சிறுவனிடம் தன்னை நாக்கில் முத்தமிடச் சொல்லி புத்த மத தலைவர் தலாய் லாமா கேட்டது சர்ச்சையான நிலையில், அச்சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினரிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
உலக புகழ் பெற்ற புத்த மதத்தலைவர் தலாய் லாமா. 1949இல் சீனா கம்யூனிச நாடாக மாறியது. அப்போதிலிருந்து, திபெத்தியர்கள் தனி நாடாக மாற முயற்சி செய்தனர்.
அதன் விளைவாக தலாய் லாமா இந்தியாவிற்குத் தனது ஆதரவாளர்களோடு வந்தார். தற்போது ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் தற்போது வசித்து வருகிறார்.
சமீபத்தில், ஒரு 8 வயது மங்கோலிய சிறுவனை புத்த மதத்தின் தலைவராக அறிவித்தார் தலாய் லாமா. இதனால் சீனா வெகுண்டெழுந்தது சர்ச்சையானது. அந்த சர்ச்சை முடிவதற்குள் ஒரு சிறுவனிடம் தலாய் லாமா தன் நாக்கில் முத்தமிடச் சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு சிறுவன் தலாய் லாமாவிடம் தன்னை ஒரு முறை அரவணைக்கும் படி அவரிடம் கேட்கிறான்.
அப்போது சிறுவனை தன்னிடம் அழைக்கும் தலாய் லாமா அவனிடம் கொஞ்சி விளையாடுகிறார்.
முதலில் அச்சிறுவனை அருகில் அழைத்து உதட்டோடு உதடு முத்தமிட்டவர், தொடர்ந்து அவனிடம், தனது நாக்கை அவனது நாக்கால் தொடும்படி அவர் கூறுகிறார்.
சிரித்துக்கொண்டே தயங்கும் சிறுவனை அருகில் அழைத்து அவர் செய்த செயல், பார்ப்பவர்களை முகம் சுழிக்கச் செய்துள்ளது. ஒரு மதத்தின் தலைவராக இருப்பவர் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டது கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
இணையத்தில் அந்த வீடியோ பரவி பலரும் விமர்சித்ததையடுத்து தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார் தலாய் லாமா.
அவரது வார்த்தைகள் அச்சிறுவன் மற்றும், அவனது குடும்பத்தாரின் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கோருவதாக தலாய் லாமாவின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது.
அந்த பதிவில், ”தலாய் லாமா தன்னை சந்திக்க வருபவர்களிடம், ’வெகுளித்தனமாக’ இப்படி விளையாடுவது சகஜம், பொது இடங்களானாலும், கேமராக்கள் இருந்தாலும் அவர் அப்படி விளையாடுவார். எனினும் தனது இந்த செயலுக்காக வருந்துகிறார்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் வீடியோவை பார்த்த பலரும், “அவரது வார்த்தைகள் புண்படுத்தவில்லை, அவரது செயல்கள் தான் புண்படுத்துகிறது” என்று கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust