பரிதி அதானி News Sense
இந்தியா

பரிதி அதானி : யார் இவர்? அதானி சர்ச்சையில் இவர் பெயர் அடிப்படுவது ஏன்?

யார் இந்த பரிதி அதானி? இவருடைய அப்பா யார்? இவருடைய கல்வி தகுதிகள் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

NewsSense Editorial Team

கடந்த சில வாரங்களாக கௌதம் அதானி மற்றும் அதானி குழும நிறுவனங்கள் தொடர்பான செய்திகள் தினம்தோறும் தலைப்புச் செய்திகளாகி கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் கௌதம் அதானியின் மகன் கரண் அதானி தொடங்கி அதானி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரின் வரலாற்றையும் மக்கள் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில், கெளதம் அதானியின் மருமகள் பரிதி அதானி அவர்களும் அடக்கம்.

யார் இந்த பரிதி அதானி? இவருடைய அப்பா யார்? இவருடைய கல்வி தகுதிகள் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

சிறில் ஷ்ராஃப்:

இந்தியாவின் புகழ்பெற்ற சட்ட நிறுவனமான சிரில் அமர்சந்த் & மங்கள்தாஸ் நிறுவனத்தை நிர்வகித்து வரும் சிரில் ஷ்ராஃப் தான் பரிதி அதானியின் தந்தை. இந்த நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

மும்பையைத் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் சுமார் 750 வழக்குரைஞர்கள் மற்றும் 132 கூட்டாளிகள் பணியாற்றி வருவதாக பல்வேறு வலைதளங்கள் கூறுகின்றன.

இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், சென்னை ஆகிய நகரங்களில் இந்த நிறுவனத்திற்கு கிளைகள் இருக்கின்றன.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி எச் டி எஃப் சி வங்கியின் தலைவர் தீபக் பரேக், கோடக் மகேந்திரா வங்கியின் நிர்வாக இயக்குனர் உதய் கோட்டக், பி சி ஜி கன்சல்டிங் நிறுவனத்தின் தலைவர் ஜனமேஜெய சீன்ஹா ஆகியோர் இந்நிறுவனத்தின் ஆலோசகர்களாக இருக்கிறார்கள்.

சிரில் ஷ்ராஃப் 1982 ஆம் ஆண்டு மும்பை சட்டக் கல்லூரியில் தன்னுடைய பட்டப் படிப்பை நிறைவு செய்துவிட்டு, பார் கவுன்சிலில் உறுப்பினராக சேர்ந்தார். 1983 ஆம் ஆண்டே பம்பாய் உயர் நீதிமன்றத்தில் சாலிசிட்டராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 40 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றும் சிறில் ஷ்ராஃப்க்கு கார்ப்பரேட் விவகாரங்கள், பங்குச்சந்தை, வங்கி, வங்கி திவால் சட்டம், அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் கட்டுமானங்கள், கார்ப்பரேட் நிர்வாகம், நிதித்துறை சார்ந்த நெறிமுறைகள் மற்றும் முறைகேடுகள் என பல பிரிவுகளில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர் என பல்வேறு வலைத்தளங்கள் சொல்கின்றன.

இவர் 40 வயதுக்குள்ளேயே அமர்சந்த் அண்ட் மங்கள்தாஸ் அண்ட் சுரேஷ் ஏ ஷ்ராஃப் & கோ என்கிற சட்ட நிறுவனத்தின் மும்பை இயக்கத்தை கையில் எடுத்து, திறம்பட நிர்வகித்ததாகக் கூறப்படுகிறது. அவருடைய மகள் பரிதி ஷ்ராஃப் விவரத்திற்கு வருவோம்.

பரிதி ஷ்ராஃப்

2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஹெச் ஆர் காலேஜ் ஆப் காமர்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் கல்லூரியில் பொது வணிகம் படித்தவர், 2007 முதல் 2010 ஆம் ஆண்டு வரை அக்கவுண்டிங் அண்ட் பைனான்ஸ் பிரிவில் பிகாம் பட்டப்படிப்பை மும்பை பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்திருக்கிறார்.

2010 முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் இளங்கலை சட்டத்தில் பட்டம் பெற்றுள்ளார் என அவரது லிங்க்ட் இன் பக்கம் சொல்கிறது.

2007 - 2010ஆம் ஆண்டு வரை தி எகனாமிக் டைம்ஸ் மற்றும் சி என் பி சி டிவி 18 செய்தி நிறுவனத்தில் இன்டர்னாக பணியாற்றியுள்ளார் பரிதி அதானி.

2013ஆம் ஆண்டு அமர்சந்த் & மங்கள்தாஸ் & சுரேஷ் ஏ ஷ்ராஃப் & கோ நிறுவனத்தில் அசோசியேட்டாக பணியில் சேர்ந்தவர், மே 2015ல் சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்தில் சீனியர் அசோசியேட்டாகவும், 2018 மே மாதத்தில் முதன்மை அசோசியேட்டாகவும், 2019 ஜூலையில் பார்ட்னராகவும் பதவி உயர்வு பெற்றார்.

தற்போது வரை சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்தில் பார்ட்னராகவே தொடர்கிறார் பரிதி அதானி.

சிரில் அமர்ச்சந்து மங்கள்தாஸ் நிறுவனத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவது, நீண்ட காலம் நடைமுறையில் இருக்க போகும் வணிக ரீதியிலான ஒப்பந்தங்களை வரையறுப்பது போன்ற பணிகளில் அனுபவம் கொண்டவர் என்கிறது சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் வலைதளம்.

அதுபோக நிறுவன இணைப்பு மற்றும் கையகப்படுத்தல், தனியார் ஈக்விட்டி முதலீடுகள், ஜாயிண்ட் வெஞ்சர்ஸ், கார்ப்பரேட் நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளிலும் அனுபவம் இருப்பதாக வலைதளம் கூறுகிறது.

சமீபத்தில் அதானி போர்ஸ் நிறுவனம், கிருஷ்ணபட்டினம் போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 75% பங்குகளை கையகப்படுத்தியது. அதில் பரிதி அதானிக்கு பெரும்பங்கு உண்டு என்று கூறப்படுகிறது.

அதேபோல அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், டோட்டல் எஸ் ஏ நிறுவனத்துடன் ஜாயிண்ட் வெஞ்சர் ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இதிலும் பரிதி அதானிக்கு கணிசமான பங்கு உண்டு என சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவன வலைதளத்தில் கூறப்பட்டிருக்கிறது.

தற்போது பரிதி அதானி சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் சட்ட நிறுவனத்தின் குஜராத் அலுவலகத்தை தலைமையேற்று, வழி நடத்தி வருகிறார்

பரிதி ஷ்ராஃப், கடந்த 2013 ஆம் ஆண்டு கெளதம் அதானியின் மகன் கரன் அதானியை திருமணம் செய்து கொண்டார். தற்போது கரண் அதானி, அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ் இ சி லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும் முதன்மைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?