5 Must-visit Places On Every Indian's Travel Bucket List  Twitter
இந்தியா

Travel : இந்தியர்களின் பக்கெட் லிஸ்ட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 இடங்கள்

என்னதான் இந்தியாவிலேயே இருந்தாலும், இந்த பிரபலமான இடங்களுக்கு சென்றிருக்க மாட்டோம். அப்படி ஒவ்வொரு இந்தியர்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களை பற்றி தான் சொல்ல போகிறோம்.

Priyadharshini R

இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் நிறைந்த நாடு. பாலைவனங்கள், பசுமையான காடுகள், முடிவில்லாத மலைகள் மற்றும் அமைதியான, பரந்த கடற்கரைகள் என இந்தியாவில் பார்க்க அவ்வளவு இடங்கள் உள்ளன.

இந்த இடங்கள் முடிவில்லாதவை. என்னதான் இந்தியாவிலேயே இருந்தாலும், இந்த பிரபலமான இடங்களுக்கு சென்றிருக்க மாட்டோம். அப்படி ஒவ்வொரு இந்தியர்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களை பற்றி தான் சொல்ல போகிறோம்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

கடலின் வசீகரத்தை அனுபவிக்க விரும்பினால், உங்கள் வாழ்நாளில் ஒருமுறை அந்தமான் மற்றும் நிக்கோபார் கடற்கரைக்குச் செல்லுங்கள்.

இங்குள்ள நீல நிற நீர் மற்றும் வெள்ளை மணல் கடற்கரைகள் உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கடலுக்குள் உள்ள நீர்வாழ் உயிரினங்களை உன்னிப்பாகக் காணலாம். நகரத்தின் சலசலப்புகளிலிருந்து விலகி கடற்கரைகளில் ஓய்வெடுக்கலாம்.

கோவா

வடக்கு மற்றும் மத்திய கோவாவின் கடற்கரைகள் அற்புதமான நடவடிக்கைகள் நிறைந்தவையாக உள்ளன. தனித்துவமான பொழுதுபோக்கை இங்கு அனுபவிக்க முடியும்.

காலையில் நீர் விளையாட்டுகளையும் மாலையில் பார்ட்டிகளையும் அனுபவிக்கலாம். கோவா கேசினோக்கள் இங்கு மிகவும் பிரபலமானவை.

லடாக்

பைக்கில் லடாக் பயணம் செய்ய வேண்டும் என்பது பலரது ஆசையாக இருக்கும். லடாக் சாலைப் பயணம், இந்தியாவில் அதிக மக்கள் செல்வோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு சில கிலோமீட்டருக்கும் பிரம்மிப்பான காட்சிகளை காண்பீர்கள், இந்த அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாததாக மாறும்.

மலர்கள் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா

பூக்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளது. இங்கு 500 க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் காணப்படுகின்றன. இங்குள்ள வசீகரக் காட்சி அந்த பயணத்தை மறக்க முடியாததாக ஆக்குகிறது. இந்த இடம் 1931 இல் மூன்று பிரிட்டிஷ் மலையேறுபவர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது, இந்த இடம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

கேரளா

கடவுளின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் கேரளாவில் நீங்கள் பார்க்க பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அவை உங்கள் பயணத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றும்.

குறிப்பாக கேரளாவின் மூடுபனி உப்பங்கழியில் ( Back water) பயணம் செய்யும் போது தனித்துவமான அனுபவத்தை பெறுவீர்கள்.

இந்த உப்பங்கழியில் உள்ள 34 ஏரிகளில் ஒவ்வொன்றும் இயற்கை ஆர்வலர்கள், பறவையியல் வல்லுநர்களுக்கு ஒரு ஹாட் ஸ்பாட் ஆகும். இங்கு நீங்கள் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் இணைந்து வாழும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை அனுபவிப்பீர்கள். இது உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

இந்த இடங்களை பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், அல்லது செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தாலும், இனி தாமதம் வேண்டாம், இந்த இடங்களுக்கு எல்லாம் சென்று மறக்க முடியாத அனுபவத்தை பெற்று வாருங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?