யோகி ஆதித்யநாத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி வன்முறையை கட்டுப்படுத்த சொன்ன ஜான் - யார் இவர்? Twitter
இந்தியா

யோகி ஆதித்யநாத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி வன்முறையை கட்டுப்படுத்த சொன்ன ஜான் - யார் இவர்?

யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பதவிட்டிருந்த கருத்தும், அதற்கு முதலமைச்சர் அலுவலகம் அளித்த பதிலும் இணையத்தில் வைரலானதை அடுத்து சிலர் ஜான் கேம் என்ற ட்விட்டர் கணக்கு போலியானது என்றும் ஒரு சிலரோ இது உண்மையான கணக்கு தான் என்றும் விவாதித்து வருகின்றனர்.

Priyadharshini R

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள வன்முறையை கட்டுபடுத்த இந்தியாவிலிருந்து யோகி ஆதித்யநாத்தை அங்கு அனுப்பிவைக்க வேண்டும் என ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து இதற்கு பதில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனம் பெற்றுவருகிறது.

பிரான்ஸில் 17 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டத்தை தொடர்ந்து அங்கு கலவரங்கள் வெடித்தன. இன்னும் இந்த வன்முறை முடிவுக்கு வரவில்லை. இந்த விவகாரம் உலகளவில் பேசுபொருளானது.

இந்நிலையில், ட்விட்டர் பயனர் ஒருவரின் பதிவு சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேராசிரியர் என். ஜான் கேம் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து, யோகி ஆதித்யநாத் குறித்து ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

அந்த பதிவில் “பிரான்ஸ் கலவரம் போன்ற வன்முறையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை இந்தியா அங்கு அனுப்ப வேண்டும், அவர் 24 மணி நேரத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ட்வீட் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகம் வரை ரீச்சாகி, இதற்கு பதிலும் அளித்துள்ளனர்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில், "உலகின் எந்தப் பகுதியிலும் கலவரங்கள் வெடிக்கும் போதெல்லாம், சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடையும் போதெல்லாம், யோகி மாடல் மூலம் உத்தரப்பிரதேசத்தில் மகாராஜ் ஜி ஏற்படுத்தியுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கை உலகம் தேடுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பதவிட்டிருந்த கருத்தும், அதற்கு முதலமைச்சர் அலுவலகம் அளித்த பதிலும் இணையத்தில் வைரலானதை அடுத்து சிலர் ஜான் கேம் என்ற ட்விட்டர் கணக்கு போலியானது என்றும் ஒரு சிலரோ இது உண்மையான கணக்கு தான் என்றும் விவாதித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், ”சிலர் போலி கணக்குகள் மூலம் பதிவிடப்படும் ட்வீட்கள் குறித்து மகிழ்ச்சி அடைகின்றனர்” என்று யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதத்தில் ட்வீட் செய்திருந்தார்.

ட்வீட் செய்யப்பட்டிருந்த கணக்கில் பேராசிரியர் என்.ஜான் கேம், தன்னை ஒரு மூத்த இதயநோய் நிபுணர் என்றும் ஜெர்மனியில் வசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த பேராசிரியர் ஜான் கேம்?

ட்விட்டரின் புதிய விதிகளின்படி பணம் கட்டுவதன் மூலம் யார் வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிக்கும் ப்ளூ டிக்கை பெற முடியும். இப்போது இந்த ப்ளூ டிக் பெற்றவர்களின் கணக்கு அதிகாரப்பூர்வ கணக்கா என்று கண்டுபிடிக்க சிரமமாக உள்ளது.

மெட்லைஃப் க்ரைஸிஸ் (ரோஹின் ஃபிரான்ஸிஸ்) என்ற பயனர் வெளியிட்டுள்ள ட்வீட்டும் வைரலாகி வருகிறது. மார்ச் 10, 2023ல் இந்த ட்வீட்களை அவர் பதிவிட்டுள்ளார். அதில், "ஜான் கேம் என்று கூறிக்கொள்ளும் ட்விட்டர் கணக்கு பழைய விதிகளின்படி அங்கீகரிக்கப்படவில்லை. புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பணம் செலுத்தியே ப்ளூ டிக் பெறப்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் கணக்கு லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ இதயவியல் பேராசிரியரான ஜான் கேம் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறது" என்று பயனர் கூறியிருக்கிறார்.

இந்தப் பெயரை இணையத்தில் தேடி பார்த்தால் இங்கிலாந்து செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையின் இணையதளத்திற்குள் சென்று அங்கு பேராசிரியர் ஜான் கேம் இதயநோய் நிபுணராக உள்ளார் என்ற தகவல் கிடைத்தது.

ஆனாலும் இணையதளத்தில் உள்ள அவரது படத்திற்கும் ட்விட்டர் கணக்கில் உள்ள புகைப்படத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. ஆக இந்த கணக்கு உண்மையானதா போலியானதா என்று இன்னும் சரிவர அறியப்படவில்லை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?