இந்தியாவின் வைரச் சுரங்கம் என்று அறியப்படும் குஜராத் மாநிலம், அதிக சுற்றுலா பயணிகளால் பார்க்கப்படும் இடங்களில் ஒன்று.
அப்படி நீங்கள் குஜராத்திற்கு செல்கிறீர்கள் என்றால், நிச்சயம் பார்க்கவேண்டிய 5 இடங்கள் இதோ!
ஜுனாகத் என்ற வார்த்தையின் பொருள் பழைய கோட்டை (old fort).
இங்கு மசூதிகள், கோவில்கள், புத்த மடாலயங்கள் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க தலங்கள் உள்ளன.
மஹாபத் கா மக்பரா அவற்றில் நீங்கள் கண்டிப்பாக பார்க்கவெண்டிய தலமாகும்!
இந்தியாவின் 5வது பெரிய நகரமான அலகாபாத், குஜராத்தின் கமர்ஷியல் ஹப் என்று அழைக்கப்படுகிறது.
கலாச்சாரம், கட்டிடக்கலை போன்றவற்றிற்காக பெயர் பெற்றது.
கர்னாதேவ் என்ற மன்னரால் கண்டுபிடிக்கப்பட்ட அகமதாபாத், 1411 ஆம் ஆண்டு சுல்தான் அகமத் ஷா என்பவரால் கைப்பற்றப்பட்டது. அதன் பிறகே இந்த நகரத்திற்கு அகமதாபாத் என்ற பெயர் வந்தது.
பாந்த்ரா கோட்டை, சபர்மதி ஆசிரமம் இங்கு வரலாற்று சிறப்புகள் வாயந்த சுற்றுலா தலங்களாகும்.
காடியா டங்கர் குகைகள், லக்ஷ்மி விலாஸ் அரண்மனை, மகர்புரா அரண்மனை சாயாஜி பாக் இங்கு நிச்சயம் பார்க்கவேண்டிய டெஸ்டினேஷன்ஸ்.
சாயாஜி பாக் 1879ல் மூன்றாம் சாயாஜி மன்னரால் கட்டப்பட்டது.
காமதி பாக் என்றும் அழைக்கப்படும் சாயாஜி பாக்கில் 45 ஹெக்டேர் கார்டன், ஒரு மலர் கடிகாரம், இரண்டு அருங்காட்சியகங்கள், ஒரு கோளரங்கம், ஒரு உயிரியல் பூங்கா மற்றும் ஒரு பொம்மை ரயில் ஆகியவற்றை பார்க்கலாம்.
இந்தியாவில் கிர் தேசிய பூங்காவில் மட்டும்தான் Asiatic Lions ஐ பார்க்கமுடியும்.
ஜுனாகத் மாவட்டத்தில் அமைந்துள்ளது கிர் தேசிய பூங்கா.
இங்கு மட்டும் தான் சிங்கங்கள், ராஜ நடையுடன், திறந்த வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிவதை பார்க்கமுடியும்.
இதுவும் அதிக சுற்றுலா பயணிகளால் விரும்பிப் பார்க்கப்படும் இடங்களில் ஒன்று.
கிருஷ்ணரின் பேரனால் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த துவாரக்தீஷ் கோவில் கோம்தி க்ரீக் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவில் அமைந்துள்ள வடிவம், பார்ப்பதற்கு அரபிக்கடலில் இருந்து எழுந்து வருவதுபோல தோன்றும்.
சார் தம் யாத்ரா- Char Dham Yatra- என்று அழைக்கப்படும் புனித யாத்திரைகளில் துவார்க்தீஷ் கோவிலும் ஒன்று.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust