சத்தீஸ்கர் மாநிலம் ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் 70 வயது முதியவர் ஒருவரை பத்து பேர் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
"மாயக் கல்லை" வைத்து அனைவரையும் செல்வந்தர்களாக்குவதாகக் கூறி ஏமாற்றியதால் இப்படி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொலை செய்யப்பட்ட பாபுலால் யாதவ் என்ற 70 வயது முதியவர் பல மூடநம்பிக்கை சம்பிரதாயங்களைப் பின்தொடர்வதில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று ஜாஞ்ச்கிர் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி உமேஷ் சாஹு கூறியுள்ளார்.
"இந்த கொலையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி தேக்சந்த் ஜெய்ஸ்வால் (49) மற்றும் மேலும் 9 பேர் திங்களன்று கைது செய்யப்பட்டனர்.
லோஹ்ராகோட் கிராமத்தில் வசிக்கும் ஜெய்ஸ்வால், கடந்த ஆண்டு பிற்பகுதியில் 'பரஸ்மணி பத்தர்' எனப்படும் எந்தவொரு இரும்புப் பொருளையும் தங்கமாக மாற்றக்கூடிய மந்திரக் கல் பற்றி அறிந்திருந்திருக்கிறார். பிறகு அந்த கல் குறித்து பாபுலால் யாதவிடம் தெரிவித்திருக்கிறார்.
இருவரும் சேர்ந்து அந்த கல்லைத் திருடியிருக்கிறார்கள். மேலும், அதே கிராமத்தைச் சேர்ந்த 9 பேரையும் சேர்த்துக் கொண்டு, மந்திரக்கல்லை செயல்பட வைப்பதற்கான யாகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
பிறகு அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஒரு குழுவினர் பாபுலால் யாதவை அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மற்றொரு குழு அவரது வீட்டிற்குள் நுழைந்து ரூபாய் 23,000 ரொக்கம் மற்றும் நகைகளைத் திருடியிருக்கிறார்கள்.
மேலும், பாபுலால் யாதவை கொன்று காட்டுக்குள் புதைத்திருக்கிறார்கள். இதில் ஜெய்ஸ்வாலின் பங்கு என்ன என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், முழுமையான விசாரணை முடிந்த பிறகே கூற முடியும் என்றும் அதிகாரி உமேஷ் சாஹு தெரிவித்தார்.
இரும்பை தங்கமாக மாற்றும் மந்திரக் கல் என்று நம்பி, சடங்கு நடத்தியது மட்டுமல்லாமல் 10 பேர் சேர்ந்து ஒரு முதியவரைக் கொலையும் செய்யுமளவிற்கு இந்தியாவில் மூட நம்பிக்கை முடிவுக்கு வராத ஒன்றாக நீடிக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust