Coding canva
இந்தியா

33 லட்சம் சம்பளத்தில் வேலை; வாய்ப்பை இழந்த 15 வயது சிறுவன் காரணம் என்ன?

NewsSense Editorial Team

இணையம் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தற்போது பள்ளியில் பயிலும் காலத்திலேயே கோடிங் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்துவிட்டது. மாணவர்களும், தங்களது திறனை வளர்த்துக்கொண்டு முன்னேரிவருகிறார்கள்.

இங்கும் 15 வயது மாணவன் தனது கோடிங் திறமையால் அமெரிக்காவின் மிக பெரிய நிறுவனம் ஒன்றின் கவனத்தை ஈர்த்துள்ளான்.

இந்தியாவைச் சேர்ந்த வேதாந்த் டியோகடே என்ற 15 வயது சிறுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டி ஒன்றை பற்றி படித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியை சேர்ந்த நிறுவனம் நடத்திய இப்போட்டியில் வலைத்தளம் ஒன்றை மேம்படுத்த வேண்டும்.

அதாவது Website development செய்து தருமாறு போட்டியை அறிவித்திருந்தது. இந்த போட்டியில் பங்கேற்கத் தனது தாயின் பழைய லேப்டாப் மூலம் சுமார் 2000 கோடிங் வரிகளை (coding lines) டைப் செய்து animeeditor.com என்னும் வலைத்தளத்தை உருவாக்கினார் வேதாந்த்

போட்டியில் வெற்றி பெற்ற வேதாந்த்துக்கு அந்நிறுவனம் ஆண்டிற்கு 33 லட்சம் வருமானத்துடனான வேலையைப் அளித்தது. ஆனால் அவருக்கு 18 வயது முழுமையடையாததால், அந்நிறுவனம் வேலையில் அமர்த்தவில்லை

இதனால் வேதாந்த் மனமுடைந்ததை அறிந்த அந்நிறுவனம் அவரை மனம் தளராமல் இருக்குமாறு கூறியதோடு, தனது படிப்பை முடித்த பிறகு மீண்டும் தங்கள் நிறுவனத்தை அணுகுமாறு ஆறுதல் தெரிவித்திருந்தது.

வேதாந்த் உருவாக்கிய animeeditor.com எனும் வலைத்தளம் Youtube போன்று வீடியோக்கள் பார்ப்பது மற்றும் blog, vlog, chatbot போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டு உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அவர் பயிலும் பள்ளியில் நடத்தப்படும் போட்டிகளிலும் சிறந்து விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?