5 Budgets that changed the face of Indian economy Twitter
இந்தியா

பட்ஜெட் 2023 : இந்திய பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்ட பட்ஜெட்டுகள் - விரிவான பார்வை

NewsSense Editorial Team

இந்தியாவில் மத்திய அரசு தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட் சூடு பிடித்து விட்டது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 2024 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.

பட்ஜெட் என்பது வெறுமனே கணக்கு வழக்குகளை தாக்கல் செய்யும் ஒரு சம்பிரதாயமான நிகழ்வு என கடந்து விட முடியாது. இதே மத்திய அரசின் பல நிதி அமைச்சர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டுகள் இந்திய பொருளாதார மற்றும் இந்திய நாட்டில் வாழும் பல கோடி மக்களின் தலையெழுத்துக்களை புரட்டி போட்டு இருக்கிறது.

அப்படி ஒட்டுமொத்த இந்தியாவும் கூர்ந்து கவனித்த, அதிகம் பயனடைந்த சில டாப் பட்ஜெட்டுகள் மற்றும் அதன் தாக்கங்களைத்தான் இங்கு பார்க்க போகிறோம்.

1991 மன்மோகன் சிங் பட்ஜெட்:

பொதுவாக இந்திய அரசியலில் நிதி அமைச்சகம் போன்ற, துறைசார் அறிவு அதிகம் தேவைப்படும் பதவிகளைக் கூட தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களே ஏற்பர்.

அப்படி ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் பொருளாதார வல்லுநராக மட்டும் அறியப்பட்ட மன்மோகன் சிங், பி வி நரசிம்மராவ் அவர்களின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று தாக்கல் செய்த பட்ஜெட் இது.

இந்தியா தன்னுடைய அன்றாட ஏற்றுமதி இறக்குமதிகளை கூட செய்ய முடியாமல் சொற்ப அளவிலான அந்நிய செலாவணியை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு தள்ளாடி கொண்டிருந்தபோது, உலகமயம், தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளைக் கொண்டு வந்து இந்தியாவை சீறிப் பாய வைத்த பட்ஜெட்டுக்கு சொந்தக்காரர் மன்மோகன் சிங் என்றால் அது மிகையல்ல.

பல பொருட்களுக்கு சுமார் 220 சதவீதமாக இருந்த சுங்கவரி சுமார் 150 சதவீதமாக குறைக்கப்பட்டது. மெல்ல இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதற்கு வழிவகைகள் செய்யப்பட்டன.

இன்று உலக அளவில் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது என்றால் அதற்கு 1991 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் கொண்டு வந்த பட்ஜெட்டைக் குறித்துப் பேசாமல் கடந்துவிட முடியாது.

இன்று இந்தியா சர்வதேச அளவில் பல நாடுகளோடு போட்டி போட்டு பொருட்களையும் சேவைகளையும் ஏற்றுமதி செய்கிறது. பல்வேறு வளரும் நாடுகளோடு ஒப்பிடும்போது இறக்குமதி வரிகள் கணிசமாக குறைக்கப்பட்டு வெளிநாட்டு பொருட்கள் சேவைகள் இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இன்று இந்தியாவையும், இந்தியப் பொருளாதாரத்தையும் நோக்கி பல நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தொழில் செய்ய ஓடி வருகிறார்கள், முதலீடு செய்கிறார்கள் என்றால் அதற்கும் இந்த பட்ஜெட் தான் அடித்தளம் இட்டது எனலாம்.

1973 யெஸ்வந்த் ராவ் சவன் பட்ஜெட்:

இந்த பட்ஜெட்டை கருப்பு பட்ஜெட் என்றும் கூறுவர். பொதுவாக ஒரு நாடு ரகசிய திட்டங்களுக்கு அதிகப்படியாக நிதி ஒதுக்குகிறது என்றால் மட்டுமே அதை கருப்பு பட்ஜெட் என்று அழைப்பர். ஆனால் 1973 - 74 நிதியாண்டிற்கு போடப்பட்ட பட்ஜெட் அதிக அளவில் பற்றாக்குறையை கணக்கில் காட்டியது.

அன்றைய தேதிக்கு யெஷ்வந்த் ராவ் காட்டிய பட்ஜெட் பற்றாக்குறை 550 கோடி ரூபாய். அதுபோக பல்வேறு நிலக்கரி சுரங்கங்கள், ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களை தேசியமயமாக்க 56 கோடி ரூபாயை தன் பட்ஜெட்டில் காட்டி இருந்தார்.

சரி இத்தனை ரிஸ்க் எடுத்து 56 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து தேசிய மயமாக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் பிற்காலத்தில் நன்மை பயக்குவதற்கு பதிலாக, எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தின. இந்தியா தன்னுடைய நிலக்கரி தேவைக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இன்றும் இந்தியாவில் ஏகப்பட்ட நிலக்கரி வளங்கள் இருந்தும் ஒரு கணிசமான அளவுக்கு நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

1997 ப சிதம்பரத்தின் கனவு பட்ஜெட்:

மத்திய அரசின் பட்ஜெட் வெளியாக இருக்கிறது என்றாலே, இந்தியா முழுக்க பரவியுள்ள தனி நபர்கள், சம்பளம் வாங்குபவர்கள் தங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பதை குறித்து விவாதிக்கவும் வருத்தப்படவும் தொடங்கி விடுவர்.

வருமானவரி வரம்பை உயர்த்தினால் நன்றாக இருக்கும், 80சி பிரிவின் கீழான சலுகைகளின் அளவை 1.5 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தினால் நன்றாக இருக்கும், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை நிலையாக 6 சதவீதத்திற்கு வைத்தால் நன்றாக இருக்கும்… என பல்வேறு கோரிக்கைகள் எழுவதை நம்மால் பார்க்க முடியும்.

இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட பட்ஜெட் என்றால் அது 1997 ஆம் ஆண்டு முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தக்கல் செய்த பட்ஜெட் தான். அந்த காலகட்டத்தில் தனி நபர்களுக்கான வருமான வரி விகிதம் 40 சதவீதமாக இருந்தது அதை 30 சதவீதமாக குறைத்தார், பல்வேறு சர் சார்ஜ்களையும் நீக்கி, எளிய & வெகுஜென மக்களும் வருமான வரிப்படிவத்தை சமர்பிக்க ஊக்குவித்தார்.

இன்று வரை இந்திய அரசு, ஒரு தனிநபர் வருமான வரியை செலுத்துகிறாரோ இல்லையோ அவரை முதலில் வருமான வரிப் படிவத்தை சரியாக நிரப்பி சமர்ப்பிக்க செய்துவிட வேண்டும் என முயன்று கொண்டிருப்பதை ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும், வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிகளின் போதும் பார்க்க முடியும். எனவே இந்த கனவு பட்ஜெட்டைக் கொண்டு வந்ததற்கே ப சிதம்பரம் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

2000 ஆண்டு கொண்டுவரப்பட்ட யெஸ்வந்த் சின்ஹா பட்ஜெட்:

இன்றும் இந்தியாவில் மலக்குழியில் இறங்கி விஷ வாயு தாக்கி மரணிப்பவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்தபாடில்லை. வரதட்சணை கொடுமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதிய கட்டமைப்புகள் என பலதும் அப்படியே இருக்கின்ற போதும் உலக அரங்கில் இந்தியா கவனிக்கப்படுகிறது என்றால் அதற்கு இந்தியாவில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சி ஒரு மிக முக்கிய காரணம்.

இந்தியாவில் எத்தனையோ அடிப்படை வசதிகள் சரியாக எல்லா மக்களுக்கும் சென்று சேராத போதும் யு பி ஐ என்கிற, வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் கையாளப்படும் பணப்பரிவர்த்தன முறையை விட, எளிதான பணப் பரிவர்த்தனை முறை இந்தியாவில் நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்க அடித்தளமாக அமைந்த பட்ஜெட்களில் 2000 ஆண்டு யெஸ்வந்த் சீன்ஹா கொண்டு வந்த பட்ஜெட்டும் குறிப்பிடத்தக்கது. வெறுமனே இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுத்து கொண்டு இருந்தால் போதாது, அந்த நிறுவனங்கள் செழித்து வளர தேவையான கணினிகள், சிடி ரோம் போன்ற பல்வேறு பொருட்களுக்கான சுங்கவரி கணிசமாக குறைக்கப்பட்டது. இது ஏற்கனவே இருந்த ஐடி மென்பொருள் நிறுவனங்களை தாண்டி பல புதிய நிறுவனங்கள் உருவாவதற்கும் உதவியது அதற்கான பலன் தான் இப்போது ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ரோல் பேக் பட்ஜெட்:

பட்ஜெட் என்றாலே பல்வேறு பெரிய அறிவிப்புகள், புதிய திட்டங்கள், நாட்டை செழிப்படையைச் செய்வதற்கான கொள்கைகள் என்று மட்டுமே கருதி விட வேண்டாம். ஒரு சில பட்ஜெட்டுகள் ஏற்கனவே அறிவித்த விஷயங்களை பின்வலிக்கவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு 2002 ஆம் ஆண்டு நிதி அமைச்சர் யெஸ்வந்த் சின்ஹா கொண்டுவந்த பட்ஜெட்டை கூறலாம். இந்த பட்ஜெட்டில் எல் பி ஜி சிலிண்டரின் விலை எதிர்க்கட்சிகளின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு குறைக்கப்பட்டது. அதேபோல சர்வீஸ் டேக்ஸ் கணிசமாக குறைக்கப்பட்டதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

ஜி எஸ் டிக்குப் பிறகு:

பொதுவாக இந்திய ஒன்றிய அரசின் பட்ஜெட் என்ற உடனேயே, ஏசி, ஃப்ரிட்ஜ், கார்கள், இருசக்கர வாகனங்கள்… போன்ற பல்வேறு பொருட்களின் விலை தீர்மானிக்கப்படும் அளவுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும்.

காரணம் ஒரு பொருளுக்கான சுங்கவரி, இறக்குமதிவரி, சேவை வரி… போன்ற பல்வேறு வரிகள் பட்ஜெட் காலத்தில் அறிவிக்கப்படுவது ஜிஎஸ்டி வரிமுறை நடைமுறைக்கு வருவதற்கு முன் இருந்தது.

2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி இந்தியா முழுக்க ஜி எஸ் டி வரிமுறை அமலுக்கு வந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டிலும் பல்வேறு பொருட்களுக்கான விலை தொடர்பாக விவாதிக்கப்படுவது நின்று விட்டதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?