வர்க்கலா முதல் வைசாக் வரை; இந்தியாவின் அழகிய கடற்கரைகள் - ட்ரிப்புக்கு தயாரா? Canva
இந்தியா

வர்க்கலா முதல் வைசாக் வரை; இந்தியாவின் அழகிய கடற்கரைகள் - ட்ரிப்புக்கு தயாரா?

இந்த முறை உங்கள் ட்ரிப்பை கீழே நாங்கள் குறிப்பிடும் இடங்களுக்கு போடுங்க. இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் அமைந்திருக்கும் சிறந்த கடற்கரைகளின் தொகுப்பு தான் இந்த பதிவு

Keerthanaa R

சம்மர் தொடங்கிவிட்டது. கத்திரி வெயில் ஸ்டார்ட் ஆவதற்கு முன்பே வேர்வை குளியல் போட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த அதிக வெப்பத்தில் இருந்து கொஞ்ச நாட்கள் விடுபட, சம்மர் வெகேஷனை எஞ்சாய் செய்ய உங்கள் பயணங்களுக்கு பிளான்கள் தொடங்கியிருப்பீர்கள்.

ஆனால், வருஷா வருஷம் அதே ஊட்டி, கொடைக்கானல்னு போய்ட்டு இருக்கணுமா என்கிற உங்கள் கேள்விக்கான பதில் தான் இந்த பதிவு.

இந்த முறை உங்கள் ட்ரிப்பை கீழே நாங்கள் குறிப்பிடும் இடங்களுக்கு போடுங்க. இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் அமைந்திருக்கும் சிறந்த கடற்கரைகளின் தொகுப்பு தான் இந்த பதிவு

வர்க்கலா, கேரளா

கேரளாவில் அமைந்திருக்கும் இந்த அழகிய கடற்கரை சுற்றுலா பயணிகளின், முக்கியமாக இளசுகளின் ஃபேவரட் ஸ்பாட். இந்தியாவில் சன்செட்டை கண்டு ரசிக்க சிறந்த இடங்களில் ஒன்று வர்க்கலா.

இங்கு கடற்கரைக்கு அருகில் ஒரு சிறிய க்ளிஃப் (பாறை) இருக்கிறது. இந்த க்ளிஃபில் நிறைய கஃபேக்கள் இருக்கின்றன. பிடித்தமான உணவை பிடித்தமானவர்களோடு சாப்பிட்டுக்கொண்டே இயற்கையின் அழகை நீங்கள் ரசிக்கலாம்.

சீசன் டைமில் செல்வது ஒரு பக்கம் குதூகலமாக இருந்தாலும், ஆஃப் சீசனில் செல்வது இன்னும் சிறந்தது.

கோகர்ணா, கர்நாடகா

ஒரு பக்கம் அழகிய மலைகள், அதனருகில் பரந்து விரிந்த கடல்கள் என காண்பதற்கு மன அமைதியை கொடுக்கிறது கோகர்ணா. இங்குள்ள கடற்கரைகளுக்கு மலைகளில் டிரெக்கிங் செய்து அடையலாம்.

இங்கு இரவு நேர டிரெக்கிங் மிகவும் ஸ்பெஷல். அப்படி செல்லும்போது ஸ்டார் கேஸிங் செய்யலாம், அதாவது நட்சத்திரங்களை பார்க்கலாம். தவிர கோகர்ணாவிலும் சூரியன் அஸ்தமனமாவதை காண நிறைய சன்செட் பாயிண்ட்கள் உள்ளன.

இதே போல இந்தியாவில் இருக்கும் அழகிய கடற்கரைகள் குறித்து தெரிந்துகொள்ள கீழே உள்ள இந்த வீடியோவை காணுங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?