மல்லிகார்ஜுன கார்கே Twitter
இந்தியா

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - சந்திக்கவிருக்கும் 4 முக்கிய சவால்கள் என்ன?

Antony Ajay R

24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக பதவியேற்று உள்ளார். கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேசிய அரசியலுக்கு புதியவர் இல்லை என்றாலும் காங்கிரஸ் தலைவராக அவர் அமர்வது முற்றிலும் புதிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தேசிய அளவில் இரண்டாவது பெரிய கட்சியாக பார்க்கப்பட்டாலும், அதன் செல்வாக்கு பல மாநிலங்களில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதிலிருந்து கட்சியை மீட்க வேண்டிய பொறுப்பு கார்கேவுக்கு இருக்கிறது.

சசி தாக்கூரை எதிர்த்து எளிதாகவே பதவியை கைப்பற்றிவிட்டார் கார்கே ஆனால், இனி அவர் நடக்கவிருக்கும் பாதைகள் கடினமானதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அவர் சந்திக்கப்போகும் பிரச்னைகள் குறித்த முன்னோட்டத்தைக் காணலாம்...

மாநில தேர்தல்கள்

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல்கள் காங்கிரஸ் தலைவராக கார்கேவின் தொடக்கம் எப்படியிருக்கப்போகிறது என்பதனைக் முடிவு செய்யப் போகிறது.

தன்னை ஒரு வலிமையான தலைவராக தக்கவைத்துக்கொள்ள கார்கேவுக்கு இது ஒரு நல்ல சூழலும் கூட. குஜராத்தில் பாஜக வெற்றி என்பது ஏறத்தாழ உறுதியான ஒன்று ஆனால் இமாச்சலில் காங்கிரஸ் போராட முடியும்.

தீவிர பிரச்சார கட்டமைப்பை ஏற்படுத்தி வெற்றி பெற்றால் கார்கேவின் செல்வாக்கும் உயரும். அடுத்த ஆண்டு காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றால் மட்டுமே காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் இந்தியாவிலிருக்கும். ராஜஸ்தானில் தற்போது இருக்கும் உள்கட்சி பூசல்கள் தேர்தல் வெற்றிக்கு முக்கியத் தடையாக இருக்கின்றன. இவற்றை கட்சித் தலைவராக கார்கே சிறப்பாக கையாள வேண்டியது அவசியம்.

கட்சியை ஒருமைப்படுத்துதல்

ராஜஸ்தானில் உள்ளபடியே காங்கிரஸின் பல மாநில முகாம்களில் பூசல்கள் நிலவுகிறது. காங்கிரஸில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 460க்கும் மேற்பட்ட தலைவர்கள் விலகி பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சரியாக நடத்தப்படாததும், நீண்டகால உழைப்பை செலுத்திய தலைவர்கள் உதாசினப்படுத்தப்படுவதுமே அதற்கு காரணமாக கூறப்படுகிறது.

தவிர சக எதிர்கட்சிகளான நிதீஸ் குமார் மற்றும் மம்தா பேனர்ஜி உள்ளிட்டோரையும் கூட்டணி கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பும் கார்கேவுக்கு இருக்கிறது.

எதிர்கட்சியாக நிலைத்திருத்தல்

இன்று காங்கிரஸ் போலவே இரண்டு ஆளும் மாநிலங்களை கொண்ட கட்சி ஆம் ஆத்மி. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமைத் தாங்கும் கட்சியை விட காங்கிரஸ் அதிகமாக வேரூன்றி இருந்தாலும், தொடர்ந்து தேய்மானங்களைச் சந்தித்து வருகிறது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

ஒட்டுமொத்த 542 எம்.பி.களில் 52 பேர் மட்டுமே காங்கிரஸ் எம்.பி.க்கள் என்பது தேசத்தின் இரண்டாவது பெரிய கட்சிக்கு பேரடி தான். இந்த எதிர்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் தொடர்ந்து போராட வேண்டியது அவசியம்.

உண்மையில் ராகுல் காந்தியின் பாரத் ஜதோ யாத்ரா இதற்கு முக்கிய பங்களிக்கும் என எதிர்பார்க்கலாம்.

காந்தி குடும்பத்தின் கைப்பாவையாக இல்லாமலிருத்தல்

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே காந்தி குடும்பத்தின் கைப்பாவையாக கார்கே இருப்பார் என்ற விமர்சனம் இருந்து வருகிறது.

பாரத் ஜதோ யாத்ரா ராகுலின் செல்வாக்கை இன்னும் அதிகரிப்பதாகவே இருக்கிறது. 2013ம் ஆண்டு கட்சித் துணைத்தலைவராக ராகுல் இருந்த போதே அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் அவசர சட்டத்தை கிழித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ராகுலின் செல்வாக்கை மீறி கட்சியில் தன்னை சுயாதீன தலைவராக கார்கே நிறுவுவது தான் அவருக்கும் கட்சிக்கும் நல்லது என்பது அரசியல் விமர்சகர்களின் பார்வை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?