9 Villages In India That Stand Out For Unique Reasons Twitter
இந்தியா

பேச்சுலர்கள் கிராமம் To பேய் கிராமம் - இந்தியாவின் தனித்துவமான கிராமங்கள் பற்றி தெரியுமா?

இந்தியாவின் வளர்ச்சிக்கு கிராமங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவில் இருக்கும் தனித்துவமான, சிறந்த கிராமங்களை தற்போது நாம் பார்க்க உள்ளோம்.

Priyadharshini R

"கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு" என்ற காந்தி கூற்று இருக்கிறது. ஒரு கிராமத்தின் வளர்ச்சி தான் நாட்டை நல்ல பாதையில் இட்டு செல்லும்.

அதே போல தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு கிராமங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இந்தியாவின் ஒவ்வொரு கிராமங்களும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும் சில தனித்துவமான கிராமங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி தான் இங்கு தெரிந்துகொள்ள போகிறோம்.

மில்லியன்கர்கள் கிராமம்

பொதுவாக கிராமங்களில் மில்லியன்களில் சம்பாதிக்கும் பணக்காரர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள் என்ற கருத்து நிலவிய நிலையில் அதனை உடைத்து காண்பித்ததுள்ளது மகாராஷ்டிராவின் அகமத்நகர் பகுதியில் உள்ள ஹிவாரே பஜார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையில் சிக்கிய இந்த கிராமம் 1990-க்கு பிறகு அதிக பணக்காரர்கள் உள்ள விவசாய சமூகமாக உயர்ந்துள்ளது. தற்போது ஹிவாரே பஜார் கிராமம் 60 மில்லியனர்களை கொண்ட பணக்கார சமூகமாக உள்ளது, இதற்கு முக்கிய பங்கு வகித்த போபத்ராவ் பவாருக்கு 2020 மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

இந்தியாவில் கடைசி சமஸ்கிருத கிராமம்

ஒரே ஒரு கிராமத்து மக்கள் மட்டும் தொடர்ந்து பண்டைய மொழியான சமஸ்கிருதத்தைப் இன்று வரை பேசி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில் தான் மாத்தூர் என்ற அந்த கிராமம் உள்ளது. இந்த நவீன காலத்திலும் சமஸ்கிருதம் போன்ற பழமையான மொழியை பாதுகாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

பேச்சுலர்கள் கிராமம்

பீகாரின் கைமுர் மலைகளுக்கு அருகில் அமைந்திருக்கிறது பர்வான் காலா என்கிற கிராமம். இங்கு சுமார் 130 ஆண்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர்.

இதுவே இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் திருமணமாகாத ஆண்கள் இருக்கும் கிராமம் ஆகும்.

சுமார் 50 ஆண்டுகளாக இங்கிருக்கும் எந்த ஒரு ஆண்மகனுக்கும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த கிராமத்தை பேச்சுலர்கள் கிராமம் என்று அழைக்கின்றனர்.

இந்த கிராமத்தில் ஒருவர் வசிக்க அடிப்படையாக தேவைப்படும் எந்த வசதிகளுமே இல்லை. தண்ணீர், மின்சாரம், சரியான சாலைகள், தகவல் தொடர்பு வசதிகள் என்று எதுவுமே இல்லை. பள்ளிக்கூடங்களும் அவ்வளவாக இல்லை, இருந்தாலும் ஆசிரியர்கள் இல்லை. ரயில் நிலையங்கள் இங்கு இல்லை

இதனால் இங்குள்ள ஆண்களுக்கு தங்களின் மகள்களை திருமணம் செய்துவைக்க பெற்றோர் அஞ்சுகின்றனர்.

செருப்பு அணியாத கிராமம்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு மிக அருகில் இருக்கிறது வெள்ளகவி என்ற கிராமம்.

வெள்ளகவிக்கு பச்சை நிரம்பிய ஒத்தையடி பாதை வழியாக நுழையும் போது பெரிய மரமொன்று வரவேற்கும். அது தான் ஊரின் எல்லை. அந்த இடத்திலிருந்து ஊர் மக்களும் ஊருக்கு வரும் மற்றவர்களும் தங்கள் செருப்புகளை கழட்டிக்கொள்ள வேண்டும். செருப்பு வைரவருக்கு உகந்தது அல்ல என்கிறார்கள் ஊர் மக்கள்.

மலைக் கிராமமான வெள்ளகவியில் தார் ரோடு கூட கிடையாது, காடுகளிலும், ஊரின் கரடு முரடான பாதைகளிலும் மக்கள் செருப்பு இல்லாமலேயே நடக்கின்றனர்.

பாம்புகளோடு ஒன்றாக வாழும் இந்திய கிராமம்

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழி உள்ளது. ஆனால் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்புகளோடு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் வெறும் 2600 பேர் மட்டுமே வசிப்பதாக கூறப்படுகிறது. குறுகிய பாதைகள், சிறிய வீடுகள், பல வகையான பாம்புகள் என விஷயங்களை கொண்டுள்ளது இந்த கிராமம்.

இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பாம்புகளை தங்கள் வீட்டில் ஒருவராக கருதுகின்றனர். தெய்வமாக வணங்குகின்றனர். இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் பாம்புகள் ஒய்வெடுக்க தனியாக ஒரு மாடம் (அதாவது குழி போன்ற அமைப்பு) உள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் பாம்புகளுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருகின்றனர்.

ஸ்மார்ட் கிராமம்

தற்போது ஆளும் பாஜக அரசு அடிக்கடி சொல்லும் வார்த்தை ஸ்மார்ட் கிராமம், இதற்கு உதாரணமாக திகழ்கின்றது குஜாரத் மாநிலத்தில் உள்ள புன்சாரி கிராமம். இந்த கிராமத்தில் கல்வியில் அதி நவீன வசதி பயன்படுத்தப்படுகிறது.

இந்த கிராமத்தில் அனைத்து மக்களுக்கும் Wi-Fi இணைப்பு உள்ளது. கிராமத்தில், பாதுகாப்பை அதிகரிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பஞ்சாயத்தில் உள்ளூர் கனிம நீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் வடிகால் திட்டங்கள், சுகாதார மையம், வங்கி மற்றும் கட்டணமில்லா புகார் கையாளும் மையங்கள் உள்ளன. இதைப் பார்த்த கென்யா நைரோபி பிரதிநிதிகள் தங்கள் கிராமங்களிலும் இதை நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றனர்.

இந்தியாவின் பாதுகாப்பான கிராமம்

மகாராஷ்டிராவில் உள்ள ஷானி ஷிங்கனாபூர் இந்தியாவின் பாதுகாப்பான கிராமமாக அறியப்படுகிறது

இந்த கிராமத்தில் எந்த வீட்டிற்கும் கதவு இல்லை என கூறப்படுகிறது. இங்கு உள்ள மக்களுக்கு அதிக தெய்வ நம்பிக்கை உள்ளதால் குற்ற விகிதங்கள் குறைந்து இருப்பதாக கருதப்படுகிறது.

கிராமத்தின் நடுவில் இருக்கும் சனிபகவான் தங்கள் கிராமத்தைக் காப்பதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள்.

ஆசியாவின் தூய்மையான கிராமம்

மேகாலயாவின் கிழக்கு காசி மலைப்பகுதியில் உள்ள மாவ்லின்னாங் கிராமம் ஆசியாவிலேயே "தூய்மையான கிராமம்" என்று குறிப்பிடப்படுகிறது.

500 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் உற்பத்தியாகும் கழிவுகள் அனைத்தும் சிறப்புக் கழிவு மேலாண்மை அமைப்பு மூலம் உரமாக்கப்படுகிறது. கிராமத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுவதுடன் பிளாஸ்டிக் பயன்பாடும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பசுமை மற்றும் தூய்மையான கிராமம் விருதுகளை வென்றுள்ளது.

பேய் கிராமம்

குல்தாரா கிராமத்தை பேய் கிராமம் என்கின்றனர் அந்த பகுதியில் வாழும் மக்கள்.

ஜெய்சல்மார் கோட்டைக்கு 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த குல்தாரா கிராமம். மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு கிராமமாக கருதப்படுகிறது குல்தாரா. கிராமத்தில் யாரேனும் தங்க முயற்சித்தால் கூட ஒரு இரவை இங்கு கடப்பது சவால் தான். அமானுஷ்ய சக்திகள் அங்கு தங்க நினைத்த மக்களை விரட்டியடித்ததாக கூற்றுகள் இருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?