Food Delivery Twitter
இந்தியா

சைக்கிளில் Food Delivery; இளைஞருக்கு பைக் வாங்கி கொடுத்த Police - நெகிழ்ச்சி சம்பவம்

Antony Ajay R

சமீபத்தில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடி முடித்தோம். தெருவோர தன்னார்வலர்கள், கட்சியினர் விழாக்களைத் தவிர பொது மக்களிடத்தில் வேறெந்த சிறப்பையும் தொழிலாளர் தினத்தில் காணமுடிவதில்லை. இதனால் தினம் தினம் தொழிலாளர்கள் படும் கஷ்டங்கள் கவனிக்கப்படாமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

ஆனால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உணவு டெலிவரி செய்யும் தொழிலாளி ஒருவர் சைக்கிளில் வேலை செய்து கஷ்டப்பட்டதை கண்ட காவல்துறையினர் அவருக்கு உதவி செய்யும் வண்ணம் பைக் வாங்கிக் கொடுத்துள்ள நிகழ்வு அந்த பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Food Delivery

இந்தூரில் உள்ள விஜய் காவல் நிலையத்தில் வேலை செய்யும் தெஹ்சீப் காசி எனும் காவலர், 22 வயது இளைஞர் ஒருவர் சைக்கிளில் இரவு உணவு டெலிவரி செய்வதைப் பார்த்துள்ளார். பாட்ரோலில் இருந்த அவர் வியர்க்க விருவிருக்கச் சாப்பாட்டு பொட்டலுத்துடன் சிகப்பு டீசர்ட் அணிந்திருந்த இளைஞரிடம் அவர் குறித்த தகவல்களைக் கேட்டுள்ளார்.

அந்த இளைஞர் பெயர் ஹல்தே 22 வயதாகும் அவர் வீட்டில் பொருளாதார நிலை சரியில்லாததால் சைக்கிளில் உணவு டெலிவரி செய்து வருகிறார். அவரிடம் பேசிய காவலர் தெஹ்சீப் அவருக்கு உதவ முடிவு செய்துள்ளார்.

விஜய் நகர் காவல் நிலையத்தில் இருக்கும் சக காவலர்களிடமும் பேசி ஹல்தீபுக்கு இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கிக்கொடுத்துள்ளனர்.

சைக்கிளிலிருந்து பைக்குக்கு மாறியதால் மகிழ்ச்சியடைந்துள்ள ஹல்தீப் இது வரை ஒரு நாளுக்கு 7-8 பார்சல்கள் டெலிவரி செய்ததிலிருந்து இப்போது 15 - 20 பார்சல் வரை டெலிவரி செய்வதாகக் கூறியுள்ளார்.

பைக்குக்கான முன் பணத்தைக் காவலர்கள் கொடுத்துவிட்டாலும் மாத சந்தாவைக் கட்ட ஊக்கத்துடன் தொடர்ந்து உழைத்து வருகிறார் ஹல்தீப்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?