15 Facts about Republic Day Twitter
இந்தியா

குடியரசு தினம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 15 தகவல்கள்

Priyadharshini R

ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. இந்த நாளின் ஒவ்வொரு ஆண்டும், டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நம் தேசியக் கொடியான திரங்கா என்ற மூவர்ணக்கொடியை இந்தியக் குடியரசுத் தலைவர் ஏற்றுவார்.

குடியரசு தினம் மற்றும் அந்த நாளில் நிகழ்ந்த வரலாற்று சம்பவங்கள் உட்பட நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 15 தகவல்கள் இதோ

  • முதல் குடியரசு தினம் ஜனவரி 26-ம் நாள் 1950ல் கொண்டாடப்பட்டது.

  • இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26, காலை 10.18 மணியளவில் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.

  • இந்திய அரசியலைமைப்புதான் உலகிலேயே மிகப் பெரியது. இதில் 444 ஆர்ட்டிகிள்கள் உள்ளன.

  • டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலைமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இந்திய அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கினார்.

  • முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேசிய அதிபர் சுக்கர்னோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

  • இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முன் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பிரிட்டீஷ் அரசின், சட்டம் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கைப்பட எழுதப்பட்டது.

  • இந்தியாவின் முதலாவது குடியரசு தின அணிவகுப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி டெல்லி இர்வின் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

  • குடியரசு தின அணிவகுப்பில் Abide With Me என்ற கிறிஸ்த்துவப் பாடல் ஒன்று இடம் பெறும். இந்தப் பாடல் மகாத்மா காந்திக்கு பிடித்தமான பாடல் என்று நம்பப்படுகிறது.

  • குடியரசுத் தினக் கொண்டாட்டம் மூன்று நாள் அதாவது ஜனவரி 26 முதல் 29 வரை கொண்டாடப்படும்.

  • ஜனவரி 26, 1965-ல் இந்தி தேசிய மொழி என அறிவிக்கப்பட்டது.

  • இந்தியாவின் அரசியலமைப்பு மற்ற நாடுகளின் அரசியலமைப்பில் இருந்து மிகவும் மேம்பட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்,ஆகியவை பிரெஞ்சு அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.

  • குடியரசுத் தினத்தில் தேசிய விருதுகளான பாரத் ரத்னா, கீர்த்தி சக்ரா, பத்மா விருதுகள் அறிவிக்கப்படும்.

  • குடியரசு தினத்தில் இந்திய விமானப் படை உருவானது.

  • ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தலைவர் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றுவார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?