Acid Attack Twitter
இந்தியா

Bengaluru : பெண் மீது ஆசிட் வீச்சு - போலி சாமியார் கைது

Keerthanaa R

தன் காதலை ஏற்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிவிட்டு திருவண்ணாமலையில் சாமியார் வேடம் பூண்டு மறைந்திருந்த குற்றவாளியை கர்நாடகா போலீஸ் கைது செய்துள்ளது. நீண்ட நாட்களாக ஒருதலையாக தான் காதலித்து வந்த பெண் தன் திருமண விருப்பத்தை மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், அந்த பெண்ணின் அலுவலகத்தில் வழிமறித்து தாக்கியதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவித்தன.

Nagesh

துணிகள் தொழிற்சாலையில் வேலை செய்யும் 27 வயது நாகேஷ், அந்த பெண்ணை வெகு நாட்களாக ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். தன்னை திருமனம் செய்துக்கொள்ளுமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சம்பவம் நடப்பதற்கு ஒரு நாளைக்கு முன் நாகேஷ் அந்த பெண்ணிடம் தன் காதலை ஏற்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன பெண் தன் தந்தையுடன் மறுநாள் வேலைக்கு செல்ல, இரவு பணி முடிந்து வீட்டிற்கு கிளம்பும் வேளையில், அவர் வேலை செய்யும் அலுவலகத்திலேயே வழிமறித்து மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அந்த பெண் மறுத்ததால் மறைத்து வைத்திருந்த ஆசிடை அவர் மீது வீசிவிட்டுத் தப்பித்துவிட்டார்.

Acid Attack

வழக்கு பதிவு செய்து, 10 தனிப்படைகளை அமைத்து காமாக்ஷிபாளயா காவல்துறை குற்றவாளியை தேடி வந்தது. 16 நாட்களாக தேடி வந்த நிலையில் திருவண்ணாமலை பகுதியில் ஒரு ஆசிரமத்தில் சாமியார் வேடமிட்டு அவன் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று அங்கு சென்று அவனை கைது செய்தனர்.

முகம், கழுத்து, கை மற்றும் தலை பகுதிகளில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளித்து, அவர் நன்றாக தேர்ச்சி பெற்று வருவதாகவும், இப்போது தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து பொது வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?