கூர்க் முதல் ஆலப்புழா வரை : நவம்பர் மாதம் சுற்றிப்பார்க்க சிறந்த 10 இடங்கள்!

ஆலப்புழா முதல் மூணார் வரை... இந்த இடங்கள் உங்களது குளிர் காலத்தை அருமையானதாக மாற்றும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
நவம்பர் மாதம் சுற்றிப்பார்க்க சிறந்த 10 இடங்கள்
நவம்பர் மாதம் சுற்றிப்பார்க்க சிறந்த 10 இடங்கள்Pexels

நவம்பர் மாத மழையில் நனைந்த படியே சில இடங்களை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டால் இந்த இடங்களுக்குச் செல்லலாம். தென்னிந்தியாவில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்கள் செல்ல தகுந்த இடங்கள் இவை.

ஆலப்புழா முதல் மூணார் வரை இந்த இடங்கள் உங்களது குளிர் காலத்தை அருமையானதாக மாற்றும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அன்றாட டென்ஸன், ட்ரெஸ்ஸில் இருந்து வெளிவந்து உங்களை நீங்களே புதுபித்துக் கொள்ள பயணங்களை விட வேறென்ன உதவ முடியும்.

ஆலப்புழா

கேரளாவில் இருக்கும் ஆலப்புழா இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கு படகு சவாரி மிகவும் பிரசித்தி.

இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரத்துடன் ஆலப்புழாவை ஒப்பீடு செய்வார்கள். இதற்கு "கிழக்கின் வெனிஸ்" என்ற பெயரும் உண்டு.

இங்குள்ள கிராமங்களை சுற்றிப்பார்ப்பதும், மிதக்கும் படகு வீடுகளில் நேரம் செலவழிப்பதும் மனதுக்கு இனிமையாக இருக்கும்.

கடற்கரைகள், ஏரிகள் எங்கும் பச்சை நிறைந்து அலதியான அனுபவத்தை கொடுக்கும் ஆலப்புழா.

கோகர்ணா

கர்நாடக மாநிலத்தில் உள்ள கடற்கரை நகரம் இந்த கோகர்ணா.

அதிக சாகச விளையாட்டுகளைக் கொண்டுள்ள கோகர்ணா கடற்கரைகள், ஆன்மிகத் தளங்களுக்காகவும் அறியப்படுகிறது.

சர்ஃபிங், ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங், பாராசெயிலிங் மற்றும் ஜெட் ஸ்கீயிங் போன்றவற்றை இங்கு மேற்கொள்ளலாம். இவற்றுக்கு நவம்பரே சிறந்த மாதமும் கூட.

சிக்மகளூர்

கர்நாடகவின் காபி நிலம் இந்த சிக்மகளூர். அமைதியான சூழலில் நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க இது சிறந்த இடம்.

நவம்பர் மாதத்தில் பசுமைத் தூக்கலாக செழித்திருக்கும் தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களைப் பார்வையிடலாம்.

மன நெருக்கடிகளைப் போக்கி இயற்கையில் திளைக்கச் செய்யும் இந்த இடத்தில் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.

தேசிய பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்கள், அருவிகள் என இங்கு கண்டு களிக்க பல விஷயங்கள் உள்ளன.

அந்தமான்

தனித் தீவான அந்தமான் நிக்கோபாரில் பல நீரியல் சாகசங்களைச் செய்யலாம். ஆழ்கடல் நீச்சல் செய்பவர்கள் பழங்குடியினரைப் பார்வையிடுபவர்கள் தவிர குடும்பமாக வருபவர்களும் இங்கு சிறப்பாக நேரம் செலவழிக்க முடியும்.

செல்லுலார் சிறை போன்ற புராதன இடங்களையும் பார்வையிடலாம். இங்குள்ள பல தனித்த தீவுகளை சுற்றிப்பார்க்கலாம்.

அந்தமான்
அந்தமான்

ஊட்டி

ஆண்டின் எல்லா மாதங்களிலும் சுற்றுலாவுக்கு சிறந்த இடமாக ஊட்டி கருதப்படுகிறது என்றாலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வெளிப்படும் குளிர் நெஞ்சைத் துளைத்து மனதை அமைதிப்படுத்தும்.

பசுமையான பள்ளத்தாக்குகள், தோட்டங்கள் போன்றவற்றை ஊட்டியில் பார்க்க முடியும்.

லம்பசிங்கி

ஆந்திர மாநிலத்தில் உள்ள லம்பசிங்கி காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த ஒரு சுற்றுலாப்பகுதி.

தென்னிந்தியாவிலும் பனிப்பொழிவு ஏற்படும் ஒரு இடமென்றால் அது லம்பசிங்கி தான். மேகமூட்டத்துக்குள் பசுமையை ஒளித்து வைத்திருக்கும் ஒரு அழகி மலைக் கிராமம் தான் இந்த லம்பசிங்கி.

பல வன விலங்குகள் இங்கு வசிப்பது குறிப்பிடத்தக்கது. கொண்டகர்லா பறவைகள் சரணாலயம், நீர்த்தேக்கம், காட் சாலை, கொத்தப்பள்ளி நீர்வீழ்ச்சிகள், சூசன் கார்டன் போன்ற இடங்களைப் பார்வையிடலாம்.

நவம்பர் மாதம் சுற்றிப்பார்க்க சிறந்த 10 இடங்கள்
Travel : ஆல் இந்தியா Road Trip செல்லும் ஜெர்மன் ஷெப்பர்ட்

அரக்கு பள்ளத்தாக்கு

நம் கற்பனைக்கு எட்டுவதனை விட அதிசயமானது இயற்கை. மேற்கு தொடர்ச்சி மலையில் நான்கு பக்கமும் காடுகள் சூழ்ந்திருக்கும் இந்த பள்ளத்தாக்கு குறித்து பலரும் அறிந்திலார்.

இங்குள்ள பள்ளத்தாக்குகளும், அருவிகளும், பசுமையானத் தோட்டங்களும் பரந்த நெல் வயல்களும் கண்களை கவருபவை.

கூர்க் 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க் அல்லது குடகு மலை நவம்பர் மாதம் இயற்கையழகில் செழித்திருக்கிறது. சொர்கத்துக்கு மிக அருகில் சென்றுவிட்ட இந்த இடத்தில், போட்டிங், ட்ரெக்கிங், ஷாப்பிங், சைட் சீயிங், அருவிக் குளியல் என பல செயல்களில் ஈடுபடலாம்.

கூர்கில் யானைகளைப் பார்ப்பது தனிப்பட்ட செயல்பாடு. நிச்சயம் மனதை இலகுவாக்கும் வல்லமை யானைகளுக்கு உண்டு.

நவம்பர் மாதம் சுற்றிப்பார்க்க சிறந்த 10 இடங்கள்
Travel : இயற்கை எழில் கொஞ்சும் தமிழகத்தின் 5 சுற்றுலா தலங்கள் - இவற்றைத் தெரியுமா?

மூணார்

கண்கவரும் மலை பிரதேசங்களில் ஒன்று மூணார். கேரள மாநிலத்தில் உள்ள மூணாரில் வரையாடுகளை பார்க்க முடியும்.

சொக்ரமுடி சிகரம், ரவிகுளம் தேசிய பூங்கா, குண்டலா ஏரி, மாட்டுப்பட்டி அணை, லக்கம் நீர்வீழ்ச்சிகள், சின்னார் வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை இங்குக் காணலாம்.

மூணார்
மூணார்

ஏற்காடு

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடுக்கு குறைந்த செலவில் குடும்பத்துடன் சென்றுவர முடியும்.

படகு சவாரி, அருவிக் குளியல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். குளிர் நிறைந்த இந்த மலைப் பிரதேசம் நவம்பர் டிசம்பர் மாதங்கள் பசுமை பொங்க அழகின் உச்சத்தை எட்டியிருக்கும்.

ஏற்காடு
ஏற்காடு
நவம்பர் மாதம் சுற்றிப்பார்க்க சிறந்த 10 இடங்கள்
ஹனிமூன் போறீங்களா? இந்த ஐந்து கடற்கரையை டிரை பண்ணுங்களேன்! | Travel

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com