பழம் அனைவரும் விரும்பக்கூடிய பழவகை!

மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. அவை அவற்றின் தனித்துவமான சுவைகளில் வேறுபடுகிறது. இப்படி இருக்கும் சூழலில் 14 வகையான மாம்பழங்கள் ஒரே மரத்தில் காய்க்கிறது என்று சொன்னால் நம்ப முடிகின்றதா?

குஜாரத் மாநிலம் அம்ரேலியை சேர்ந்த 70 வயதாகும் மாம்பழ விவசாயி உகாபாய் பாட்டி தனது கடும் முயற்சியால் 14 வகையான மாம்பழங்கள் காய்க்கும் ஒரே மாமரத்தை உருவாக்கியுள்ளார்.

இதனை சாத்தியமாக்கியது குறித்து உகாபாய் பாட்டி கூறுகையில் இதை செயல்படுத்த தாவர ஒட்டுதல் முறையைப் பயன்படுத்தியதாகக் கூறியிருக்கிறார்.

விவசாயத்தில் அதிக விளைச்சலைப் பெறுவதற்காக இரு தாவரத் தண்டுப்பகுதிகளை இணைத்து புதிய தாவரமாக வளர்க்கப்படுவதே ஒட்டுதல் எனப்படும்.

தனது வீட்டில் இருக்கும் இந்த மாமரம் ஹோலி முதல் தீபாவளி பண்டிகை வரை அனைத்து சீசன்களிலும் இனிப்பான மாம்பழங்களையும் வழங்கி வருவதாக கூறுகிறார்.

பாட்டியின் மரத்தில் அம்ரபாலி, நீலம், தாஷேரி, பேகம், நிலேசன், நீல் பகுன், சுந்தரி, பனாரசி லாங்டோ, கேசர், டாட்மியோ, குலாபியோ, கனோஜியோ, துத்பீடோ மற்றும் கோடி போன்ற மாம்பழங்கள் உள்ளன.

இந்த மரத்தில் காய்க்கும் பழங்கள் விற்பனைக்கு செல்வதில்லை என்றும் , வரலாற்றில் தான் படித்த பல வகையான மாம்பழங்கள் அழிந்துவிட்டதாக உகபாய் பாட்டி கவலையுடன் கூறுகிறார்.

மேலும் தற்போது இந்த மாம்பழத்தில் புதிய சுவைகளை சேர்க்க முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?