திருப்பதி திருமலை தேவஸ்தானம் இந்தியாவில் உள்ள மிகவும் செல்வச் செழிப்பான மற்றும் மிகவும் போற்றப்படும் புனிதத் தலங்களில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. திரைப்பிரபலங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் விரும்பி செல்லக்கூடிய கோவில் என்றால் அது இந்த ஏழுமலையான கோவில் தான்!
இந்த கோவில் பணக்கார கோவில், இங்கு தரிசனம் செய்தால் நன்மை பயக்கும் என பொதுவாக அறியப்பட்ட விஷயங்களுக்கு அப்பால் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.
திருப்பதி பாலாஜி கோவிலில் உள்ள தெய்வங்களின் பூஜை செய்வதற்காக , மலர்கள், வெண்ணெய், பால், மோர், இலைகள் போன்றவை திருப்பதியில் இருந்து இருபத்தி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அறியப்படாத கிராமத்திலிருந்து பெறப்படுகின்றன. இந்த சிறிய கிராமத்தை அதன் சொந்த மக்களைத் தவிர வேறு யாரும் பார்த்தது இல்லையாம்.
திருப்பதி பாலாஜியின் சிலை கருவறையின் மையத்தில் நிற்பதாகத் தோன்றலாம். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அது அவ்வாறு இல்லை. சிலை உண்மையில் சன்னதியின் வலது மூலையில் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலின் கருவறையில் உள்ள தெய்வச் சிலைக்கு முன் வைக்கப்படும் மண் விளக்குகள் அணையா விளக்காம். நெடுங்காலமாக எரிந்துகொண்டிருக்கிறது.
இந்த விளக்குகள் எப்போது, யார் ஏற்றினார்கள் என்பது பற்றிய நம்பகமான பதிவுகள் எதுவும் இல்லை.
19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில், இப்பகுதியின் மன்னர் ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்ததற்காக பன்னிரண்டு பேருக்கு மரண தண்டனை விதித்தார்.
மரணத்திற்குப் பிறகு, இறந்த குற்றவாளிகளின் உடல் பாலாஜி கோவின் சுவர்களில் தொங்கவிடப்பட்டதாகவும் அந்த நேரத்தில் தான் தெய்வம் தோன்றியதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சின்னக் கற்பூரம் அல்லது பச்சைக் கற்பூரம் எந்தக் கல்லில் பூசினாலும், அது பொருளின் மீது விரிசல் மற்றும் பிளவுகளுக்கு வழிவகுக்கும் என்பது அறிவியல் பூர்வமாக அறியப்பட்ட உண்மை. ஆனால் பாலாஜியின் சிலையில் அந்த மாதிரியான கெமிக்கல் ரியாக்ஷனுமே நிகழவில்லை என்று கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust