Lata Mangeshkar  Twitter
இந்தியா

Lata Mangeshkar பிறந்த நாள்: அயோத்தியில் 40 அடி உயர வீணையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Keerthanaa R

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி பிரதமர் மோடி அயோத்தியில் 40 அடி வீணையை இன்று திறந்து வைக்கிறார்.

இந்தியாவின் இசைக்குயில் (Nightingale) என்று அழைக்கப்பட்டவர் பாடகி லதா மங்கேஷ்கர். இவர் எண்பது ஆண்டுகளாக பின்னணி பாடகியாக இந்திய திரையுலகில் கொடி கட்டி பறந்தார். 30க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் மட்டுமல்லாது, ஆங்கிலம், டச்சு, நேபாளி மொழிகளிலும் கூட இவரது குரலில் பாடல்கள் ஒலித்தது. 

இவரது பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கடந்த 2001ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. பாரத ரத்னா விருதை பெற்ற இரண்டாவது பெண் பாடகி லதா மங்கேஷ்கர் தான். இவருக்கு முன்னர் கர்நாடக இசை அரசி எம் எஸ் சுப்புலக்ஷ்மிக்கு தான் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருந்தது.

மேலும் 2007ல் ஃபிரான்ஸ் நாடு தனது உயரிய விருதான National Order of the Legion of Honor  விருதினையும் லதா மங்கேஷ்கருக்கு வழங்கி கௌரவப்படுத்தியது. 

இந்நிலையில், உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் காலமானார். இன்று அவரது 93வது பிறந்தநாள். 

அவரது 80 ஆண்டு கால இசையுலக சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், பாடகிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இன்று 40 அடியில் வீணை ஒன்றை நிறுவவுள்ளனர். இதனை காணொளி மூலமாக திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

உத்திரப் பிரதேசம் அயோத்தியில் உள்ள முக்கிய சந்திப்பு ஒன்றை லதா மங்கேஷ்கர் சவுக் என பெயரிட்டு, அங்கு இந்த வீணையை நிறுவவுள்ளனர். முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், மத்திய சுற்றுலா துறை அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த வீணை 14 டன் எடை கொண்டது. 

தேசிய விருதுகள் பெற்றுள்ள பாடகி லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை கதையை எடுத்துக் கூறும் வண்ணம் கண்காட்சி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?