"ரூபாய் நோட்டுகளில் இயேசு, அல்லாஹ் படங்களையும் சேர்க்க வேண்டும்" - கெஜ்ரிவாலுக்கு பதிலடி Twitter
இந்தியா

"ரூபாய் நோட்டுகளில் இயேசு, அல்லாஹ் படங்களையும் சேர்க்க வேண்டும்" - கெஜ்ரிவாலுக்கு பதிலடி

Antony Ajay R

இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்திப்படத்துக்கு பதிலாக மற்ற தலைவர்கள் படத்தையும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே வைக்கப்பட்டு வருகிறது.

கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாத்மா காந்தி நம் நாட்டின் தேசத் தந்தையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரது முகம் ரூபாய் நோட்டுகளில் பொறிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்க வேண்டும் எனக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை.

அதே கோரிக்கையை மீண்டும் சில நாட்களுக்கு முன்னர் முன்வைத்தது இந்து மகாசபை.

நேதாஜி கோரிக்கையைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால் ரூபாய் நோட்டுகளின் ஒரு பக்கம் காந்தியும் மறுபக்கம் லெட்சுமி மற்றும் விநாயகரின் படங்களும் இடம் பெற்றால் நாடு செழிப்பாக இருக்கும் என்றும், இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதப்போவதாகவும் கூறினார்.

கெஜ்ரிவாலின் இந்த பேச்சு பல தரப்பிலிருந்து விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் அனீஸ் கெஜ்ரிவாலின் பேச்சு அவரது வாக்கு வங்கியை மையப்படுத்தியது என்று விமர்சித்துள்ளார்.

"லெட்சுமி மற்றும் விநாயகரால் நாட்டை செழிப்பாக்க முடிந்தால் நாம் இன்னும் செழிப்பாவதை உறுதி செய்ய இயேசு, அல்லாஹ், புத்தர் மற்றும் மகாவீரர் படங்களையும் ரூபாய் தாளில் அச்சிட வேண்டும்" என அனீஸ் கூறினார்.

அதேப் போல காங்கிரஸ் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர், "பாஜகவின் பி டீம் தான் அரவிந்த் கெஜ்ரிவால். அது அவருடைய வாக்கு வங்கி அரசியல். "அவர் பாகிஸ்தானுக்கு சென்றால் நானும் பாகிஸ்தானியன் எனவே எனக்கு வாக்களியுங்கள் என்று கூட சொல்வார்"" என விமர்சித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?