மகாராஷ்டிராவின் சுல்தான்பூர் என்ற கிராமத்திற்கு ‘ராகுல் நகர்’ என பெயர் மாற்றியுள்ளனர். 26/11 மும்பை தாஜ் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் நினைவாக செய்யப்பட்டுள்ள இந்த பெயர் மாற்றம் மனதை கனக்க செய்கிறது.
கடந்த நவம்பர் 26, 2008ல் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாஜ் ஹோட்டல் தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இன்றுடன் இந்த தாக்குதல் நடந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாடெங்கும் இந்த தாக்குதலில் உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ட்விட்டர் பக்கத்தில் மறைந்த வீரர்களை நினைவுக்கூர்ந்திருந்தார்.
தாஜ் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி டர்மினஸ், ஓபராஇ ட்ரைடெண்ட் உள்ளிட்ட 12 இடங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாகி சூடு நடந்தது. லஸ்கர் இ தைபா தீவிரவாத குழுவை சேர்ந்த 10 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.
கிட்ட தட்ட நான்கு நாட்கள், 26 நவம்பர் முதல் 29 நவம்பர் வரை, மும்பை மாநகரை சுற்றி 12 இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 166 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் தீவிரவாதிகளும் அடக்கம். முண்ணூறு பேருக்கு மேல் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ராகுல் ஷிண்டே என்ற State Reserve Police Force (SRPF) வீரரும் உயிரிழந்தார். இவர் மகாராஷ்டிராவின் சுல்தான்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர். தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடப்பதாக தகவல்கள் கிடைத்தவுடன் அங்கு மீட்பு பணிக்கு சென்ற முதல் காவல்படையில் இவரும் ஒருவர்.
டைம்ஸ் நவ் தளத்தின்படி, தீவிரவாதிகள் துப்பாகி சூடு நடத்தியதில், வயிற்றில் குண்டு பாய்ந்து ராகுல் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பின்னர் இந்திய அரசாங்கம் இவருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படட்து. இந்நிலையில் இன்று, தாக்குதல் நடந்து 14 ஆண்டுகள் முடிந்துள்ளதை அடுத்து, சுல்தான்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள், ராகுலை கௌரவிக்கும் விதமாக கிராமத்திற்கு அவரது பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர்.
அதிகாரப்பூர்வமாக கிராமத்தின் பெயர் இன்னும் மாற்றப்படவில்லை. மறைந்த ராகுல் ஷிண்டேவின் தந்தை சுபாஷ் விஷ்ணு ஷிண்டே, "கிராமத்தின் பெயரை மாற்றுவதற்கான அனைத்து அரசு சம்பிரதாயங்களும் முடிந்துவிட்டன. அதிகாரப்பூர்வ மறுபெயரிடுதல் விழாவிற்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்று பிடிஐயிடம் கூறினார்.
" தேதிகளை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம், அது விரைவில் இறுதி செய்யப்படும்," என்று அவர் கூறினார். ராகுல் மறைந்த பிறகு, அரசாங்கம் அவரது குடும்பத்திற்கு, சட்டப்படி வழங்க வேண்டிய நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை செய்துகொடுத்தாகவும் அவர் கூறியிருந்தார்.
தாக்குதல் நடத்திய பத்து தீவிரவாதிகளில் 9 பேர் அப்போதே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் மட்டும் நாங்கு ஆண்டுகள் கழித்து தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust